பெங்களூரு, மும்பை உட்பட 10 நகரங்களில் 13 வயதிலேயே போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்

டில்லி எய்ம்ஸ் மருத்துவ ஆய்வு நிறுவனம் பெங்களூரு, மும்பை உட்பட 10 நகரங்களில் நடத்திய ஆய்வில், பள்ளி செல்லும் மாணவர்கள் 13 வயது முதலே புகை மற்றும் மது உள்ளிட்ட போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகி வருவதாக எச்சரித்துள்ளது.

டில்லி எய்ம்சின், போதைக்கு அடிமையானவர்களுக்கான தேசிய சிகிச்சை மையத்தைச் சேர்ந்த டாக்டர் அஞ்சு தவான் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. டில்லி, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், உள்ளிட்ட 10 நகரங்களின் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் எட்டு முதல் பிளஸ் 2 வரையிலான 5,920 மாணவர்களிடம், 2018 மே முதல் 2019 ஜூன் வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இருப்பினும் ‘நேஷனல் மெடிக்கல் ஜர்னல் ஆப் இந்தியா’ இதழில் தற்போது தான் அந்த ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: உயர் வகுப்புகளுக்கு செல்ல செல்ல போதைப்பொருள் பயன்பாடு அதிகரிக்கிறது. எட்டாம் வகுப்பைவிட பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தும் வாய்ப்பு இரு மடங்கு அதிகமாக உள்ளது.

பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் அறிமுகமாகும் ஆரம்ப சராசரி வயது, 13 ஆக உள்ளது. ரசாயனத்தை சுவாசித்து போதை அனுபவிப்பவர்கள் ஆரம்ப வயது, 11; ஹெராயின் பயன்படுத்தும் மாணவர்களின் ஆரம்ப வயது 12; போதை மாத்திரை பயன்படுத்து பவர்களின் ஆரம்ப வயது 12.5 ஆக உள்ளது.

எளிதாக கிடைக்கும் போதைப்பொருட்கள் குறித்து மாணவர்களிடம் நடத்திய ஆய்வில், 46.3 சதவீத பேர் புகையிலை, 36.5 சதவீதம் பேர் மது, 21.9 சதவீதம் பேர் பாங் எனப்படும் மது வகை, 16.1 சதவீதம் பேர் கஞ்சா, 15.2 சதவீதம் பேர் சுவாசிக்கும் போதை வஸ்துகள் எளிதாகக் கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது.

மாணவியரை விட மாணவர்களிடம் போதைப்பொருள் பயன்பாடு அதிகம் உள்ளது. ஆய்வில் பங்கேற்ற மாணவர்களில் 40 சதவீத பேர், தங்கள் குடும்பத்தில் புகையிலை அல்லது மது பயன்படுத்தும் உறுப்பினர் உள்ளதாக கூறினர். 95 சதவீத மாணவர்கள் ‘போதைப்பொருள் தீங்கு விளைவிக்கும்’ என ஒப்புக்கொள்கின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

aaa

மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும்

September 13, 2026

பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பை எடையை கணிசமாகக் குறைக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு

wat

வறட்சியான வானிலை – 43,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகம்!

September 13, 2026

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட 43,221 குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

photo-collage.png

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் பேரணி!

September 13, 2026

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

image-483-edited (1)

“தனித்துப் போட்டியிட்டாலும் தவெக அரசுக்கான ஆதரவு தொடரும்; ஆட்சிக்கு பாதிப்பில்லை!” – பெ. சண்முகம் விளக்கம்

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் இடதுசாரி கட்சிகள் தனித்துக் களமிறங்கினாலும், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து

dailythanthi_2026-09-13_zjqobfer_State-01

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவு: ஆளுநர் அர்லேகருடன் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சந்திப்பு!

September 13, 2026

சென்னை: 17-வது தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்

dailythanthi_2026-08-25_1ha14b7k_CHENNAI-06

“முதலமைச்சர் விஜய் மீது நம்பிக்கை உள்ளது!” – நடிகை கஸ்தூரி

September 13, 2026

சென்னை: ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் கலந்துகொண்ட நடிகை கஸ்தூரி, தவறு செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை

26-6aa6392b9a6cd

அமைச்சர் நிர்மல்குமார் குறித்துச் சர்ச்சை பேச்சு: திமுக எம்.பி. ஆ. ராசா மீது தவெக காவல் துறையில் புகார்!

September 13, 2026

சென்னை: சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் குறித்துச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ. ராசா

thara

5 முனைப் போட்டியால் சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ளது!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால், தேர்தல் களம்

1200-675-27028368-thumbnail-16x9-veerapandiyan

இடைத்தேர்தலில் தனித்துக் களமிறங்கும் இடதுசாரிகள்: தவெக ஆதரவுக் கோரிக்கையை நிராகரித்தது சிபிஐ!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், எந்தக் கூட்டணியிலும் இடம்பெறாமல் இடதுசாரி கட்சிகள் (CPI & CPM)

page

இடைத்தேர்தல் களம்: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக

Screenshot 2025-07-30 100024

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குத் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

images - 2026-09-13T134857.284

“கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வருவார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

September 13, 2026

நாகர்கோவில்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்கள் வரக்கூடிய நாள்களில் அதிகாரப்பூர்வமாகத்