தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்திய ஆர்ப்பாட்டம்; தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்

இலங்கையின் 78ஆவது சுதந்திர நாளை தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி இன்று புதன்கிழமை (04) கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக அமைப்புக்கள்,தமிழ் அரசியல் பிரமுகர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியானது கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் இருந்து ஆரம்பித்து, பசுமைப்பூங்கா வரையில் இடம்பெற்றது. இவ்வார்ப்பட்டப் பேரணியில் பங்குபற்றியோர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி என்பவற்றைக் […]

சம்மாந்துறையில் தொழுநோய் விழிப்புணர்வு வீதி நாடகம்

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிற்குட்பட்ட ஹிஜ்ரா சந்தை பகுதியில், பொதுமக்களிடையே தொழுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விசேட வீதி நாடகமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை(03) அரங்கேற்றப்பட்டது சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நௌசாத் மற்றும் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஐ. எல் ஜலால்தீன், மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம். லாபீர், பொது சுகாதார பரிசோதகர்கள், பொது சுகாதார மருத்துவ மாதுக்கள் ஆகியோரின் நேரடிப் பிரசன்னத்துடன் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. […]

பொருளாதார ரீதியாக வலுவான புதிய இலங்கையை நாம் கட்டியெழுப்ப வேண்டும் – ஜனாதிபதி

நாட்டின் மனித வளத்தைப் பயன்படுத்தி, வேறுபாடுகளைப் புறந்தள்ளி, பொருளாதார ரீதியாக வலுவான புதிய இலங்கையை நாம் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதற்காக நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தற்போது நடைபெற்று வரும் இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே […]

ஹெரோயினுடன் வௌிநாட்டவர் உட்பட இருவர் கைது

3 கிலோகிராம் 18 கிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரும், அதனை கடத்துவதற்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (03) இரவு களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரிபத்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைத்தியசாலை வீதி பகுதியில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிட்ட போது 3 கிலோகிராம் 18 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதாகியுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து ஒரு கைத்தொலைபேசியும் அவர் […]

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளின் தாய்மார்கள் சுதந்திர தினத்தை கரி நாள் என்றே நினைவு கூருகிறோம்!

காலனித்துவ முடிவில் ஏற்பட்ட அரசியலமைப்பு தோல்வியை இலங்கை அரசு சுதந்திர தினமாகக் கொண்டாடும் இந்த நாளை, காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் கரி நாள் என நினைவுகூருகிறோம் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர். சுதந்திரம் எங்களுக்கு கிடைக்கும் நாள், எங்கள் குழந்தைகளின் உண்மை வெளிவரும் நாளே. இது சுதந்திர தினம் அல்ல. இது எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்ட கரி நாள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இன்றைய தினம் (4) […]

ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்த அமைதிப் பேச்சு ஆரம்பம்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இரண்டாம் கட்ட முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகர் அபுதாபியில் இன்று 04 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. இப்பேச்சுவார்த்தை நாளை 05 ஆம் திகதியும் நடைபெறும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் டெலிகிராம் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உக்ரைன் பேச்சுவார்த்தை குழுவிடமிருந்து எனக்கு அறிக்கை கிடைத்துள்ளது. இப்போருக்கு உண்மையாகவும், கௌரவமாகவும் தீர்வு காணும் நோக்கில் ஆக்கபூா்வமான பேச்சுவார்த்தைகளில் […]

எலோன் மஸ்க்கின் Grok குறித்த குற்றச்சாட்டுக்கள்; விசாரணை ஆரம்பம்

ஈலோன் மஸ்க்கின் ‘xAI’ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘Grok’ எனும் செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருள், சிறுவர்களின் ஆபாசப் படங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் தகவல் ஆணையாளர் அலுவலகம் (ICO) முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளது. ‘X’ (முன்னாள் ட்விட்டர்) தளத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்பம், தனிநபர்களின் அனுமதியின்றி அவர்களின் அந்தரங்கப் படங்களை திரிபுபடுத்தி ஆபாசமாக மாற்ற அனுமதிப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக பிரித்தானியாவின் தகவல் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “Grok […]

இந்தியாவிலிருந்து புனித தாதுக்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள தேவனிமோரி தொல்பொருள் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட புனித தாதுக்கள் கொழும்பு கங்காராம விகாரைக்கு இன்று புதன்கிழமை (04) கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த புனித தாதுக்கள் இன்று முதல் 11 ஆம் திகதி வரை பொதுமக்களின் வழிபாட்டிற்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆன்மீக மற்றும் கலாச்சார பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த புனித தாதுக்களுடன் குஜராத் மாநில ஆளுநர் ஸ்ரீ ஆச்சார்யா தேவ்வ்ரத் மற்றும் குஜராத் துணை முதலமைச்சர் […]

நாடளாவிய ரீதியில் பட்டதாரிகளை ஆசிரிய சேவையில் இணைப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் பிப்ரவரி 20, முதல் ஏற்றுக்கொள்ளப்படும் மற்றும் விண்ணப்பங்களுக்கான கடைசி திகதி மார்ச் 05, என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தகுதியான ஆண் மற்றும் பெண் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. […]

யாழ்.சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள காணிகளில் இராணுவத்தால் பனைகள் அழிப்பு

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள காணிகளில் இராணுவம் விவசாயம் செய்வதற்காக தனியார் காணிகளில் உள்ள பனை மரங்களை தறித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள மக்களின் விவசாய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ் . மாவட்ட செயலர் ஆகியோருக்கு மாவட்ட கட்டளை தளபதி உறுதி அளித்துள்ள நிலையில் இந்த சம்பவம் நடைபெறுகின்றது. இது தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் கருத்து […]