அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை செந்தில் தொண்டமான் பார்வை!

ஹப்புதலை பிட்ராத்மலை தோட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 115 குடும்பங்களை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் பார்வையிட்டார். தோட்ட மக்களை சந்தித்த நிலையில் அனர்த்தம் ஏற்பட்ட தினத்திலிருந்து தாங்கள் முகாம்களில் தங்க வைத்திருப்பதாகவும், தங்களுக்கான மாற்று இடங்கள் எதுவும் இதுவரை வழங்கப்படாததாகவும், தாங்கள் ஏற்கனவே தங்கியிருந்த இடங்கள் பாதுகாப்பானதா என இன்னும் NBRO உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் செந்தில் தொண்டமானிடம் தோட்ட மக்கள் முறைப்பாடு செய்தனர். இந்நிலையில் தோட்ட முகாமையாளரை உடனடியாக தொடர்புக் கொண்ட செந்தில் தொண்டமான், […]
கடற்படையினரின் பணி தொடர்கிறது

இலங்கை கடற்படையினர் நாயாறு களப்பின் ஊடாக பிரதேச மக்கள், அரச அதிகாரிகள், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பிரிவினரின் உறுப்பினர்களை பாதுகாப்பாக மறு முனைக்கு கொண்டு செல்லும் பணியில் இன்றும் (2025 டிசம்பர் 07) ஈடுபட்டுள்ளனர். By C.G.Prashanthan
மக்களை தங்கவைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த 53 இடைத்தங்கல் முகாம்கள் மூடல்?

யாழ். மாவட்டத்தில் அனர்த்த நிலைமைகளின்போது மக்களை தங்கவைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த 53 இடைத்தங்கல் முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலர் ம.பிரதீபன் கூறியுள்ளார். தற்போது 6 முகாம்களில் மட்டுமே மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த மாவட்டத்தில் மொத்தமாக 59 முகாம்கள் இயங்கிவந்த நிலையில், அவற்றில் பெருமளவு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தென்மராட்சி பிரதேசத்தில் மட்டும் 6 முகாம்கள் இயங்கிக்கொண்டிருப்பதாகவும், மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்கியுள்ள வெள்ளம் வடிந்த பின்னர் மக்கள் தம் இருப்பிடங்களுக்கு திரும்புவர் எனவும் மாவட்டச் செயலர் […]
50 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

அனர்த்தங்களால் 627 பேர் பலி : 190 பேரைக் காணவில்லை; ஒட்டுமொத்தமாக 21 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு. நாட்டில் தற்போது சீரற்ற காலநிலை ஓரளவு குறைவடைந்துள்ளது. எனினும் ஆரம்பித்துள்ள வடகீழ் பருவ பெயர்ச்சி மழை காரணமாக ஏற்கனவே மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் அவ் எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் வசந்த சேனாதீர தெரிவித்தார். அதற்கமைய 5 மாவட்டங்களில் 50 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு […]
பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பண்ணை கடற்பகுதியில் நீச்சலில் ஈடுபட்ட இளைஞர்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் இருவர் ஆபத்தான நிலையில். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யாழ், நகர் பகுதியை அண்டிய பகுதிகளில் வசிக்கும் நான்கு இளைஞர்கள் சிறிய படகொன்றில் பண்ணை கடற்பகுதிக்கு சென்று , படகில் இருந்து குதித்து கடலில் நீச்சல் அடித்த போது அவர்கள் சுழிக்குள் அகப்பட்டு , கடல் நீரில் தத்தளித்த வேளை பண்ணை பகுதியில் நின்றவர்கள் அதனை அவதானித்து, யாழ்ப்பாண பொலிஸாருக்கு […]
வடமராட்சி கடற்கரையில் வெள்ளை நுரை!

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (7) காலை வெள்ளை நுரை கரையொதுங்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எம்.ஜிஆராக மாறிய கார்த்தி!

கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு ‘மெய்யழகன்’ வெளியானது. 96 பிரேம்குமார் இயக்கத்தில் பீல்குட் படைப்பாக வெளியாகி இப்படம் பாராட்டுக்களை குவித்தது. இதனையடுத்து அவரது நடிப்பில் இந்தாண்டு படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில், தற்போது ‘வா வாத்தியார்’ வெளியாகவுள்ளது. நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருப்பில் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கார்த்தி நடிப்பில் உருவாகி வந்தது ‘வா வாத்தியார்’. நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வந்த இந்த படத்தின் ரிலீஸ் […]
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிற்கு தனுஷ் வருகை ?

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிற்கு தனுஷ் வருகை தர இருக்கிறாராம். அதைப்போல பராசக்தி விழாவிற்கு வருகை தரப்போகும் சிறப்பு விருந்தினர் யார் என்பது குறித்தும் பேச்சுக்கள் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய செய்திகள் தான் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. விஜய்யின் கடைசி படத்தின் இசை வெளியீட்டு விழா தமிழகத்தில் இல்லாமல் மலேசியாவில் தான் நடைபெற இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. டிசம்பர் […]
கார் ரேஸிங்கில் அஜித்தை சந்தித்த சிம்பு

அஜித் மலேசியாவில் கார் ரேஸிங்கில் கலந்துகொண்டு வருகின்றார். அவரை அங்கு சென்று நடிகர் சிம்பு சந்தித்திருக்கிறார். அந்த வீடியோ தான் தற்போது ரசிகர்களால் சோஷியல் மீடியாக்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. அஜித் குமார் ஒருபக்கம் படங்கள் மறுபக்கம் கார் பந்தயங்கள் என பிசியாக இருக்கின்றார். தற்சமயம் மலேசியாவில் நடைபெறும் கார் ரேஸிங்கில் கலந்துகொண்டு வருகின்றார் அஜித். அங்கு இயக்குனர்கள் சிவா மற்றும் ஏ.எல் விஜய் ஆகியோரும் அஜித்துடன் இருக்கின்றனர். அஜித் கார் பந்தயங்களில் கலந்துகொள்வதை ஒரு ஆவணப்படமாக […]
ஜோடி சேரும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி!

மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார் படமாக வெளியான ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இதனையடுத்து மீண்டும் அவருடைய டைரக்ஷனில் நடிக்கவுள்ளார். விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக ‘தக் லைஃப்’ ரிலீசானது. கமல் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரியளவில் வரவேற்பினை பெறவில்லை. இதனையடுத்து […]