மதுபானம் மற்றும் கோடாவுடன் 3 சந்தேக நபர்கள் கைது!
மினுவாங்கொடை – பன்சில்கோட பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மினுவாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சனிக்கிழமை (06) இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. 3755 லீற்றர் (30 பீப்பாய்கள்) கோடா, 90 லீற்றர் (120 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் 40, 42 மற்றும் […]
யாழ். தமிழர் சத்திரசிகிச்சைப் பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவராகத் தெரிவு
அமெரிக்க சான்போட் மருத்துவக் கல்லூரியின் உலகப் புகழ்பெற்ற சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சைப் பேராசிரியரும், மருத்துவ நிபுணருமான தவம் தம்பிப்பிள்ளை சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாணம் – கைதடியைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் தவம் தம்பிப்பிள்ளை 2023ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முதன்முதலாக சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சையை ஆரம்பித்து வைத்தார். அதன் பின்னர் பல சிறுநீரக மாற்றுச் சத்திரச் சிகிச்சைகளை இவர் வெற்றிகரமாக நிறைவேற்றினார். அமெரிக்க மருத்துவ உதவி நிதியம் […]
இடர் நெருக்கடியை கருத்தில் கொள்ளாமல் இந்திய மீனவர்கள் எமது கடற்பகுதிக்குள் அத்துமீறுவது நியாயமில்லை
வெள்ள இடரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு இந்தியா ஒரு புறத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், மறுபுறத்தில் இந்திய மீனவர்கள் இந்த இடர் நெருக்கடியையும் கருத்தில் கொள்ளாமல் எமது கடற்பகுதிக்குள் அத்துமீறி எங்கள் கடல் வளங்களை அள்ளிச் செல்கிறார்கள். இது நியாயமற்றது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். எனவே, இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்த எமது மீனவர்களும் அமைச்சும் இணைந்த விசேட ‘ஒப்பரேஷன்’ ஒன்று முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார். ஊடகம் […]
சர்வதேச நாணய நிதியத்தின் 5வது கடனைப் பெறுவதில் நெருக்கடியை
சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது கடன் தவணையை பெறுவதில் அரசாங்கம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. அரசாங்கம் முன்வைத்த வெள்ள நிவாரணத்திற்கான சுமார் 70 பில்லியன் ரூபா ஒதுக்கீட்டை சர்வதேச நாணய நிதியம் அங்கீகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக குழு கூட்டம் எதிர்வரும் 15ம் திகதி திங்கட்கிழமை வாஷிங்டனில் நடைபெறவுள்ளது. இலங்கைக்கு ஐந்தாவது கடன் தொகையை விடுவிப்பது குறித்து இறுதி முடிவு இதன்போதே எடுக்கப்பட உள்ளது. வெள்ள நிவாரணத்திற்காக சுமார் 70 […]
யாழில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிஇ ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு
இலங்கை தமிழ் அரசுக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (7) சந்திப்பு நடைபெற்றது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டை கருத்திற்கொண்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றது. இந்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் […]
“பாதுகாப்பு மையங்களில்” உள்ள இலங்கை மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் உதவி
வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்டு தற்போது “பாதுகாப்பு மையங்களில்” உள்ள இலங்கை மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் “செயல்படுத்தப்பட்ட துணை ஊட்டச்சத்து உணவாக” தயாரிக்கப்பட்ட10.02 மெட்ரிக் தொன் எடையுள்ள பிஸ்கட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று அனுப்பப்பட்டன. இவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தற்போது பாதுகாப்பு மையங்களில் உள்ள மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உலக உணவுத் திட்டத்துடன் அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் கூட்டாக ஏற்பாடு செய்யப்படும் இந்த திட்டத்தின் கீழ், 3.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் மதிப்புள்ள […]
சூறாவளி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இறந்த கால்நடை விபரம்!
அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் சூறாவளி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 4,000 கோழிகளும் 400 மாடுகள் 400 ஆடுகள் இறந்திருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட கால்நடை அபிவிருத்தி சுகாதார திணைக்கள உதவி பணிப்பாளர் டாக்டர் ஏ எம் அப்துல் ஹாதி தெரிவித்தார் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் அனர்த்த நிலை காரணமாக கால்நடைகள் இறந்துள்ளன வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கான விசேட மருத்துவ முகாம் வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கட்டுமுறிவு, ஆண்டாள் குளம்,கதிரவெளி ஆகிய […]
நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் கப்பலில் வந்த கள்ள சிகரெட்டுகள்
யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் வசப நிறுவனத்தினால் நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த 09 சந்தேகத்திற்கிடமான […]
மீட்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு; அமெரிக்க விமானப்படையின் C-130 விமானங்கள் இலங்கையை வந்தடைந்தன
அமெரிக்க விமானப்படையின் சி-130 ரக விமானங்கள் ‘தித்வா’ சூறாவளி நிவாரணப் பணிகளுக்காக இஇலங்கையை வந்தடைந்தன. ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க விமானப்படையின் இரண்டு சி-130 ரக விமானங்கள் இன்று (டிசம்பர் 07, 2025) இலங்கைக்கு வந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்த விமானங்கள் விசேட பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய திறன்களுடன் […]
67 வயதான கணவரை உலக்கையால் தாக்கி; கொன்ற மனைவி
பெண் ஒருவர் தனது 67 வயதான கணவரை தலையில் உலக்கையால் அடித்து கொலை செய்ததாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர் ஆனந்த சிசிரகுமார (67), இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவர், ரஜரட்ட ரட அபிவிருத்தி வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்று மிஹிந்தலை கிரிந்தேகமவில் வசித்து வந்தார். குடும்ப தகராறு அதிகரித்தபோது, மனைவி வீட்டிற்குள் இருந்த உலக்கையால் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர், அவரது குடும்பத்தினரால் மிஹிந்தலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக […]