2026 முதல் சிங்கப்பூரில் விமானப் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்?

சிங்கப்பூரில் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி இறுதியில் இருந்து விமானப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிற நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்கு வரும் விமான நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச்சாவடிகள் ஆணையம் (ICA) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், சிங்கப்பூருக்கு வரும் பயணிகளின் விபரங்கள் மற்றும் ஆவணங்களை முன்கூட்டியே அனுப்பி வைக்க வேண்டும். அதனை ஆய்வு செய்த பிறகு, தகுதியான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அவர்கள் சிங்கப்பூர் வர அனுமதிக்கப்படுவார்கள். இல்லையெனில், அவர்கள் புறப்படும் விமான நிலையத்திலே தடுத்து நிறுத்தப்படுவார்கள்.

குறிப்பாக, உரிய விசா அல்லது 6 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாத பயணிகளுக்கு அனுமதி கிடையாது.

சிங்கப்பூருக்குச் செல்ல விரும்பும் பயணிகள், விமான டிக்கெட் எடுப்பதற்கு முன், ஐசிஏ தளத்தின் (ICA Feedback Channel) வழியாக நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஐசிஏ நேரடியாக அனுமதி அளிக்கும் வரை பயணத்தை திட்டமிடக் கூடாது.

இந்த விதிகளை கடைபிடிக்காத விமான நிறுவனங்களுக்கு ரூ.7 லட்சம் வரையில் அபராதம் விதிக்கப்படும். மேலும், தகுதியான ஆவணங்கள் இல்லாத பயணியை அனுமதித்த விமான நிறுவன ஊழியர்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் சிங்கப்பூர் முன்னிலை வகிக்கிறது. இதனை தொடர்ந்து உறுதி செய்யும் விதமாக, விமான நிலையங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாடு விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

vali

சர்வதேச மனித உரிமைகள் தினம்; வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்

December 10, 2025

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா

uthaya

நிதிக் கணிப்பீட்டில் யாழ். மாவட்டத்தில் ஊழல் – உதய கம்மன்பில

December 10, 2025

‘டித்வா’ பேரிடரில் அழிவடைந்த வீடுகளுக்காக வழங்கப்படவுள்ள நிதி கணிப்பீட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக பிவித்துறு ஹெல உறுமய

Education

பாடசாலைகளுக்கான கல்விச் செயற்பாடுகள் குறித்து கல்வி அமைச்சினால் விசேட சுற்று நிரூபம்

December 10, 2025

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான கற்றல் செயற்பாடுகளை ஆரம்பித்தல் மற்றும் தவணைப் பரீட்சைகள் தொடர்பில் கல்வி

rai.

புகையிரத சேவைகளை மீள ஆரம்பிப்பது அறிவிப்பு

December 10, 2025

இயற்கை அனர்த்தங்களினால் புகையிரத திணைக்கள சொத்துகளுக்கு 300 மில்லியன் டொலர் வரையில் சேதம் ஏற்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்துக்கான

Varunaga

பாதிக்கப்பட்ட மக்களுக்கான தொடர் பணியில் முப்படையினரும் அரச நிறுவனங்களும்

December 10, 2025

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகள் மற்றும் சேதமடைந்த உட்கட்டமைப்பை மீட்டெடுப்பதற்காக முப்படையினரும் அரச நிறுவனங்களும் தொடர்ந்து செயற்பட்டு

va

ஜனாதிபதியை சந்திக்க வட மாகாண கடற்றொழிலாளர்கள் முயற்சி!

December 10, 2025

கடற்தொழிலாளர்களின் பிரச்சினை குறித்தும் அந்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடுவது குறித்ததுமான மனு

cum

மீண்டும் வருகிறார் கம்மின்ஸ்

December 10, 2025

ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் வென்ற

mats

‘மத்ஸ்யா 6000’; முதல் மனித ஆழ்கடல் பயணம்

December 10, 2025

முதல் மனித ஆழ்கடல் பயணம் மத்ஸ்யா 6000 திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என இந்திய மத்திய அமைச்சர் ஜிதேந்திர

par

மொய்ஸே கீன் பார்சிலோனா செல்கிறார்?

December 10, 2025

இத்தாலிய சீரி ஏ கழகமான பியொரென்டினாவின் முன்களவீரரான மொய்ஸே கீனைக் கைச்சாத்திடுவதில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா ஆர்வம்

new

நியூயார்க் டைம்ஸ்; பிரபலங்கள் பட்டியலில் ஷாருக் கான்

December 10, 2025

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ள 2025ம் ஆண்டின் உலகின் ஸ்டைலிஷ் பிரபலங்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இடம் பிடித்துள்ளார்.

mes

பிரதமர் மோடியை சந்திக்க உள்ள மெஸ்ஸி!

December 10, 2025

அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி 38. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் ‘பிபா’ உலக கோப்பை வென்றது.

Para

பாரா சைக்கிளிங் கோப்பையில் இந்தியாவுக்கு 11 பதக்கம்

December 10, 2025

பாரா சைக்கிளிங் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு 11 பதக்கங்கள் கிடைத்தன. லிசா 4 பதக்கம் கைப்பற்றினார். தாய்லாந்தில் பாரா சைக்கிளிங்