யாழ்.,விமான நிலைய பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கு அடிக்கல்
யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கான பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் திங்கட்கிழமை (15) மதியம் இடம்பெற்றது. இதில் யாழ்ப்பாணம் விமான நிலையத் தலைவர் சமன் அமரசிங்க, விமான நிலைய இணை முகாமைத்துவ தலைவர் சஞ்சீவ அமரபதி, இலங்கை விமான நிலைய ஆணைக்குழுவின் பிரதித் தலைவர், பொறியியலாளர் ஆகியோரால் சர்வமத வழிபாடுகளோடு அடிக்கல் நாட்டப்பட்டது. இதேவேளை கட்டம் 02 க்கான வேலைகள் ஜனவரி 2026 இல் திட்டமிடப்பட்டுள்ளது . இரண்டு கட்டங்களுக்கும் எதிர்பார்க்கப்படும் மொத்த முதலீடு […]
நாகர் கோவில் கிராம உத்தியோகத்தருக்கு எதிராக குரல் கொடுத்தவருக்கு கொலை மிரட்டல்
கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது இலங்கையின் பல்வேறு பகுதிகள் முற்றாக பாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் முதன்மையாக நாகர் கோவில் பகுதி காணப்படுகிறது. இவ் கிராமத்தில் பணி புரியும் கிராம உத்தியோகத்தர் பக்க சார்பாக செயற்படுவதாகவும் சில பாதிக்கப்பட்ட வீடுகளை இது வரைக்கும் கிராம உத்தியோகத்தர் வந்து பார்வையிடவில்லை எனவும் நாகர் கோவில் மக்கள் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர். அதில் […]
சட்டவிரோதமாக கடமான் இறைச்சியை வைத்திருந்த இருவர் கைது
வனாத்தவில்லுவ பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியின் போது, சட்டவிரோதமாக கடமான் இறைச்சியை வைத்திருந்ததற்காக, வனாத்தவில்லுவ வனவிலங்கு அலுவலக அதிகாரிகளால் இரண்டு வேட்டைக்காரர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) அன்று கைது செய்ததாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் 74 கிலோ 500 கிராம் கடமான் இறைச்சியுடன் கைது செய்யப்பட்டனர். கடமான் என்பது வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் கண்டிப்பாக பாதுகாக்கப்படும் ஒரு பாலூட்டியாகும். சந்தேக நபர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட இறைச்சி கடத்தல் நடவடிக்கையுடன் தொடர்புடையவர்களா […]
அவுஸ்திரேலிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு ஜனாதிபதி அனுர கண்டனம்
அவுஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டை இலங்கை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு எக்ஸ் செய்தியை வெளியிட்ட ஜனாதிபதி, அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். சமூகத்தில் வன்முறை மற்றும் வெறுப்புக்கு இடமில்லை என்பதை வலியுறுத்தி, அவஸ்திரேலியாவுடன் இலங்கை தொடர்ந்து ஒற்றுமையாக நிற்கும் என்று ஜனாதிபதி கூறினார்.
மீண்டும் பாகிஸ்தானால் நிவாரணம்!
பாகிஸ்தானிலிருந்து 200 தொன் அனர்த்த நிவாரண பொருட்கள் இலங்கை அரசாங்கத்திடம் இன்று திங்கட்கிழமை (15) அன்று கையளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானி காரியாலயம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமரின் விசேட பணிப்புரைகளைத் தொடர்ந்து, இலங்கைக்கு தொடர்ச்சியாக அனர்த்த நிவாரண பொருட்கள் மற்றும் சேவைகள் கையளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்புறவும் வலுவான இருதரப்பு உறவுகளும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வட கொலம்பியாவில் பாடசாலை பஸ் விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
வடக்கு கொலம்பியாவின் கிராமப்புறப் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர். ஆன்டிகுவியா பகுதி ஆளுநர் ஆண்ட்ரெஸ் ஜூலியன் எக்ஸ் தளத்தில், பாடசாலை மாணவர்களின் சுற்றுலா பயணத்தை முடித்துக் கொண்டு கரீபியன் நகரமான டோலுவிலிருந்து மெடலினுக்குப் பஸ் பயணித்த போது இந்த விபத்து இடம் பெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு மாணவர்கள் கடற்கரையில் தங்கள் பட்டமளிப்பு விழாவைக் கொண்டினர். டிசம்பர் மாதத்தில் இந்த விபத்து […]
அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!
அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் நேற்று (14) இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டில் துப்பாக்கி தொடர்பான சட்டங்களை கடுமையாக்குவது குறித்து அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படுவதைத் தடுப்பதற்கு பொருத்தமான எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு அரசாங்கம் தயங்காது என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கமைய, ஒருவருக்கு வழங்கக்கூடிய துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தல், அனுமதிப்பத்திர மீளாய்வு காலப்பகுதியொன்றை அறிமுகப்படுத்தல் போன்றவை தொடர்பில் இன்று நடைபெறும் […]
பெங்களூரு, மும்பை உட்பட 10 நகரங்களில் 13 வயதிலேயே போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்
டில்லி எய்ம்ஸ் மருத்துவ ஆய்வு நிறுவனம் பெங்களூரு, மும்பை உட்பட 10 நகரங்களில் நடத்திய ஆய்வில், பள்ளி செல்லும் மாணவர்கள் 13 வயது முதலே புகை மற்றும் மது உள்ளிட்ட போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகி வருவதாக எச்சரித்துள்ளது. டில்லி எய்ம்சின், போதைக்கு அடிமையானவர்களுக்கான தேசிய சிகிச்சை மையத்தைச் சேர்ந்த டாக்டர் அஞ்சு தவான் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. டில்லி, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், உள்ளிட்ட 10 நகரங்களின் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் எட்டு முதல் […]
எதிர்க்கட்சித் தலைவர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதி சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதியான Takafumi Kadonoக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (15) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று இவ்வாறு Takafumi Kadonவைச் சந்தித்தார். நாடு வங்குரோத்து நிலையைச் சந்தித்த வேளை, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியான்மைகள் மற்றும் தொழில்முனைவோரை தொழில் ரீதியாக கட்டியெழுப்புவதற்கு ஆசிய அபிவிருத்தி […]
தேவிபுரம் பிரதேசத்தில் புதையல் தோண்டிய அறுவர் கைது
புதுக்குடியிருப்பு – தேவிபுரம் பிரதேசத்தில் புதையல் தேடும் நோக்கில் காணியொன்றில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த நான்கு சந்தேக நபர்களும், இரண்டு பெண் சந்தேக நபர்களும் அகழ்வு உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் 35 முதல் 48 வயதுக்கு இடைப்பட்ட அநுராதபுரம், இனாமலுவ, மொரகொட மற்றும் கலேவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். பெண் சந்தேக நபர்கள் 36 மற்றும் 45 […]