இந்திய மருத்துவக் குழு வருகை

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான C-130 விமானத்தில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் உற்பட 2 நடமாடும் மருத்துவமனை அடங்கலாக இந்திய மருத்துவக் குழு நேற்று(2025.12.02) நாட்டை வந்தடைந்தது. இதன்போது வருகை தந்த குழுவினரை இந்திய தூதரக அதிகாரிகள் உட்பட இலங்கை விமானப்படை அதிகாரிகளும் வரவேற்றனர். By C.G.Prashanthan

நிவாரணங்கள் அடங்கிய நான்காவது விமானம் நாட்டை வந்தடைந்தது

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நிவாரணங்கள் அடங்கிய நான்காவது விமானம் நாட்டை வந்தடைந்தது. சமீபத்திய ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவுவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து மனிதாபிமான நான்காவது உதவி நிவாரணம்கள் அடங்கிய ஐக்கிய அரபு இராச்சிய விமானப்படைக்கு சொந்தமான C -17 விமானம் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்து . மீட்பு நடவடிக்கைகளுக்காக விசேட பயிற்சி பெற்ற 53 அபுதாபி சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள், புதைக்கப்பட்ட […]

பாராளுமன்றத்தில் அஞ்சலி

பேரனர்த்தத்தால் உயிரிழந்தோருக்காக இன்று பாராளுமன்றத்தில் 1 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. By C.G.Prashanthan

துப்பாக்கிச் சூட்டில் தொழிலதிபர் ஒருவர் பலி

திருகோணமலையில் நேற்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலையில் உள்ள சீன துறைமுக நகர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இந்த துப்பாக்கி பிர​யோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய தொழிலதிபர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மரணத்துக்கான காரணம் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் […]

சீரற்ற வானிலை; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (03) காலை 10.00 மணிக்கு அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் புள்ளிவிபரங்களின்படி, 356 பேர் காணாமல் போயுள்ளனர். இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, 25 மாவட்டங்களிலும் 448,817 குடும்பங்களைச் சேர்ந்த 1,586,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவிற்கு செல்லும் வீதி தற்காலிக புனரமைப்பு…

முல்லைத்தீவு நகருக்கான தற்காலிக பிரதான வீதியாக புதுக்குடியிருப்பு கேப்பாப்பிலவு வீதியில் உள்ள பாரிய குழி தற்காலிகமாக நேற்று (01) மாலை புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு பிரதான வீதியான முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் வெள்ள அனர்த்தம் காரணமாக இரண்டாக பிழந்து கடுமையாக சேதமடைந்துள்ளமையால் இந்த பாதை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. எனவே விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளிலிருந்து பரந்தன் வீதியூடாக முல்லைத்தீவு நோக்கிப் பயணம் செய்பவர்கள் மாற்று வழியாக கேப்பாப்பிலவு வீதியைப் பயன்படுத்துமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் […]

வட்டக்கச்சியூடான போக்குவரத்து…

இரணைமடுக்குளத்தின் வான்கதவு திறந்து விடப்பட்ட நிலையில் கிளிநொச்சியிலிருந்து வட்டக்கச்சி செல்லும் பிரதான வீதி வெள்ள நீர் குறுக்கறுத்து பாய்ந்தமையால் குறித்த வீதி சேதமடைந்துள்ளது. இதனால் வட்டக்கச்சியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்காலிக போக்குவரத்தை மேற்கொள்ளும் நடவடிக்கையில் வீதி அபிவிருத்தி திணைக்களம் ஈடுபட்டுள்ளது.

அனுமதி பத்திரத்துடன் அகழப்பட்ட மணலால் பாதிக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு கட்டைக் காடு!

யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு கட்டைக் காட்டில் அனுமதிப்பத்திரத்துடன் அண்மைக்காலமாக அகழப்பட்ட மணலால் குறித்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. மணல் அகழப்பட்ட பகுதியைச் சுற்றி மக்கள் குடியிருப்பதால் பாரிய குழியில் தற்போது நீர் தேங்கி காணப்படுகிறது. இதனை தடுக்கும் நோக்கிலையே கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகத்தால் குறித்த எல்லைக்குள் மண் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டு ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பிரதேச செயலகத்திற்கும் எழுத்து மூலம் மண் அள்ளுவதற்கான அனுமதி பத்திரத்தை நிறுத்துமாறு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. குறித்த இடத்தில் அதிகமாக […]

நுவரெலியா மாவட்டத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு

மோசமான வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 75 பேர் இறந்துள்ளதாகவும் 62 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார். அவர் நேற்று (1) வெளியிட்ட விசேட உரையில் இதனைக் குறிப்பிட்டார். அவர், தொடர்ந்து கூறுகையில் 2691 குடும்பங்களைச் சேர்ந்த 12304 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1914 குடும்பங்களைச் சேர்ந்த 8654 பேர் 61 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறித்த இடைத்தங்கல் முகாம்கள் நுவரெலியா, வலப்பனை, கொத்மலை, ஹங்குரன்கெத்த, அம்பேகமுவ, […]

கிராம அலுவலர்கள் கறுப்பு பட்டி அணிந்து பணிக்குச் செல்ல தீர்மானம்!

கிளிநொச்சி கிராம அலுவலர்கள் ஒரு வாரத்திற்கு கறுப்பு பட்டி அணிந்து பணிக்குச் செல்ல தீர்மானித்துள்ளனர். உமையாள்புரம் கிராம உத்தியோகத்தர் தியாகராசா கலைரூபன் கடந்த 29.11.2025 அன்று கிளி/பரந்தன் இந்து மகாவித்தியாலய நலன்புரி நிலையத்தில் மாலை 06.10 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாநன் இளங்குமரன் என்பவரால் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு தங்களது எதிர்ப்பினை தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட கிராம அலுவலர்கள் ஒரு வாரத்திற்கு கறுப்பு பட்டி அணிந்து தங்களது கடமைகளை மேற்கொள்ள தீ்ர்மானித்துள்ளனர். ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்க […]