இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு இசை நிகழ்ச்சி!

இந்தியாவின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரபல பொலிவுட் பாடகி அனுராதா பாட்வாலின் இசை நிகழ்ச்சி கொழும்பு தாமரை கோபுரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (23) நடைபெற்றுள்ளது. கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம் ஆகின இணைந்து இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன. இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ , அமைச்சர் ஹினிதும சுனில் செனவி , அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் , […]
“இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” சுதந்திர தினத்தின் கருப்பொருள் வெளியீடு!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தின் கருப்பொருளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி நடைபெறவுள்ள 78 ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளை கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு “இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” என்ற கருப்பொருள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கனகராயன்குளம் பகுதி விபத்தில் இருவர் படுகாயம்

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று சனிக்கிழமை(24) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்… யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிவந்துகொண்டிருந்த டிப்பர்வாகனம் எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்த கூலர் வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது. விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சர்வதேச சட்ட மாநாடு யாழில் ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் இந்தியாவின் பிரசித்தி பெற்ற சுரானா சட்ட நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் ‘3வது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு – 2026’ இன்று சனிக்கிழமை (24) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விசேட அதிதியாகக் கலந்துக்கொண்டார். சுரானா சட்ட நிறுவனத்துடன் இணைந்து 2024ஆம் ஆண்டில் முதலாவது சட்ட மாநாட்டை நடத்திய யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை, 2025இல் இரண்டாவது மாநாட்டையும் […]
ஐ,தே.க – ஐ.ம.சக்தி மீண்டும் கலந்துரையாடல்

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் மற்றுமொரு தீர்க்கமான கலந்துரையாடல் இன்று (24) இடம்பெற்றுள்ளது. இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள, பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, உப தவிசாளர் நவீன் திஸாநாயக்க, அகில விராஜ் காரியவசம் மற்றும் […]
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோ சுறா மீன்களுடன் பேர் கைது!

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 நபர்களை, வென்னப்புவ பகுதியில் வைத்து கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வென்னப்புவ, வெல்லமன்கர மீன்பிடித் துறைமுகத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 876 கிலோ 200 கிராம் நிறையுடைய சுறா மீன் தொகுதி, பலநாள் மீன்பிடிப் படகொன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட […]
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வு மே – 30

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30 ஆம் திகதி நடத்துவதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மூன்று நிகாயக்களின் மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையைக் கருத்திற்கொண்டு, போயா குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது அமைச்சர் குறிப்பிட்டார். அதற்கமைய, […]
ஈரானை நோக்கி விரையும் அமெரிக்க கப்பல்கள்

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 5,002 ஆக அதிகரித்துள்ளதாக அமெரிக்காவை தளமாக கொண்ட மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. நிலைமை மோசமடைந்து வருவதை அடுத்து, அந்நாட்டை நோக்கி அமெரிக்க போர்க்கப்பல்கள் படையெடுத்துள்ளன. இது குறித்து டிரம்ப் கூறுகையில், ”ஈரானில் நடக்கும் தற்போதைய நிகழ்வுகளை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எதற்கும் தயாரான நிலையில் இருக்கவே போர்க்கப்பல்கள் அங்கு நிலைநிறுத்தப் படுகின்றன. ”அணுசக்தி திட்டத்தை துவங்கினாலோ அல்லது கைதானவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றினாலோ ஈரான் மீது […]
சர்வதேச சந்தையில் உயரும் தங்க விலை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை விரைவில் 5,000 டொலர் நிலையை எட்டும், அதைத் தொடர்ந்து 5,187.79 டொலர் வரை உயர வாய்ப்புள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தவகையில் அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, இன்றும்(24) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 385,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு பெறலாம்!
மக்கள் நீதி மய்யம் சார்பில் வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுவை ரூ.50,000 செலுத்தி பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம், பேரவைத் தேர்தலில் அக்கட்சியிடம் இரட்டை இலக்க தொகுதிகளைக் கேட்டுப்பெற முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், தேர்தல் பணிகள் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ளன. திமுக […]