நள்ளிரவு முதல் பெற்றோல், டீசல் விலைகள் குறைகின்றன!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கமைய, லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன் மற்றும் லங்கா ஓட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகள் லீட்டருக்கு 2 ரூபாய் வீதம் குறைக்கப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட புதிய வில விபரங்கள் பின்வருமாறு: லங்கா பெட்ரோல் 92 ஒக்டேன்: தற்போதைய விலை: ரூ. 294.00 குறைக்கப்பட்ட தொகை: ரூ. 2.00 புதிய விலை: ரூ. 292.00 லங்கா ஓட்டோ டீசல்: […]
தென் கரோலினா மாகாணத்தில் வேகமாக பரவும் தட்டம்மை நோய்

அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில் தட்டம்மை நோய் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 2000ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து தட்டம்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு, இப்போது ஏற்பட்டுள்ள இந்தத் திரள் பாதிப்பு அந்நாட்டின் சுகாதாரத் துறைக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இதுவரை சுமார் 847 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத சிறுவர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றது. தட்டம்மையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கடுமையான காய்ச்சல் மற்றும் உடலில் சிவப்புத் தடிப்புகள் ஏற்படுகின்றன. இந்நோய் உயிரிழப்பை […]
யாழ்.சங்கானையில் இராணுவ முகாமை அகற்றி காணியை கையளிக்க இணக்கம்

யாழ்ப்பாணம் – சங்கானை பகுதியில், தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி, காணியை உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு இராணுவத்தினரை கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு இராணுவத்தினர் சாதகமாக பதிலளித்ததாகவும் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பவானந்தராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சுழிபுரத்தில் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான காணியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர், அண்மையில் அங்கிருந்து வெளியேறியதையடுத்து, அக்காணியை சங்கத்தினருக்கு மீள கையளித்துள்ளோம். அதேநேரம், பண்டத்தரிப்பு பகுதியில் மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான காணியில் […]
வெவ்வேறு பகுதி விபத்துக்களில் ஒரே நாளில் மூவர் உயிரிழப்பு!
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இளைஞன் ஒருவர் உட்பட முன்றுபேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநாகல் – நாரம்மல வீதியில் உயன்வத்த பகுதியில் நேற்று மாலை, இடம்பெற்ற வாகனவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருநாகல் நோக்கிப் பயணித்த கார்ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் பயணித்த லொறி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காரில் பயணித்த இரண்டு […]
இறுதி வாக்காளர் பட்டியல் எதிர்வரும் 17ஆம்திகதி வெளியீடு
பிப்ரவரி 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவா் இன்று சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, கணக்கீட்டு கட்டத்தின் போது கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பித்த வாக்காளர்களின் பெயர்களை உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியல் 19 டிசம்பர், 2025 […]
தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கின்றது!
தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ராமதாஸ் பேசுகையில், “இதுவரையில் 4,109 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். விருப்ப மனு அளிக்கப்பட்டதன் அடிப்படையில், 13 மாவட்டங்களைச் சேர்ந்தோர்களிடம் இன்று நேர்காணல் நடத்தப்பட்டது. இன்னும் சில நாள்களும் நேர்காணல் நடத்தப்படும். தேர்தல் கூட்டணி தொடர்பாக இன்னும் முடிவு செய்யவில்லை; விரைவில் முடிவை அறிவிப்போம். கூட்டணி தொடர்பாக சிலர் பேசினர்; பேசிக் கொண்டிருக்கிறார்கள்; பேசுவோம்” என்று தெரிவித்தார். […]
புதிய வாகனங்களை வாங்க முடியாத வரிசையில் 25,000 அரச ஊழியர்கள்

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வரி இல்லாத வாகன உரிமங்களை வைத்திருப்பதாலும், புதிய வாகனங்களை வாங்க முடியாததாலும் சுமார் இருபத்தைந்தாயிரம் அரச சேவை ஊழியர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. வரி இல்லாத வாகன உரிமங்களுக்கு ஈடாக வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் இன்னும் முடிவு செய்யாததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக பொது நிர்வாகம், மாகாண நாட்டிற்கு வாகன இறக்குமதி நிறுத்தப்பட்ட பின்னர், 25,508 வரி இல்லாத […]
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம்

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி – திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் இன்றையதினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 04 மணியளவில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மாலை 06 மணிக்கு நிறைவுபெற்றுள்ளது. மேலும், நாளை(01) காலை 06 மணிக்கு மீண்டும் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்படும். இன்றைய போராட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி நடராஜர் காண்டீபன், சட்டத்தரணி க.சுகாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மீன் வளத்தைப் பாதுகாப்பதற்கான உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதிநிகள் இந்தோனேஷியா விஜயம்

இந்தோனேஷியாவின் பாலி (Bali) நகரில் நேற்று வெள்ளிக்கிழமை (30) ஆரம்பமான கரையோர நாடுகளின் கூட்டணியின் 30வது அமர்வில் (30th Session of the Coastal States Alliance – CSA 030) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்வதற்காக கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும், அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. கே. கோலித கமல் ஜினதாசவும் விஜயம் செய்துள்ளனர். இந்து சமுத்திர வலயத்தைச் சேர்ந்த 12 கரையோர நாடுகளின் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் ஜனவரி 30 […]
கனடாவின் புதிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினுக்கு வரவேற்பு!

இலங்கை கனடா வணிக கவுன்சில் மற்றும் இலங்கை கனடா வணிக சபை இலங்கை வர்த்தக சபை ஏற்பாட்டில் இலங்கைக்கான கனடாவின் புதிய உயர்ஸ்தானிகரை வரவேற்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (29) கொழும்பில் மேரியட் ஹோட்டல் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின், உயர்ஸ்தானிகரகத்தின் அதிகாரிகள், இலங்கை வர்த்தக சபையின் இலங்கை-கனடா வணிக மன்றத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.