2026 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் ரசிக பீரிஸ் தெரிவித்தார்.

வாக்காளர்கள் தகுதி பெறும் திகதியாக பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி கருதப்படுவதாகவும், அத்திகதியில் 18 வயது பூர்த்தியடைந்த மற்றும் அப்பிரதேசத்தில் வசிப்பதை உறுதிப்படுத்தியவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளும் வசதி காணப்படுவதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

வாக்காளர் பட்டியலுக்கான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு, வீடு வீடாகச் சென்று தரவுகளை சேகரிக்கும் முறை மற்றும் உள்வாங்கும் மற்றும் நீக்கும் முறைமை ஆகியவை பின்பற்றப்படுவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் ரசிக பீரிஸ் தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டிற்கான தகவல்களை சேகரிக்கும் போது உள்வாங்கும் மற்றும் நீக்கும் முறைமையே பின்பற்றப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு அனைத்து கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் தற்போது 2026 வரைபு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் ஊடாகவும் தமது பெயர் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பரிசீலிக்கும் வசதி காணப்படுவதாக அவர் அங்கு குறிப்பிட்டார்.

வாக்காளர் இடாப்பிற்காக பிரதேச ரீதியாக தகவல்களை சேகரித்தல் பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இடம்பெறுவதாகவும் அவர் கூறினார்.

கிராம உத்தியோகத்தர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் ஊடாக உள்வாங்கல் மற்றும் நீக்கல் பட்டியல்களைத் தயாரித்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு ஒப்படைத்தல் மார்ச் 03 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

அத்தகவல்களுக்கு அமைய பெயர் பட்டியலை மீண்டும் பட்டியலிட்டு மே 5 ஆம் திகதி முதல் ஜூன் 01 ஆம் திகதி வரை 28 நாட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் ரசிக பீரிஸ் தெரிவித்தார்.

 

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு

tea

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்கான அதிபர் பதவிகளைப் பொறுப்பேற்க தயங்கும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள்?

March 3, 2026

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அதிபர் பதவிகளுக்கு, அச்சேவையைச் சேர்ந்த பெரும்பாலான அதிகாரிகள் விண்ணப்பிக்க முன்வரவில்லை என்று ஆசிரியர்

d

நாட்டின் பிரதம நீதியரசர் மன்னாருக்கு விஜயம்

March 3, 2026

ட்டின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை மன்னாருக்கு விஜயம்

nan

‘சாகர’, ‘நந்திமித்திர’ கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன!

March 3, 2026

இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கிழக்கு இந்தியப் பெருங்கடல் கடற்கரையை மையமாக கொண்டு பெப்ரவரி 18 முதல் 26 வரை

iran

ஈரானில் இதுவரை 787 பேர் உயிரிழப்பு – செஞ்சிலுவைச் சங்கம்

March 3, 2026

ஈரான் மீது இடம்பெற்ற அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களின் விளைவாக இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தகவல்

cham

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகத்தின் பணி இடைநிறுத்த விவகாரம்: ரிட் மனு மார்ச் 18 இல் விசாரணைக்கு!

March 3, 2026

எவ்வித நியாயமான விசாரணையுமின்றி தனது பணி இடைநிறுத்தப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் ரிட் உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்றத்தின்

amazo

அமேசான் நிறுவனத்தின் பல தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்

March 3, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான் நிறுவனத்தின் பல

masoo

அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெறுகின்றன – ஈரான் ஜனாதிபதி

March 3, 2026

தனது நாட்டுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வருகின்ற போதிலும், அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ஈரான்

Ruvan Ranasinga

சுற்றுலாப் பயணிகளின் வருகை சரிவு?

March 3, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்குகளை அடைய முடியவில்லை