பாடசாலை  மாணவியை கர்ப்பமாக்கிய சந்தேக நபர் கைது!

பாடசாலை மாணவி பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமான சம்பவம் தொடர்பில் தலைமைறைவாகி இருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கனிஸ்ட பிரிவில் கல்வி கற்று வந்த மாணவியே இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் கல்முனையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவி அவரது தாயாருடன் தகாத உறவில் இருந்த நபரினால் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. தற்போது இந்த சம்பவத்துடன் தொடர்பான […]

மற்றுமொரு தேசிய வேலைத்திட்டம்

டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை, சமய வழிபாடுகளுக்கு ஏற்ற வகையில் விரைவாக புனர்நிர்மாணம் செய்வதற்காக அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் நாளை (27) முற்பகல் 10.00 மணிக்கு கம்பளை, தொரகல, பீகொக் ஹில் குடியிருப்பின் ஸ்ரீ போதிருக்காராம விஹாரையிலும், பிற்பகல் 3.00 மணிக்கு மாத்தளை, கவடயாமுன புராண ரஜமஹா விஹாரையிலும் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. […]

ஏற்றுமதி வருமானம் 17 பில்லியன் டொலர்களைக் கடந்து சாதனை!

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டு வர்த்தகத் துறையில் ஏற்பட்டுள்ள நிலையான முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், 2025 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் சாதனை அளவை எட்டியுள்ளது. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 2025 ஆம் ஆண்டில் சரக்கு மற்றும் சேவைகள் மூலமான மொத்த ஏற்றுமதி வருமானம் 17,252.15 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்தத் தொகையானது இலங்கையின் ஏற்றுமதித் துறையில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான மற்றும் நிலையான […]

இலங்கை முதியோரில் சுமார் 30 வீதமானோர் மனநலப் பிரச்சினைகளோடு உள்ளனர்!

இலங்கையின் முதியோர் மக்கள்தொகையில் சுமார் 30 வீதமானோர் மனநலப் பிரச்சினைகளைக் கொண்டுள்ளதாக முதியோர் உளவியல் நிபுணர் வைத்தியர் மதுஷானி டயஸ் தெரிவிக்கின்றார். இன்று (26) கொழும்பில் நடைபெற்ற ‘மன அபிவிருத்தி ஊடாக வாழ்க்கை மாற்றம்’ எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவர்களில் 60 அல்லது 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் முதியோர் மக்கள்தொகை மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும், அதற்கமைய முதியவர்கள் எதிர்நோக்கும் இந்த மனநலப் […]

அரச வைத்திய சேவை தொழிற்சங்க நடவடிக்கையால் மக்கள் பாதிக்கப்பட்டால் சுகாதார அமைச்சரே பொறுப்பு

சுகாதார அமைச்சருடன் முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது தமது முன்மொழிவுகளுக்கு அவர் எழுத்துமூலம் இணக்கம் தெரிவித்ததாகவும், எனினும் வாக்குறுதியளித்தவாறு அதனை நடைமுறைப்படுத்த தவறியமையினால் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நேரிட்டுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நோயாளர் பராமரிப்பு சேவைகள் பாதிக்கப்படுமாயின் அதற்கு முழுமையாக சுகாதார அமைச்சும், சுகாதார அமைச்சருமே பொறுப்புக் கூற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். […]

அரச சுகாதார சேவையில் புது நியமனங்கள்

அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்காக 213 பேருக்கு நாளை (27) நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. இப்பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை கடந்த 2025 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. எவ்வாறாயினும், இது இதற்கு முன்னர் 2021 ஆம் ஆண்டில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்காக 226 பேரை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி கிடைத்திருந்த நிலையில், திறந்த போட்டிப் பரீட்சையின் படி தகுதி பெற்ற 246 பேர் நேர்முகத் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு, […]

நிரந்தர ஆசிரிய நியமனம் கோரி உண்ணாவிரதம்!

ஆசிரியராக 6 வருடங்கள் பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர ஆசிரிய நியமனம் கோரி கொழும்பில் ஜனாதிபதி செயலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய பேருந்து; சாரதியால் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டது!

தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பகுதியில் இன்று (26) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. திடீரென பேருந்தின் தடைகளின் (Brake) கட்டுப்பாட்டை இழந்து, சாரதி ஒரு மலையில் மோதியதாகவும், பின்னர் பேருந்தை நிறுத்தியதாகவும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாரதி பேருந்து வளைவில் செல்ல முயன்றபோது, ​​பேருந்தை கட்டுப்படுத்த இரண்டாவது “கியர்” (Gear) மாற்றியதாகவும், அந்த நேரத்தில், பேருந்தின் தடை […]

விபத்தால் மாணவன் உயிரிழப்பு

களுத்துறை, பதுரலிய பகுதியில் தனது பிறந்தநாளுக்கு மறுநாள், தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவன் விபத்தில் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 18 வயதான ஹசிந்து தேமியா விஜயதுங்க என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் c.w.w கன்னங்கர மத்திய கல்லூரியில் உயர்தரம் பயிலும் மாணவன் என விசாரணையில் தெரியவந்துள்ளது. தனது பிறந்தநாளுக்கு மறுநாள், பதுரலிய கலுகல வீதியில் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, ​​மோட்டார் […]

பம்பலப்பிட்டி – வெள்ளவத்தை பகுதியில் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

கொழும்பு, பம்பலப்பிட்டி – வெள்ளவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டில் மறைந்திருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான ‘வெலியோய பிரியந்த’ மற்றும் ‘SF ஜகத்’ ஆகியோரின் நெருங்கிய உதவியாளர் ஒருவரிடமிருந்தே போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரிஜ்வே பிளேஸ் வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வெள்ளவத்தை பிரதேசத்தில் உள்ள […]