புதிய தவிசாளர் நியமனம்

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி சிந்தக்க ஹேவா பதிரண தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று (02) நடைபெற்ற வாக்கெடுப்பின் போதே அவர் குறித்த பிரதேச சபையின் தவிசாளராக தெரிவாகியுள்ளார். வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும் கிடைத்துள்ளன. இதன்படி, ஒரு மேலதிக வாக்கினால் வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. வெலிகம பிரதேச சபையின் தலைவராகப் பணியாற்றிய லசந்த விக்ரமசேகர கடந்த ஒக்டோபர் […]

கனடாவில் சட்டம் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுகின்றது!

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் மத்திய அரசின் படைகளால், இரண்டு குடிமக்கள் கொல்லப்பட்டது குறித்து கனடா பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். “கனடா மினசோட்டா அல்ல” அமெரிக்காவில் நடக்கும் விடயங்களுக்கு தான் தீர்ப்பு வழங்க விரும்பவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் “கனடா மினசோட்டா அல்ல” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். கனடாவில் குடியேற்ற விதிகளை அமுல்படுத்தும் போது சட்டம் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு கனடா […]

நூற்றுக்கணக்கான மெக்சிகோ நாட்டுத் தொழிலாளர்கள் கியூபெக்கில் நிர்க்கதி?

கியூபெக் மாகாணத்தில் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான மெக்சிகோ நாட்டுத் தொழிலாளர்கள், தங்களது பணி அனுமதிப்பத்திரத்தை (Work Permit) புதுப்பிப்பதில் ஏற்பட்டுள்ள கடும் தாமதம் காரணமாக வேலையிழந்து நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பணி அனுமதிப்பத்திரம் கையில் இல்லாததால், தொழில்தருநர்கள் இந்த ஊழியர்களுக்கு சட்டப்படி ஊதியம் வழங்க முடிவதில்லை. இதனால் தொழிலாளர்கள் கடந்த பல மாதங்களாக வருமானமின்றித் தவிக்கின்றனர். அனுமதிப்பத்திரம் காலாவதியானதும், கியூபெக் அரசின் இலவச மருத்துவக் காப்பீடும் (RAMQ) ரத்தாகும் நிலை காணப்படுகின்றது. இதனால் கடும் குளிர்காலத்தில் நோய்வாய்ப்பட்டால் […]

அமெரிக்காவின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து மொன்ட்ரியல் நகரில் போராட்டம்

அமெரிக்காவின் குடியேற்ற அமலாக்கத் துறை (ICE) நடத்தி வரும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும், அதற்கு மறைமுகமாக உதவும் கனேடிய நிறுவனங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மொன்ட்ரியல் நகரில் போராட்டம் நடைபெற்றது. அமெரிக்காவின் மினியாபோலிஸ் (Minneapolis) நகரில் அண்மையில் பெடரல் ஏஜென்ட்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு அமெரிக்கக் குடிமக்களின் மரணம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நீதி கோரியும், டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசின் குடியேற்றக் கொள்கைகளை எதிர்த்தும் மொன்ட்ரியலில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பாக மக்கள் […]

இந்திய இறக்குமதிக்கான வரியை குறைத்தார் ட்ரம்ப்

பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தியப் பொருட்கள் மீதான பரஸ்பர வரியை அமெரிக்கா உடனடியாக 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைத்துள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு கடந்த ஓர் ஆண்டுகாலமாக சுமுகமானதாக அமையவில்லை. வரி விதிப்பு, வர்த்தக உறவு என பல்வேறு காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளன. இந்த சூழலில் நேற்று திங்கள் கிழமை இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். […]

வேலைவாய்ப்பு மோசடிகளைத் தடுக்க புதிய வியூகம்

சமூக வலைதளங்கள் மற்றும் ஏனைய வழிகள் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்போர், ஆள் கடத்தல் மற்றும் பல்வேறு மோசடிகளில் சிக்குவது அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ஆள் கடத்தலுக்கு எதிரான சட்டம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டம் மற்றும் விசாரணைகள் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு வழங்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க அந்தப் பணியகம் தீர்மானித்துள்ளது. இதன் முதற்கட்ட வேலைத்திட்டம் அண்மையில் அனுராதபுரம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக […]

மெனிங் சந்தை டிஜிட்டல் மயமாகிறது

பேலியகொடை மெனிங் பொதுச் சந்தையின் அன்றாட நிதி கொடுக்கல் வாங்கல்களை மிகவும் முறைப்படுத்தும் நோக்கில், புதிய இணையவழி (Online) கொடுப்பனவு முறைமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய முறைமை, நேற்று (02) முற்பகல் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர ஆகியோரின் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து […]

யாழ்.மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் உலக ஈர நில தினம் அனுஷ்டிப்பு

ஈர நிலங்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் சூழலியல் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் உலக ஈர நில தின நிகழ்வு நேற்று (02) அரியாலையில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில், உலக ஈர நில தினம் யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அரியாலை கிழக்கு ஈரநில பிரதேசத்தில் இன்று காலை 9 மணிக்கு அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் லோ.கி.ஆனந் தலைமையில் […]

நாளை “கரிநாள்” போராட்டங்களை நடத்த ஏற்பாடு

நாளை 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. அந்த நாளை “கரி நாளாக” அனுஷ்டிக்குமாறு அனைத்து தமிழ் பேசுகின்ற மக்களையும் அழைப்பு விடுப்பதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் அ.அபிஷேக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமும் இணைந்து இந்த கறுப்பு நாள் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். அந்த வகையில் 4ஆம் திகதி வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் காலை 10 […]

400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய, குடியிருப்பு நிலங்கள் கிவுல் ஓயா திட்டத்தினால் நீரில் மூழ்கும்!

கிவுல் ஓயா திட்டத்தினால் பாரம்பரிய கிராமங்களின் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் முழுமையாக நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான சமூக, நில உரிமை மற்றும் பண்பாட்டு பாதிப்புகள் குறித்து முன்தினம் இடம்பெற்ற சமூக மட்ட விழிப்புணர்வின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த […]