பிரதமர் மோடியை சந்திக்க உள்ள மெஸ்ஸி!
அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி 38. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் ‘பிபா’ உலக கோப்பை வென்றது. இதையடுத்து, இந்தியாவில் மெஸ்சியின் அர்ஜென்டினா அணி பங்கேற்கும் ‘நட்பு’ போட்டிக்கு, கேரளா மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. கடைசியில் இப்போட்டி ரத்தானது. இருப்பினும், ‘இந்தியா டூர் 2025’ என்ற திட்டத்தின் படி, மூன்று நாள் பயணமாக, டிசம்பர் 13, அதிகாலை 1:30 மணிக்கு இந்தியா வருகிறார். இவரது நீண்ட கால கிளப் அணி நண்பர், […]
பாரா சைக்கிளிங் கோப்பையில் இந்தியாவுக்கு 11 பதக்கம்
பாரா சைக்கிளிங் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு 11 பதக்கங்கள் கிடைத்தன. லிசா 4 பதக்கம் கைப்பற்றினார். தாய்லாந்தில் பாரா சைக்கிளிங் கோப்பை போட்டிகள் நடந்தன. மலேசியா, சீனா உட்பட 12 நாடுகளை சேர்ந்த நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 10 பேர் களமிறங்கினர். தனிநபர் ‘டைம் டிரையல்’ (1 கி.மீ.,) பிரிவில் இந்திய வீராங்கனை லிசா தாஸ் 15, (அசாம்) வெள்ளிப்பதக்கம் வென்றார். விஷ்வா 16, (குஜராத்) வெண்கலம் கைப்பற்றினார். 200 மீ., ஸ்பிரின்ட் பிரிவில் லிசா, […]
பல்கலையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி
அமெரிக்காவில் உள்ள கென்டக்கி பல்கலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் உள்ள கென்டக்கி பல்கலையில் மர்மநபர் ஒருவர் திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. பல்கலையில் துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியில் சீல் வைக்கப்பட்டு, போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இருப்பினும் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் […]
நாளைய வானிலை
வளிமண்டளவியல் திணைக்களம் இன்று புதன்கிழமை (10) மாலை 4 மணிக்கு, 10 நகரங்களுக்கு வானிலை முன்னறிவித்தலை விடுத்துள்ளது. அந்த 10 நகரங்களிலும் நாளை (11) ஆம் திகதியன்று ஆகக் குறைந்த மழைவீழ்ச்சி 65 மில்லிமீற்றராகவும் ஆகக் கூடிய மழைவீழ்ச்சி 95 மில்லிமீற்றராகவும் இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.
யாழ். நீதிமன்றம் கோட்டாவுக்கு அதிரடி உத்தவு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது எதிர்கொள்ளும் கொலை மிரட்டல்கள் குறித்து 2026 பபெப்ரவரி 6, ஆம் திகதிக்கு முன்னர் பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என்று யாழ்ப்பாண நீதவான் உத்தரவிட்டார். மரண மிரட்டல்கள் காரணமாக நீதிமன்றங்களில் ஆஜராக முடியவில்லை என்று கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னணி சோசலிசக் கட்சியின் (FSP) செயற்பாட்டாளர்களான லலித் குமார் மற்றும் குகன் வீரராஜு ஆகியோர் 14 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் […]
மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்களை நிர்மாணிக இடமளிக்கப்பட மாட்டாது – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
கொழும்பு மாவட்டத்தினுள் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதியளிப்பதற்கோ அல்லது அபிவிருத்தியின் பெயரால் மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்களை நிர்மாணிப்பதற்கோ ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2025 டிசம்பர் 09ஆம் திகதி கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற, கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்: கொழும்பு மாவட்டம் வெள்ள நிலைமையால் இவ்வளவு தூரம் ஆபத்துக்குள்ளாகியிருப்பதற்கு, […]
நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் சஜித் பிரேமதாச பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார்!
டித்வா சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸ் (Andalib Elias) அவர்களை இன்று (10) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்தார். பங்களாதேஷுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால பரஸ்பர நட்புறவை மேலும் மேம்படுத்திக் கொள்ளும் முகமாக இடம்பெற்ற இந்த சந்திப்பில், இலங்கை எதிர்கொண்ட சகல இக்கட்டான தருணங்களிலும் பங்களாதேஷ் நமது நாட்டோடு நெருக்கமாக செயற்பட்டமைக்கு ஒட்டுமொத்த இலங்கையர்களின் சார்பாகவும் எதிர்க்கட்சித் […]
சூறாவளிப்பேரழிவு 1,168 குழந்தைகள் பாதுகாப்பு மையங்களில்
தித்வா சூறாவளியால் ஏற்பட்ட ஏராளமான பேரழிவுகளுக்குப் பிறகு பதுளை மாவட்டத்தில் நிறுவப்பட்ட தங்குமிடங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட 1,168 குழந்தைகள் (565 சிறுவர்கள் + 603 சிறுமிகள்) மற்றும் பதினெட்டு வயதுக்குட்பட்ட 5259 பேர் (2552 சிறுவர்கள் + 2707 சிறுமிகள்) இருப்பதாக பதுளை மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 2284 பெரியவர்கள் (1000 ஆண்கள் + 1284 பெண்கள்) இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து, மாவட்டத்தில் உள்ள 141 தங்குமிடங்களில் 5745 குடும்பங்களைச் […]
சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிரானவர்: மணல் ரிப்பர் மோதி பலி
கிளிநொச்சியில் திருவையாறு பகுதியில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக செயற்பட்டு வந்தவர் இன்று (10) மணலுடன் வந்த ரிப்பர் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இச் சம்பவத்தில் திருவையாறு பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் சோபனாத் வயது 35 என்பவரே பலியாகியுள்ளார். கிளிநொச்சி நகரிலிருந்து இரணைமடு நோக்கி தனது மனைவியுடன் உந்துருளியில் பயணித்தவர் வில்சன் வீதி மொட்டை பாலத்திற்கு அருகில் வீதியின் ஓரமாக உந்துருளியை நிறுத்த முற்பட்ட போது அவரை பின் தொடர்ந்து மணலுடன் வந்த […]
பரந்தன் – முல்லைத்தீவு பாலம் புனரமைப்பைப் பார்வையிட்ட இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி!
பரந்தன் – முல்லைத்தீவு A-35வீதியின் பதினோறாவது கிலோமீற்றரிலுள்ள பாலமானது கிளிநொச்சி மாவட்டத்தின் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய இராணுவத்தினரின் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் யாழ். இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி உள்ளிட்ட குழுவினர் குறித்த பகுதியை பார்வையிட்டு இந்திய இராணுவத்தினருடன் கலந்துரையாடிருந்தார். இந்த களவிஜயத்தின் போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதம பொறியியலாளர், கிளிநொச்சி இராணுவ உயரதிகாரிகள் கடற்தொழில் அமைச்சின் செயலாளர் […]