புத்தர்சிலையை பாதுகாக்க நாம் இன்று நவீன பிரபாகரன்களோடு போராடுகின்றோம்!

நவீன பிரபாகரன்களான கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் அதற்கு மறைமுக ஆதரவு வழங்கும் அரச தரப்பு என்பவற்றிடம் இருந்து திருகோணமலை கடற்கரையில் வைக்கப்பட்ட புத்தர்சிலையை பாதுகாக்க நாம் இன்று போராடுகின்றோம் என்று திருகோணமலையில் வைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, திங்கட்கிழமை (19) கூறினார். “2004 இல் திருகோணமலை நகர மத்தியில் வைக்கப்பட்ட புத்தர்சிலையை பாதுகாக்க பிரபாகரனுடன் போரிட்டு அதனை பாதுகாத்தோம்.புத்தர் சிலைகளை பாதுகாக்க நாங்கள் எப்போதும் போராடுவோம்” என்றார். திருகோணமலை டச்பே கடற்கரையில் 2025 […]
பெண் துஷ்பிரயோகம்; காணொளி வெளியிட்ட தொழிலதிபர் கைது

பொரளையில் ஒரு பெண் நிர்வாணமாக இருப்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, பிரபல தொழிலதிபர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சமீப நாட்களில் இந்த காணொளி பரவியதைத் தொடர்ந்து, குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் விசாரணையைத் தொடங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்புக்குப் பொறுப்பான டிஐஜியின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. முக்கிய சந்தேக நபரான பொரள்ளை, ஃபேர்ஃபீல்ட் கார்டன்ஸைச் சேர்ந்த 43 வயது தொழிலதிபர், […]
புதிதாக அமையவுள்ள மாமல்லன் ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் – ஸ்டாலின்
புதிதாக அமையவுள்ள மாமல்லன் ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் நீர்த்தேக்கம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினார். 5,161 ஏக்கர் பரப்பளவில் 1.6 டிஎம்சி வெள்ளநீரை சேமிக்கும் வகையில் நீர்த்தேக்கம் அமைக்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய 6ஆவது நீர்த்தேக்க ஏரிக்கு மாமல்லன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பக்கிங்காம் கால்வாயின் உப வடிநிலத்தில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க […]
சிலி நாட்டில் காட்டுத் தீ: 18 பேர் பலி

சிலி நாட்டில் பற்றி எரியும் காட்டுத்தீயால் 100க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையான நிலையில், 18 பேர் தீயில் கருகி உயிரிழந்ததுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. தலைநகர் சாண்டியாகோவிற்கு தெற்கே சுமார் 500 கிமீ தொலைவில் உள்ள உபிள் மற்றும் பயோபியோ பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. குறிப்பாக, கடலோர நகரமான கான்செப்சியனை ஒட்டிய வறண்ட காடுகளில் தீ இடைவிடாமல் எரிந்து வருவதால், அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிப்பதாக கூறப்படுகின்றது. […]
கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி

கிழக்கின் பழம் பெரும் கழகமான காரைதீவு விளையாட்டுக் கழகத்தினதும்( KSC) விபுலானந்த சனசமூக நிலையத்தினதும் 2026ம் ஆண்டுக்கான வருடாந்த தைப்பொங்கல் தின பீச் ( Beach Volleyball) கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி காரைதீவு கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (18) அன்று மாலை இடம்பெற்றது. அமரர் வைரமுத்து நல்ல ரத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாக கழகத் உப தலைவர் எஸ்.ரதீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக கழகப்போசர்களான உத்தரவு பெற்ற நில அளவையாளர் வி.ராஜேந்திரன், ஓய்வு நிலை உதவிக் கல்விப் […]
சமாதான குழுவில் இணையுமாறு கனடாவை அழைக்கும் டொனால்ட் டிரம்ப்!

காசாவில், அமெரிக்கா தலைமையில் அமைக்கப்படும் சமாதான குழுவில் இணையுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை கனடா பிரதமர் மார்க் கார்னி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவிலிருந்து புறப்படும் முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனடா அரசின் மூத்த அதிகாரி ஒருவர், அந்த அழைப்பு அதே நாளில் வந்ததாக தெரிவித்தார். கார்னி இந்த அழைப்பை ஏற்க முடிவு செய்திருந்தாலும், அதிகாரப்பூர்வமாக இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், டொனால்ட் […]
பாகிஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சுட்டுக் கொலை!

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் குடும்ப தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேக நபரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஃபாரூக் என்ற ஃபாரூக்கே என அடையாளம் காணப்பட்டார். குடும்பத் தகராறு காரணமாக, வீட்டிலிருந்த உறவினர்களைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் அவர் கூறினார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஃபாரூக்கின் மனைவி, இரண்டு […]
இன்றுடன் விஜய்யிடம் சிபிஐ விசாரணை முடிவு பெறாது?

கரூர் கூட்ட நெரிசல்: கரூர் கூட்ட நெரிசல் பலி தொடர்பான வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிடம் அடுக்கடுக்கான கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் முன்வைத்துள்ளனர். இந்த கேள்விகளுக்கு விஜய் அளித்த பதில்களுக்கு ஆதாரங்களை சிபிஐ அதிகாரிகள் கேட்ட நிலையில், விஜய் தரப்பிலிருந்து அவகாசம் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூரில் கடந்த செப்.27-ஆம் தேதி விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் பலியான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து சிபிஐ விசாரித்து […]
திருமதி வடிவேலு பார்வதிப்பிள்ளை

யாழ். கரவெட்டி கிழக்கு கட்டைவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வடிவேலு பார்வதிப்பிள்ளைஅவர்கள் 19-01-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், செல்லையா அமுதம்மா தம்பதிகளின் அன்பு மகளும், உலகப்பர் பிள்ளையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், வடிவேலு அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சரசுவதி, சின்னாச்சி மற்றும் தேவதாஸ்(ஜேர்மனி), தவராசா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் , வசந்தகுமார்(சுவிஸ்), விமதி(கனடா), பாலகுமார்(லண்டன்), சுமதி ஆகியோரின் அன்புத் தாயாரும், பவளேஸ்வரி(சுவிஸ்), திருவள்ளுவன்(கனடா), அனிதா(லண்டன்), சேந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான […]
வீதிகளில் நிற்கும் ஆடுகளை சூட்சுமமாக சொகுசு காரில் கடத்திய மூவருக்கு விளக்கமறியல்

வீடுகள் வீதிகளில் நிற்கும் ஆடுகளை சூட்சுமமாக சொகுசு காரில் கடத்திய மூன்று சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதிகளில் உள்ள ஆடுகள் சொகுசு காரில் ஏற்றி செல்லப்பட்டு களவாடப்பட்டு வருவதாக பல்வேறு முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றிருந்தது. அத்துடன் கடந்த சனிக்கிழமை (17) மாலை சந்தேகத்திற்கிடமாக சொகுசு கார் ஒன்று நடமாடுவதாக பொதுமக்களிடம் இருந்து சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. […]