‘தித்வா’ புயல் காரணமாக பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் – அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்

பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் – அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் ‘தித்வா’ புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கைத்தொழில்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, அக்கைத்தொழில்கள் தொடர்பான தரவுகளைப் பெற்றுக்கொள்ளும் பொறிமுறையொன்றை கைத்தொழில் அமைச்சு ஆரம்பித்துள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு இன்று (03) அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய, பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் குறித்து அறிவிப்பதற்காக ‘0712666660’ எனும் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த தரவு கட்டமைப்புக்குத் தேவையான தகவல்களை, பாதிக்கப்பட்ட கைத்தொழிலதிபர்கள் இயலுமான விரைவில் வழங்குமாறு […]

வெள்ள அனர்த்தம்; இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் நிவாரணப்பொருட்கள் வழங்கும் பணிகள்!

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் நிவாரணப்பொருட்கள் வழங்கும் பணிகள்! வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும், முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அரசாங்கத்திற்கு எதிராக பேசக்கூடாது என்ற தோரணையில் எவரும் எங்களை விமர்சிக்ககூடாது. உண்மை வெளிவந்தால்தான் நிவாரணப்பணிகளும் சரியானமுறையில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியில் வெள்ள […]

சீரற்ற காலநிலை; நோய்கள் பரவும் ஆபத்து

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் டெங்கு, சிக்குன்குனியா மற்றும் எலி காய்ச்சல் ஆகிய நோய்கள் பரவும் கடுமையான ஆபத்து உள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் சமில் முத்துகுட மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “அண்மையில் நாட்டைப் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக, எதிர்காலத்தில் கடுமையான தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்படலாம் என சுகாதாரத் துறையினர் என்ற வகையில் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதன்படி, […]

மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

பொருளாதாரத்தில் ஏற்படும் திடீர் அதிர்ச்சிகளைச் சமாளிக்க இலங்கை மத்திய வங்கி தன்னிடம் உள்ள வளத்தை பயன்படுத்தத் தயாராக உள்ளது என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(02.12.2025) நடைபெற்ற 2025 இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சி மாநாட்டில் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், சூறாவளி மற்றும் அதன் பின்விளைவுகள் போன்ற காலநிலை தொடர்பான நிகழ்வுகளால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை மீள கட்டி எழுப்ப முடியும். முந்தைய நெருக்கடிகளை விட எதிர்பாராத அதிர்ச்சிகளை […]

மட்டக்களப்பு A15 வீதி சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்

அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்குக் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு A15 பிரதான வீதியைச் சீரமைக்கும் பணிகள் இன்று (3) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெள்ள அனர்த்தத்தால் துண்டிக்கப்பட்டிருந்த மூதூர் பிரதேசம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான அதிரடி நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ​கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கினால், A15 வீதி பலத்த சேதமடைந்தது. குறிப்பாக, முதூர் […]

வெலிமடையில் மண்சரிவு அபாயம்

வெலிமட, ரஹங்கல மலையில் விரிசல் ஏற்பட்டு வெடித்து மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதால், பொரலந்தை, ரஹங்கல மற்றும் ஹீன்னாரங்கொல்ல ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் இன்று புதன்கிழமை (3) தெரிவித்துள்ளது.

2,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கை வந்தடைந்த மெய்ன் ஷிஃப் 06 கப்பல்

“மீள்தன்மை மற்றும் மீட்சியின் சக்திவாய்ந்த சின்னம்” என வர்ணித்து, இலங்கை சுற்றுலா அதிகாரசபை இன்று புதன்கிழமை (03) 2,000க்கும் மேற்பட்ட சர்வதேச பயணிகளுடன் வருகை தந்த மெய்ன் ஷிஃப் 06 சொகுசு பயணக் கப்பலை வரவேற்றது. “கடந்த வாரம் இடம்பெற்ற இயற்கை பேரழிவிற்குப் பின்னர் முதல் முறையாக பெரிய சொகுசு சுற்றுலா கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. இதன் மூலம் இலங்கை பாதுகாப்பானது, கதவுகளை திறந்துள்ளது மற்றும் மீண்டும் பார்வையாளர்களை வரவேற்கத் தயாராக உள்ளது,” என்ற உலகிற்கு ஒரு […]

“இருள் நீக்கும் வெளிச்சம்…” விசேட சுவிஷேச ஆராதனை

G.V.M. ஊழியத்தின் 7வது வெளிப்படையான ஆராதனைக் கூட்டம் கொழும்பு 09, தெமட்டகொடை சகஸ்புர தொடர்மாடி குடியிருப்பு மண்டபத்தில், பிரதேச மக்களின் பங்களிப்பில் மிக பக்திபூர்வமாக நடைபெற்றது. அப்போஸ்தலர் விஷ்வா தலைமையில் நடைபெற்ற மேற்படி சுவிசேஷ ஆராதனையில், “நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்த சூழ்நிலையில் ஏற்பட்ட பேரிழப்பை தடுக்கவும், அதில் பாதிக்கப்பட் மக்களை இழப்பிலிருந்து மீண்டு வரவும், “இருள் நீக்கும் வெளிச்சம்” என்ற வாக்கிற்கிணங்க சர்வ வல்லமையும் பொருந்திய இயேசு கிறிஸ்துவிற்கு விசேட பிரார்த்தனையும், சுவிசேஷ ஆராதனைகளும் இடம்பெற்றது. […]

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடக சந்திப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இன்றைய தினம் கொழும்பில் உள்ள கட்சித் தலைமையகமான சௌமிய பவனில் ஊடக சந்திப்பு ஒன்று நடத்தினார். இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 4 லட்சம் குடும்பங்களுக்கு, மறைந்த முன்னாள் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் நினைவாக – “சௌமிய தான யாத்திரா” என்ற திட்டத்தினூடாக, வடக்கில் பருத்தித் துறையில் இருந்து தெற்கில் தெய்வேந்திர முனைவரை உள்ள அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் உலர் […]

இம்ரான் கானை மன ரீதியாக சித்திரவதைக்குள்ளாக்குகின்றனர்!

சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நலமுடன் உள்ளார், ஆனால், அவரை மன ரீதியாக சித்திரவதைக்கு ஆளாக்குகின்றனர் என்று அவரது சகோதரி உஸ்மா கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் தெஹ்ரிக் இ இன்சாப் என்ற பெயரில் கட்சி ஒன்றை நடத்தி வருகிறார். பதவியில் இருந்த போது, தமக்கு கிடைத்த பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் மனைவியுடன் சேர்ந்து விற்பனை செய்து சொத்துகள் சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதவிர மேலும் […]