அமெரிக்க நீதித்துறையால் பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான 30 லட்சம் ஆவணங்கள் வெளியீடு!

பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான சுமார் 30 லட்சம் ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் நிர்வாணப் புகைப்படங்கள் சரியாக மறைக்கப்படாமல் (Redaction) வெளியானதால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இதனால், சுமார் 100-க்கும் மேற்பட்ட தப்பிப்பிழைத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்களது சட்டத்தரணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி பிரிட்டானி ஹென்டர்சன் மற்றும் பிராட் எட்வர்ட்ஸ் ஆகியோர், “அமெரிக்க […]

கடாபியின் மகன் சயிப் அல்-இஸ்லாம் சுட்டுக் கொலை!

லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி முஅம்மர் கடாபியின் மகனும், அவரது அரசியல் வாரிசாகக் கருதப்பட்டவருமான சயிப் அல்-இஸ்லாம் கடாபி (Saif al-Islam Gaddafi) சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 53 வயதான அவரின் மரணத்தை அவரது அரசியல் குழு உறுதிப்படுத்தியுள்ளதாக லிபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லிபியாவின் தலைநகர் திரிப்போலியிலிருந்து சுமார் 136 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஜின்டான் (Zintan) நகரிலுள்ள அவரது இல்லத்தில், முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட கமாண்டோ குழுவினர் தாக்குதல் நடத்தியதாக அவரது […]

சுதந்திர தின கரிநாள்; மக்களை எப்போதும் ஏமாற்றும் வேலை -அர்ச்சுனா எம்.பி

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற தமிழ் அரசியல் வாதிகள் மக்களை எப்போதும் ஏமாற்றும் வேலையையே செய்கின்றனர்.அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நடக்கமாட்டேன் என நாடாளுமன்றத்தில் சத்திப்பிரமாணம் செய்து கொண்டு சுதந்திர தினத்தை எப்படி கரி நாளாக கருத முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றில் நடந்த அரசியல் தொடர்பான செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினருக்கான அனைத்து சலுகைகளையும் எடுத்துக் கொண்டு அரசியலமைப்புக்கு விரோதமாக எவ்வாறு அவரால் […]

கட்சிக்குள் ஏற்படுகின்ற சிறுசிறு முரண்பாடுகளுக்காக பதவி நீக்கங்கள் செய்வது அழகில்லை

இன்றைய காலகட்டத்தில் கட்சிக்குள் ஏற்படுகின்ற சிறுசிறு முரண்பாடுகளை வைத்துக்கொண்டு கட்சியில் பதவி நீக்கம் செய்வது அகற்றுவது என்பது கட்சிக்கு பாதிப்பனை ஏற்படுத்தும் செயற்பாடாக இருக்கின்றது என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சிறீதரன் நீக்கப்பட்டு சாணக்கியன் நியமிக்கப்பட்டமை தொடர்பில் இதன்போது சிறீநேசன் தனது அதிருப்தியை வெளியிட்டார். மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு […]

மட்டக்களப்பு நகரை நோக்கி கரிநாள் போராட்டம்

இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி மட்டக்களப்பு- கல்லடிப்பாலத்திற்கு அருகிலிருந்து போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. அங்கு ஆரம்பமான போராட்டம் தற்போது திருகோணமலை வீதியூடாக மட்டக்களப்பு நகரத்திற்கு சென்று கொண்டு இருக்கின்றது. இந்தப் பேரணியிலே கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டப்பட்டவர்களின் உறவுகள்,அரசியல் பிரமுகர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

சாந்திபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் மாதா சிலை?

மன்னார் சாந்திபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த மாதம் தனி நபர் ஒருவரால் எந்த ஒரு அனுமதியும் இன்றி மாதா சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாந்திபுர விளையாட்டு கழகத்தினால் குறித்த மைதானத்தில் சிலை வைப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக எழுத்து மூலம், முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நகரசபை தலைவர் குறித்த விளையாட்டு மைதானத்துக்கு முன்பு தனிநபர் ஒருவருக்கு சொந்தமான காணியில் சிலை மாற்றி வைக்கப்பட்டதுடன், உரிய அனுமதி கிடைத்தால் மாத்திரம் சிலை வைக்க […]

கிளிநொச்சி கரிநாள் போராட்டத்தில் அமைதியின்மை

கிளிநொச்சியில் தற்போது இடம்பெற்று வரும் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கரிநாள் போராட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் அமைந்துள்ள திறன்விருத்தி நிலையத்தில் மூவின மக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இதன்போது, சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளிட்டோர் இணைந்து நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியும் அப்பகுதியில் இடம்பெற்ற நிலையில், அங்கு இரு சாராருக்கும் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது, சம்பவ இடத்தில் […]

78வது சுதந்திர தினம்; யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி

இலங்கையின் 78வது சுதந்திர தினம் புதன்கிழமை (04) கொண்டாடப்பட்ட நிலையில் யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது. ஸ்ரீ லங்கா அரசின் 78 வது சுதந்திர தினம் தமிழ் மக்களின் கரிநாள் என்பதை அரசாங்கத்திற்கு கூறும் முகமாக இவ்வாறு கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்; அறிக்கை கோர நீதிமன்றம் உத்தரவு

அண்மையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட, 300 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் தொகையை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை கோருமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. 11 மீனவர்களையும், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 263 கிலோ கிராம் போதைப்பொருளையும், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பொலிஸார் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். […]

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு 10 ஆண்டு சிறை

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 2 ஊழல் வழக்குகளில் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. டாக்காவில் உள்ள பூர்பாச்சல் நியூ டவுன் அரசுத் திட்டத்தின் கீழ் மனைகள் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான ஊழல் வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை ஒடுக்கியபோது ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்பு குற்றங்களுக்காக பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் […]