சுகாதார பரிசோதகர்களின் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த இருவர் கைது!
வவுனியாவில் சுகாதார பரிசோதகர்களின் நடவடிக்கைக்கு இடையூறை ஏற்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியாவில் பெய்து வந்த மழை காரணமாக வெள்ளநீர் தேங்கி நிற்பதால் டெங்கு நுளம்பு பரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் டெங்கு நுளம்பினை கட்டுப்படுத்தும் விஷேட வேலைத்திட்டத்தை சுகாதார பரிசோதகர்கள் முன்னெடுத்துள்ளனர். இதன் ஒரு கட்டமாக வவுனியா, பட்டாணிச்சூர் முதலாம் ஒழுங்கையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டபோது குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றை பரிசோதனை செய்யும் […]
மொன்றியல் காவல்துறை கண்காணிப்பை அதிகரிப்பு
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் ஹனுக்கா (Hanukkah) பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, மொன்றியல் காவல்துறை யூதச் சமூகக் கொண்டாட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் தங்கள் “கண்காணிப்பையும் இருப்பையும்” உடனடியாக அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நடந்த இந்தத் தாக்குதலில் 15 நபர்கள் உயிரிழந்ததுடன் 38 நபர்கள் காயமடைந்தனர். இது யூத-எதிர்ப்புப் பயங்கரவாதச் செயல் என்று அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சர்வதேச அளவில் நடந்த இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தைத் தொடர்ந்து, மொன்றியல் நகர மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் […]
அனர்த்த நிவாரணப் பணிகளுக்கு கம்பவாரிதி இ. ஜெயராஜ் நன்கொடை
அனர்த்த நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்துவதற்காக அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஸ்தாபகர் கம்பவாரிதி இ. ஜெயராஜ் நன்கொடையாக ஒரு தொகை பணத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமிடம் இன்று திங்கட்கிழமை(15) அவரது அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
கனடாவில் நிரந்தர குடியுரிமை; அரசாங்கம் முக்கிய அறிவிப்பு
கனடாவில் நிரந்தர வதிவிடத்தை எதிர்பார்போருக்கு அரசாங்கம் முக்கிய ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுமார் 6,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமத்திற்கு விண்ணப்பிக்க கனடா அழைப்பு விடுத்துள்ளது. கனடா அரசு, கனேடியன் எக்ஸ்பிரியன்ஸ் க்ளாஸ் எக்ஸ்ப்ரஸ் என்ட்ரி (Canadian Experience Class Express Entry) திட்டத்தின் கீழ், வெளிநாட்டுத் திறமையான தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமத்திற்கான விண்ணப்ப அழைப்புகளை வழங்கியுள்ளது. இதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் இதுவரை 100,000 க்கும் மேற்பட்ட நிரந்தர வதிவிட உரிமங்களைக் […]
’ஏகே 64’ படத்தில் இணையும் பிரபல நடிகை
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் அஜித்குமார் ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட்டாக அமைந்தது. இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், பிரபு, பிரசன்னா, திரிஷா என பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றி தொடர்ந்து மீண்டும் அஜித்குமாரின் புதிய படத்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார். இது அஜித்குமாரின் 64-வது படமாகும். இந்த படத்திற்கு தற்காலிகமாக “ஏகே 64” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி […]
மீண்டும் சினிமாவில் ’காதல்’ பட நடிகை
கடந்த 2004-ம் ஆண்டு வெளியான காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சந்தியா. படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் சந்தியாவையும் சினிமா உலகில் உச்சத்துக்கு கொண்டு சென்றது. முதல் படத்திலேயே அசாத்தியமான நடிப்பை கொடுத்த சந்தியா டிஸ்யூம், வல்லவன் உள்பட பல படங்களில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த சந்தியா கடந்த 2015-ம் ஆண்டு சாப்ட்வேர் துறையில் பணியாற்றும் சந்திரசேகரன் […]
மண்சரிவால் அழிந்த ஒரு வீட்டு உரிமையாளரிடம் மீட்ட நகைகள், பணத்தை ஒப்படைத்த படையினர்!
ஹங்குரான்கெத்த பிரதேச செயலக அலுவலகத்துடன் இணைக்கப்பட்ட இலங்கை இராணுவப் படையினர், மண்சரிவால் வீடு முற்றிலுமாக அழிக்கப்பட்ட ஒரு வீட்டு உரிமையாளரிடம் மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை ஒப்படைத்தனர். டத்தப்பட்ட துப்புரவு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளின் போது, பாதிக்கப்பட்ட வீட்டின் இடிபாடுகளில் இருந்து சுமார் 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், ரூ. 300,000 ரொக்க பணத்தைபடையினர் மீட்டனர். மீட்கப்பட்ட மதிப்புமிக்க பொருட்கள் அப்பகுதியில் வசிப்பவர்கள் முன்னிலையில் கவனமாக உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இரண்டு நாள் பாராளுமன்ற விவாதம் ஒன்றை வழங்க வேண்டும் ; ஹரின் பெர்ணான்டோ
நாட்டில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பான உறுதியான தகவல்களை அறிந்துகொள்ளவும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆராயவும் அரசாங்கம் இரண்டு நாள்பாராளுமன்ற விவாதம் ஒன்றை வழங்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிச் செயலாளர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், நாட்டில் இயற்கை அனர்த்த நிலை ஏற்பட்டு 18 நாட்கள் […]
அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யவுள்ளதாக அறிவிப்பு
அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றுக்கு இன்று திங்கட்கிழமை (15) அறிவித்துள்ளது. அதிக விலை பெறுமதிகளின் கீழ் உடனடி விலைமனுக்கோரலை செயற்படுத்தியதன் மூலம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்தின் சந்தேகநபராக முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பெயரிடப்பட்டுள்ளார். இந்நிலையில், அர்ஜுன ரணதுங்கவை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வட மாகாணத்தில் திடீரென ஒன்றுகூடிய கடற்தொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள்
இந்திய தூதரகம் அகற்றப்பட வேண்டும் என்பது குறித்த கடற்தொழிலாளரின் தனிப்பட்ட கருத்தே தவிர ஒட்டு மொத்த வடக்கு மாகாண கடற்தொழிலாளர்களின் கருத்தாக அமையாது என்று வட மாகாண கடற்தொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். வட மாகாண கடற்தொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சந்திப்பு ஒன்றினை நடத்தி இருந்தார்கள். இதன்போது அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்திய கடற்தொழிலாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கடற்தொழிலாளர் ஒருவர் இந்திய தூதரகத்தை யாழ்ப்பாணத்திலிருந்து […]