மியூனிச் – மைன்ஸ் போட்டி சமநிலை!
ஜேர்மனிய தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற மைன்ஸுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் சமப்படுத்தியது. மியூனிச் சார்பாக லெனார்ட் கார்ள், ஹரி கேன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். மைன்ஸ் சார்பாக கஸ்பர் பொடுல்ஸ்கி, லீ ஜயே-சங் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். இதேவேளை பிறைபேர்க்கின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும் பொரூசியா டொட்டமுண்டுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. டொட்டமுண்ட் […]
நேட்டோ கூட்டணியில் சேரும் நோக்கத்தை உக்ரைன் கைவிட்டுள்ளது!
மேற்கத்தேய பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு ஈடாக நேட்டோ கூட்டணியில் சேரும் நோக்கத்தை உக்ரைன் கைவிட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உறுதிமொழியாக அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெர்லினில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை இதைப் பதிவு செய்துள்ளார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவின் மிகவும் கொடூரமான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில், சர்வதேச நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில், […]
நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு!
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக இன்று திங்கட்கிழமை(15) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சீரற்ற வானிலை காரணமாக நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்ட நிலையில், சீரமைப்பு பணிகளில் முடிவடைந்த பின்னர் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 18 நாட்களுக்கு பின்னர் நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி இவ்வாறு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் […]
ரஷ்யாவுக்கான முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரின் மகன் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்
ரஷ்யாவுக்கான முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரின் மகனின் பல்கலைக்கழக விண்ணப்பத்தை ஏற்க மறுத்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. மனுதாரரான தம்சித் ஜயரத்ன, கொழும்பு ரோயல் கல்லூரியில் மாணவராக இருந்தபோது, அவரது தந்தை க்ரூப் கெப்டன் சரோஜ் ஜயரத்ன ரஷ்யாவுக்கான இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலையில் நியமிக்கப்பட்டதையடுத்து, குடும்பத்துடன் அவரும் மொஸ்கோ சென்றார். மொஸ்கோவில் உள்ள இந்தியப் பாடசாலையில் […]
அவுஸ்திரேலியாவில் அரைக்கம்பத்தில் தேசியக் கொடி
அவுஸ்திரேலியாவில் நடந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து, அந்நாட்டில் கறுப்பு தினம் அறிவிக்கப்பட்டு கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. அந்நாட்டு பிரதமர் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இதனை அறிவித்துள்ளார். மேலும், “யூத விரோதத்தை ஒழிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம், அதை ஒன்றாகச் செய்வோம்” என்று அல்பானீஸ் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி (Bondi) கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு குழந்தை உட்பட 16 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் குறித்த பகுதியில் நடத்தப்பட்ட […]
இருபதுக்கு 20 ஓவர் போட்டி; இந்திய அணி அபார வெற்றி
தென்னாப்பிரிக்க அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. தர்மசாலாவில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பாடிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணித்தலைவர் Aiden Markram அதிகபட்சமாக 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து […]
படுகொலைக்கு உதவி: ‘படு மீயா’வின் மனைவி உள்ளிட்ட நால்வர் கைது
அம்பலாங்கொடை, மோதர தேவாலயக் குழுத் தலைவர் மிரந்த வருசவிதான என்பவரின் படுகொலைக்கு ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட ‘படு மீயா’ (Batu Meeya) எனும் சந்தேக நபரின் மனைவியும் மேலும் மூன்று சந்தேக நபர்களும் பொலன்னறுவை பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வசமிருந்து 20 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபர்களை பொலன்னறுவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர், 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு […]
மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் முறையில் வாகனங்களை செலுத்திய இளைஞர்கள் கைது
மஹரகம – பன்னிபிட்டிய ஹைலெவல் வீதியில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், ஆபத்தான முறையிலும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை செலுத்திய 18 இளைஞர்களை மஹரகம பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞர்கள் பணப் பந்தயங்களை வைத்துக்கொண்டே இதனை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக பயன்படுத்தப்பட்ட 11 மோட்டார் சைக்கிள்களும், முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
22,522 குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில்
நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட சுமார் இருபதாயிரம் குடும்பங்கள் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாடு பூராகவும் அமைந்துள்ள 762 இடைத்தங்கல் முகாம்களில் 22,522 குடும்பங்களைச் சேர்ந்த 70,055 நபர்கள் இதுவரை தங்கியுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான இடைத்தங்கல் முகாம்கள் அமைந்துள்ளன. அங்குள்ள 222 இடைத்தங்கல் முகாம்களில் 5,427 குடும்பங்களைச் சேர்ந்த 17,437 பேர் தங்கியுள்ளனர். அதற்கடுத்ததாக நுவரெலியா மற்றும் பதுளை […]
பாதிக்கப்பட்டவர்களை வலுவூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரணங்களுக்கான வழிகாட்டல்கள்
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை வலுவூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரணங்களுக்கான வழிகாட்டல்களை சுட்டிக்காட்டி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த (ஓய்வுநிலை) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2025.11.21 ஆம் திகதி முதல் தாக்கம் செலுத்திய திட்வா சூறாவளி தாக்கத்தால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையை அடிப்படையாகக் கொண்டு 2025.11.28 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவுறுத்தல் ஊடாக முழு இலங்கைக்கும் அவசரகால நிலைமை அமுல்படுத்தப்பட்டதுடன், அன்றைய தினம் அனர்த்த […]