தமிழினத்தின் இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள தமிழ்க் கட்சிகளுக்குள் ஒற்றுமை அவசியம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

தமிழினத்தின் இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் ஒற்றுமை தேவை என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தாங்கள் விரும்பியவாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி செயற்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விரும்பினால் அது நடக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சமகால அரசியல் நிலைமை குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பொது விடயங்களிலாவது தமிழ்த் […]
ஆயித்தியமலையில் கசிப்பு வியாபாரியை காப்பாற்ற பொலிஸாரை தாக்கிய 6 பேர் கைது
மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் கசிப்பு வியாபாரியை கைது செய்ய முற்பட்ட பொலிஸாரை தாக்கி கசிப்பு வியாபாரியை கைது செய்ய விடாது தடுத்து கைகலப்பில் ஈடுபட்டு வியாபாரியை தப்பியோட வைத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 3 பெண்கள் உட்பட 6 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (18) கைது செய்துள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர். ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள நரிப்பு தோட்டம் பிரதேசத்தில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வீடு ஒன்றை சம்பவ தினமான சனிக்கிழமை (17) […]
வடமாகாண தைப்பொங்கல் விழா

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஆண்டுதோறும் நடத்தும் வடமாகாண தைப்பொங்கல் விழா- 2026 இவ் வருடம் மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கேதீஸ்வரம் திருக்கோயில் மூன்றலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) அன்று காலை நடைபெற்றது. வடக்கு மாகாண கல்வி. அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழாவில் விருந்தினர்களாக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் […]
காத்தான்குடி நகரசபை பிரிவில் மதில் இடிந்து விழுந்ததில் ஊழியர் படுகாயம்

மட்டக்களப்பு காத்தான்குடி நகரசபை பிரிவில் புதிய காத்தான்குடி பிரதேசத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகாலமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர், மதில் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சனிக்கிழமை (17) மாலை குறித்த வடிகாலமைப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த நேரம் அருகில் இருந்த மதில் இடிந்து விழுந்துள்ளதுடன் அதில் தம்புள்ளையைச் சேர்ந்த 40 வயதுடைய ஊழியர் ஒருவர் படுகாயமடைந்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா […]
துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி

அலவ்வ, மொரவலப்பிட்டி பகுதியில் உள்ள கொடாகூருவ சந்தியில் சனிக்கிழமை (17) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக அலவ்வ பொலிஸார் தெரிவித்தனர். மெடியகனே பகுதியைச் சேர்ந்த கே.எம். கவிந்து நிமேஷ சத்சார என்பவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போது துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசங்களுக்கான ஆபிரிக்கக் கிண்ணம்: மூன்றாமிடத்தைப் பெற்ற நைஜீரியா

மொரோக்கோவில் நடைபெற்று வந்த தேசங்களுக்கான ஆபிரிக்கக் கிண்ணத் தொடரில் நைஜீரியா மூன்றாமிடத்தைப் பெற்றது. சனிக்கிழமை (17) நடைபெற்ற எகிப்துடனான மூன்றாமிடத்துக்கான போட்டியில் பெனால்டியில் வென்றே நைஜீரியா மூன்றாமிடத்தைப் பெற்றது. இப்போட்டியின் வழமையான நேரத்திலும், மேலதிக நேர முடிவிலும் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில் பெனால்டியில் எகிப்தின் மொஹமட் சாலா, ஓமர் மர்மூஷுன் பெனால்டிகளை நைஜீரியாவின் கோல் காப்பாளர் ஸ்டான்லி நுவபாலி தடுத்த நிலையில் றபி றபியா, மஹ்மூட் சபெர் தமதுதைகளை உட்செலுத்தியிருந்தனர். நைஜீரியாவின் பிஸயோ டெலே-பஷிருவின் […]
சிற்றியை வென்ற யுனைட்டெட்

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (17) நடைபெற்ற மன்செஸ்டர் சிற்றியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது. யுனைட்டெட் சார்பாக பிறையன் எம்புமோ, பற்றிக் டோர்கு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற பேண்லியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான லிவர்பூல் சமப்படுத்தியது. லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை புளோரியன் ரிட்ஸ் பெற்றதோடு, பேண்லி சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்க்கஸ் […]
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க 2025 நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் வாக்குறுதிகளில் 10 ஐ நிறைவேற்றிவிட்டார்!

‘அனுர மீட்டர்’ (Anura Meter) தேர்தல் விஞ்ஞாபன கண்காணிப்பானின் சமீபத்திய புதுப்பிப்பின்படி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க 2025 நவம்பர் மாதத்திற்குள் தனது முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் 10 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். அதேவேளை, மேலும் 10 வாக்குறுதிகள் முன்னேற்றத்தில் உள்ளன, 9 வாக்குறுதிகளில் முன்னேற்றம் இல்லை, மற்றும் ஒரு வாக்குறுதி தோல்வியடைந்துள்ளது. இந்த மதிப்பீடானது 2024 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்ட 30 முக்கிய வாக்குறுதிகளைக் கண்காணித்துள்ளதுடன், 2026 வரவு-செலவுத் திட்டத்தையும் உள்ளடக்கியுள்ளது; எனினும், இது ‘டிட்வா’ (Ditwah) […]
விமானத்தில் வெடிகுண்டு; அவசரமாக தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்

டெல்லியில் இருந்து 230 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. பேக்டோக்ரா (Bagdogra) நோக்கி பயணித்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில், கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிறிய டிஷ்யூ காகிதம் ஒட்டுமொத்த விமானத்தையும் அதிர வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இண்டிகோ 6E 6650 விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அதன் கழிவறையில் கையால் எழுதப்பட்ட ஒரு குறிப்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த டிஷ்யூ காகிதத்தில் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக எழுதப்பட்டிருந்ததால் விமானத்திற்குள் பெரும் பதற்றம் நிலவியுள்ளது. இந்த மிரட்டல் […]
காணாமல் போன இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு!

11 பேருடன் காணாமல் போன இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகளை அந்நாட்டு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசியில் உள்ள புலுசருன் மலையில் இந்த விமானத்தின் சிதைவுகள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதில் இருந்தவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. மேலும், அவர்களைக் கண்டுபிடிக்க இந்தோனேசிய அதிகாரிகள் சிறப்புத் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். அந்த விமானம் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சகத்திற்கு சொந்தமானது என்ற தகவல் தெரியவந்தது. காணாமல் […]