வடக்கு, கிழக்கில் மழை 04ஆம் திகதி வரை தொடர வாய்ப்பு – பேராசிரியர் பிரதீபராஜா

இலங்கையின் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் தொடரும் வாய்ப்புள்ளது என யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் கிடைத்து வரும் மழை மத்திய, வட மத்திய, வட மேல், ஊவா, சபரகமுவா மற்றும் மேல் மாகாணங்களிலும் எதிர்வரும் 04ஆம் திகதி […]
“திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறிவியல் சார்ந்த கருத்துகளை தற்காலத்தோடு ஒப்பிடும் போது வள்ளுவரின் தீர்க்கதரிசனம் எம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது”

நவீன அறிவியல் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் கண்டுபிடித்த மூன்றாம் விதியை, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தனது திருக்குறளின் ஊடாக உலகுக்குச் சொன்னவர் தெய்வப்புலவர் திருவள்ளுவர். மனித குலத்திற்கு முற்றிலும் பொருந்தக்கூடிய வாழ்வியல் நெறிகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு பொக்கிஷமாகத் திருக்குறள் விளங்குகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். மொறிசியஸ் சர்வதேச திருக்குறள் மன்றம், வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில், ‘மனித மாண்பு’ எனும் தொனிப்பொருளிலான […]
புத்த பெருமானின் உடல்சார் புனிதச் சின்னங்கள் கங்காராமய விகாரையில்…

இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புத்த பெருமானின் உடல்சார் புனிதச் சின்னங்கள் பெப்ரவரி 04ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை கங்காராமய விகாரையில் பொதுமக்களின் வழிபாட்டிற்காக வைக்கப்படவுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த இடமான குஜராத் பிரதேசத்தில் 60களில் கண்டெடுக்கப்பட்டதும், இதுவரை இந்தியாவிற்கு வெளியே கொண்டு செல்லப்படாததுமான புத்த பெருமானின் இந்த உடல்சார் புனிதச் சின்னங்களை நாட்டு மக்கள் வழிபடுவதற்காக இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் […]
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சாகும் வரை உண்ணாவிரதம்; இறுதி நபரும் வைத்தியசாலையில்!

கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகச் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கடைசிப் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தரும் சற்று முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய, சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த ஆறு பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று 7-வது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், தமது பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு நாளைய தினத்திற்கு (02) முன்னர் ஜனாதிபதி சந்தர்ப்பம் வழங்காத காரணத்தினால், நாளை கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் பாரிய போராட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக […]
பஸ் கட்டணம் குறையாது?
எரிபொருள் விலையில் சிறிய வீழ்ச்சி காணப்பட்ட போதிலும், எதிர்காலத்தில் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க நேரிடும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். எதிர்வரும் ஜூலை மாதத்திற்கு முன்னதாகப் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதாக அவர் கூறினார். தற்காலத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பேருந்துகளை இயக்குவது சிரமமாகி உள்ளதாகச் சுட்டிக்காட்டிய […]
இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி; இந்தியா நியூசிலாந்தை வென்றது

நியூசிலாந்துக்கெதிரான ஐந்தாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியை இந்தியா வென்றது. ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளையும் வென்று தொடரைக் கைப்பற்றுவதை இந்தியா ஏற்கெனவே உறுதி செய்ததோடு, நான்காவது போட்டியை நியூசிலாந்து வென்ற நிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் சூரியகுமார் யாதவ் தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, இஷன் கிஷனின் 103 (43), சூரியகுமாரின் 63 (30), ஹர்திக் […]
18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் கர்ப்பமடைவது அதிகரிப்பு

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவு அறிக்கையின்படி, 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் கர்ப்பமடைவது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையின்படி 2025 ஆம் ஆண்டில் 79 பேர், 2024 இல் 53 பேர் கர்ப்பமானதாக தெரிவிக்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட திருமணங்கள் 9 பதிவாகியுள்ளதுடன் இது 2024 உடன் ஒப்பிடும்போது சிறுவர் திருமணங்களில் குறைவு எனவும் 2024 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட […]
திஸ்ஸ விகாரைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம், தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (01) அன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கொட்டும் மழைக்கு மத்தியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பௌர்ணமி தினத்துக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் சனிக்கிழமை (31) மாலை ஆரம்பித்த போராட்டம் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் முன்னெடுக்கப்பட்டது.
37 ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்படும் கந்தளாய் ஜனசக்தி வீதி: மக்கள் விசனம்

கந்தளாய் – பேராறு பகுதியில் அமைந்துள்ள ஜனசக்தி வீதி கடந்த 37 ஆண்டுகளுக்கும் மேலாக புனரமைக்கப்படாமல் அதிகாரிகளாலும், அரசியல்வாதிகளாலும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதன்படி, சுமார் 37 வருடங்களாக இந்த வீதி எந்தவிதமான மேம்பாட்டுப் பணிகளுமின்றி சிதைவுற்று காணப்படுகின்றது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் மார்க்கன் சந்திக்கு பின்னால் அமைந்துள்ள இந்த வீதியை, சுமார் 30 முதல் 40 குடும்பங்கள் தமது அன்றாடத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, பாடசாலை மாணவர்கள், […]
கற்குழி சந்தியில் உளவு இயந்திரம் மோதி பாடசாலை ஆசிரியர் உயிரிழப்பு
கிண்ணியா கற்குழி சந்தியில் இன்று (01) மதியம் இடம்பெற்ற கோர விபத்தில், பாடசாலை ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று பகல் சுமார் 12.00 மணியளவில் கிண்ணியா கற்குழி சந்திக்கு அருகில் வீதியோரமாக தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மற்றுமொருவருடன் பேசிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வான் எல பகுதியில் இருந்து பெட்டியுடன் (Trailer) அதிவேகமாக வந்த உளவு இயந்திரம் (Tractor) கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இந்த […]