நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்திற்கு ஜனாதிபதி பொறுப்பாகமாட்டார் – ஜீவன்

நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்ததிற்கு நாட்டின் ஜனாதிபதி பொறுப்பு கிடையாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார் எனவே பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மஸ்கெலியா சாமிமலை பெயாலோன் தோட்டப் பகுதியில் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டு அங்குள்ள பாடசாலையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள 47 குடும்பங்களை சேர்ந்த 132 பேரை பார்வையிட்டதன் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மவையக பெருந்தோட்ட பகுதிகளில் […]

நுவரெலியா மண்மேடு அகற்றும் பணி தொடர்கிறது…

நுவரெலியா – பூண்டுலோயா பிரதான வீதியில் வாகன போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக குறித்த வீதியில் பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து வீழந்தன. அத்துடன் மரங்களும் முறிந்து வீழ்ந்தமையினால் அந்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது பொலிஸார் ,பொது மக்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் இணைந்து வீதியில் சரிந்துள்ள மண்மேடு மற்றும் மரங்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது […]

வெற்றி தோல்வியின்றி நியூஸிலாந்துடனான டெஸ்டை முடித்துக்கொண்டது மே. தீவுகள்

நியூஸிலாந்துக்கு எதிராக கிறைஸ்ட்சேர்ச் ஹெக்லே விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாளன்று ஜஸ்டின் க்றீவ்ஸ் குவித்த இரட்டைச் சதத்தின் உதவியுடன் அப் போட்டியை மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது. ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது மேற்கிந்தியத் தீவுகள் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 457 ஓட்டங்களைக் குவித்திருந்தது. இதன் மூலம் தனது 6ஆவது டெஸ்டில் முதலாவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளை மேற்கிந்தியத் தீவுகள் பெற்றுக்கொண்டது. போட்டியின் கடைசி நாளான நேற்று […]

2026; பீபா உலகக் கிண்ணம்

வொஷிங்டன் டிசி கென்னடி நிலையத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (05) உத்தியோகபூர்வமாக நடைபெற்ற பீபா உலகக் கிண்ணம் 2026க்கான பகிரங்க குலுக்கலின்போது பங்குபற்றவுள்ள அணிகள் எந்தெந்த குழுக்களில் இடம்பெறும் என்பது தீர்மானிக்கப்பட்டது. ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப், ஜனாதிபதி குளோடியா ஷெய்ன்போம், பிரதமர் மார்க் கார்னி ஆகிய மூவரும் பீபா உலகக் கிண்ணம் 2026ஐ முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடுகளின் தலைவர்கள் என்ற வகையில் பகிரங்க குலுக்கலின்போது பிரசன்னமாகி இருந்தனர். பகிரங்க குலுக்கலின் பிரகாரம் பிறேஸில் – மொரோக்கோ, […]

மாத்தறை ஊடகவியலாளர்கள் அமைப்பின் “பாசத்தின் கரங்கள்” நிவாரணத் திட்டம்

மாத்தறை ஊடகவியலாளர்கள் அமைப்பினால், நாடு முழுவதும் வெள்ளம் மற்றும் மண் சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை வழங்கும் ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கொழும்பு மாவட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட உதவிகள் நேற்று (06) மாலை பொல்ஹேனகொடையில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் வழங்கப்பட்டன. இந்த நிவாரணத் திட்டமானது “செனஹசே அத்வெல” (பாசத்தின் கரங்கள்) எனப் பெயரிடப்பட்டுள்ளது. […]

தித்வா புயல்; புசல்லாவையில் தொடரும் மண்சரிவு அபாயம்

தித்வா புயல் காரணமாக மலையகப் பகுதிகளில் ஏற்பட்ட அனர்த்தத்தில் புசல்லாவை பிரதேசம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கம்பளையிலிருந்து புசல்லாவைக்கு செல்லும் மார்க்கத்தில் இரட்டைப்பாதை பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதற்கப்பால் வவுக்கப்பிட்டிய பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய மண்சரிவால் அப்பிரதேசம் வரை மாத்திரமே வாகனங்கள் செல்ல முடியும். அதே போன்று நுவரெலியாவிலிருந்து வரும் மார்க்கத்தில் தவலந்தன்னை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அவ்வழியும் மூடப்பட்டிருப்பதால் நுவரெலியா – கண்டி மார்க்கம் கடந்த ஒன்பது நாட்களாக மூடப்பட்டுள்ளது.   கடந்த 28ஆம் […]

‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை காலமானார்

இலங்கையின் தலைசிறந்த பேச்சாளரான முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை தனது 98ஆவது வயதில் சென்னையில் காலமானார். அவர் 1956ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையும் அவருக்குச் சேரும். மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்த அவர், பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மேல் நிலைக் கல்வியை நிறைவு செய்தார். ஊடகவியலாளராகவும் செயல்பட்ட இராஜதுரை, ‘சுதந்திரன்’ பத்திரிகையின் […]

மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மர்ம படிக்கட்டுகள்?

சிவனொளிபாதமலை – ஹட்டன் வீதியில் உள்ள மஹாகிரிதம்ப பகுதியில் மண் மேடு இடிந்து விழுந்ததில், சிவனொளிபாதமலை தரிசிப்பதற்காக முந்தைய கால யாத்ரீகர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இரும்பு படிக்கட்டு மற்றும் பாதுகாப்பு சங்கிலி கண்டுபிடிக்கப்பட்டதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் வேந்தர், சபரகமுவ இரத்தினபுரி மாவட்டத்தின் தலைமை சங்க நாயகர் மற்றும் பெல்மடுலு தாகப் ராஜமஹா விஹாராதீஸ்வர பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன தேரர் தெரிவித்தார். இந்த வீதியில் சுமார் 20 அடி நீளமுள்ள இரும்பு படிக்கட்டில் 10 அடி நீளமுள்ள […]

தாமரைக்கேணி நாற்சந்தியில் பிக்கப் வாகனம் மோதியதில் பெண் பலி

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள தாமரைக்கேணி, சவுக்கடி வீதி, நாற்சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பிக்கப் வாகனமொன்றில் மோதுண்டு குடும்பப் பெண் ஒருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர். சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இவ்விபத்தில் ஏறாவூர் மீராகேணி, நேயம் கிராமத்தைச் சேர்ந்த ரீ. சாமிளா (வயது 46) என்ற இரு பிள்ளைகளின் தாயே பலியாகியுள்ளார், சம்பவ தினம் பகல் உணவுக்காக அவர் சவுக்கடியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்று பகல் உணவை முடித்து […]

சுமத்ரா தீவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு; 900 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேவேளை, பட்டினியால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தென்கிழக்கு மற்றும் தெற்காசியாவை வெப்பமண்டல புயல்கள் மற்றும் பருவமழை சங்கிலித்தொடராகத் தாக்கி, சுமத்ரா மழைக்காடுகளிலிருந்து இலங்கையின் மலைப்பகுதித் தோட்டங்கள் வரை நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குகளைத் தூண்டியுள்ளது. கடந்த வாரத்தில் இந்தோனேசியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் முழுவதும் ஏற்பட்ட இயற்கை […]