உலகம் தழுவிய ரீதியில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் – சட்டத்தரணி ஜோதிலிங்கம்

அரசியல் கைதிகளின் விவகாரத்தை அடையாள ரீதியாக செய்யாமல், உலகம் தழுவிய ரீதியில் செய்ய வேண்டும். ஏனெனில் தேசிய இனப் பிரச்சினையை என்பது சாராம்சத்தில் உள்நாட்டு பிரச்சினை அல்ல. இதுவொரு சர்வதேச பிரச்சினை என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார். நேற்று(31.01.2026) மாலை யாழில் நடைபெற்ற “நீதிக்கான சாட்சி” என்ற நூதன முறையிலான போராட்டத்தில் கலந்துகொண்டு நீதிக்கான சாட்சி உரைக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,அரசியல் கைதிகளின் போல சொந்த நலனுக்காக சிறைகளுக்குள் […]

புதிய கல்வி சீர்திருத்தம்; கல்வி அமைச்சின் செயலாளர் குற்றவாளியாக்கப்படுவாரா?

புதிய கல்வி சீர்திருத்தங்களின் போது தரம் 6 முன்மாதிரி புத்தகம் ஒன்றில் ஏற்பட்ட தவறுக்கு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவாவை சந்தேக நபராகப் பெயரிட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நுகேகொடை நீதவான் ருவந்திகா மாரசிங்க குற்றவியல் விசாரணைகள் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார். புதிய கல்வி மறுசீரமைப்புக் கொள்கையின் கீழ், ஆறாம் தரத்திற்காக தயாரிக்கப்பட்ட முன்மாதிரி புத்தகம் ஒன்றில், தன்பால் பாலியல் தொடர்பாளர்களைத் தேடும் இணையதளத்தின் பெயர் ஒன்று அச்சிடப்பட்டிருந்தமை தொடர்பிலே இந்த உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த இணையதளத்தின் முகவரி […]

சீதையம்மன் ஆலயத்தில் இந்திய அமைச்சர் வழிபாடு

வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா, சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் இந்தியாவின் பீகார் மாநில அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஸ்ரீ நாராயண பிரசாத் உள்ளிட்ட குழுவினர் நேற்று (31) சனிக்கிழமை வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதன்போது குறித்த ஆலயத்திற்கு வருகை தந்த குழுவினரை, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசிலையும் வழங்கிக் கௌரவித்தார். இந்த விஜயம் தொடர்பாகப் பீகார் மாநில அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஸ்ரீ நாராயண பிரசாத் கருத்துத் தெரிவிக்கையில்: “இராமாயண யாத்திரை […]

நாட்டில் பொது அவசரகால நிலை நீடிப்பு!

நாட்டில் பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 28 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிலவிய அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி பொது பாதுகாப்பு மற்றும் நாட்டின் நல்வாழ்வைப் பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைக்கு அவசியமான […]

கல்குளம் பொலிஸ் வீதித் தடைக்கு அருகில் விபத்து – ஐவர் காயம்

அநுராதபுரம் கல்குளம் பொலிஸ் வீதித் தடைக்கு அருகில் இன்று (01) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் திறப்பனை பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞர்கள் நால்வர் பயணித்த காரும், களனியிலிருந்து அநுராதபுரத்திற்கு வழிபாட்டிற்காகச் ஒரே குடும்பத்தினர் பயணித்த கார் ஒன்றுமே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. […]

பெண்களை இரவுப் பணிகளில் ஈடுபடுத்த புதிய அனுமதி!

துப்புரவுப் பணியாளர்களாகவும், உணவகங்களில் உணவு பரிமாறும் பணிகளுக்காகவும் பெண்களை இரவு நேரத்தில் பணிக்கு அமர்த்துவதற்கான அனுமதியை வழங்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவினால் கடைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களைப் பெண் கழிவறைப் பணியாளர்களாக மாலை 6.00 மணிக்குப் பின்னர் பணியில் ஈடுபடுத்த முடியும் எனச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தச் […]

எரிபொருள் விலையை சினோபெக் நிறுவனமும் குறைத்தது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சனிக்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியமைத்துள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இந்த விலை மாற்றத்திற்கு நிகராக, சினோபெக் (Sinopec) நிறுவனமும் எரிபொருள் விலையை மாற்றியமைப்பதாக அறிவித்துள்ளது. இதன்படி, சினோபெக் நிறுவனத்திலும் 92 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலை தலா 2 ரூபாயால் குறைக்கப்பட்டு, முறையே 292 ரூபாய் மற்றும் 277 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பெட்ரோல் 95 ஒக்டேன் […]

இந்திய அரசு இலங்கைக்கு நிதியுதவி

2026 பட்ஜெட் மூலம் இலங்கைக்கு மொத்தம் 4 பில்லியன் இந்திய ரூபாய் உதவியை இந்திய அரசு முன்மொழிந்துள்ளது. இந்தியாவின் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) காலை 11 மணிக்கு சமர்ப்பித்து உரையாற்றினார். இதன் மூலம் தொடர்ச்சியாக 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்திற்கான முன்னுரிமைகளை வகுத்து, உலகளாவிய நிலையற்ற சூழலுக்கு மத்தியில் […]

துப்பாக்கி சூட்டில் 15 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தானின் தென்மேற்கே அமைந்த பெரிய மாகாணமான பலுசிஸ்தான் மக்கள் தங்களுக்கு பாகிஸ்தான் அரசிடம் இருந்து விடுதலை வேண்டும் என போராடி வருகின்றனர். மேலும், பலுச் விடுதலைப்படை அமைப்பை சேர்ந்தவர்கள் வெடிகுண்டு தாக்குதல் உள்ளிட்ட பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான்களின் கிளை அமைப்பான தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பை சேர்ந்தவர்கள் பலுசிஸ்தானில் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் பலுசிஸ்தானில் தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. […]

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் வாகனம் மோதியதில் இருவர் காயம்

யாழ்ப்பாணம் மீசாலை வடக்கு பகுதியில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் பயணித்த வேன் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில், மோட்டார் சைக்கிளில் இருந்த இருவர் காயமடைந்து சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரின் வேனின் சாரதி கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மீசாலை வடக்கு சியாமளா சந்தி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது வேனில் பயணித்தபோது நேற்று சனிக்கிழமை (31) அன்று விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் […]