விமான நிலையத்தில் 3 வர்த்தகர்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு கோடி 78 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மூன்று சந்தேக நபர்களும் விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அபராதம் விதிப்பு அவர்கள் அளுத்கம, யட்டியந்தோட்டை மற்றும் மாவனெல்ல பகுதிகளில் வசிக்கும் மூன்று வணிகர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களின் பொதிகளில் இருந்து 119,000 பிளாட்டினம் […]

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவருக்குப் பாலியல் துன்புறுத்தல் உண்மைக்குப் புறம்பானது?

நாடாளுமன்ற ஊழியர் ஒருவர் தகவல் முறைமை மற்றும் முகாமைத்துவத் திணைக்களத்தைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவருக்குப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் உண்மைக்குப் புறம்பானது எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சுஜாதா அழகப்பெரும தயாரித்த அறிக்கை மூலம் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை நேற்று முன்தினம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதுடன், தகவல் முறைமை மற்றும் முகாமைத்துவத் திணைக்களத்தின் எந்த அதிகாரிக்கும் பாலியல் துன்புறுத்தல் […]

வெள்ளத்தில் மூழ்கும் கிழக்கு மாகாணம்

கந்தளாய் பிரதேசத்தில் நேற்று(25) இரவிலிருந்து பெய்து வருகின்ற மழை காரணமாக பேராறு இரண்டாம் கொலனி, மூன்றாம் கொலனி, மதுரசா நகர் போன்ற தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்தோடு,வடிகான்களிலும் நீர் நிரம்பி வழிகின்றன இதனால் ஒரு சில பகுதிகளில் வீதிகள் மற்றும் தாழ் நிலப்பகுதிகளில் மழை நீர் நிரம்பியுள்ளதால் வீதிகள் தடைப்பட்டுள்ளது. கந்தளாய் பிரதேசத்தில் திட்டமிடல் இல்லாத வீதி அமைப்பினால் ஏற்பட்ட வடிகான்களால் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இது […]

பிரான்ஸ் இளைஞர் யாழில் படுகொலை; இரு இளைஞர்கள் கைது

பிரான்ஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்த இளைஞன் வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில் அம்பாறையை சேர்ந்த இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி பகுதியை சேர்ந்த ராஜகுலேந்திரன் பிரிந்தன் (வயது 29) என்ற இளைஞன் கடந்த செவ்வாய்கிழமை படுகொலை செய்யப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சந்தேக நபர்களை அம்பாறை பகுதியில் வைத்து ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் […]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் பயணத்தை அச்சுறுத்தி எம்மை அடக்க முடியாது!

அச்சுறுத்தல்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் பயணத்தைத் தடுக்க முடியாது என்று அக்கட்சியின் உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைத் தேசிய மக்கள் சக்தி அரசு நிறைவேற்றவில்லை என்பதாலேயே எமக்கு வீதிக்கு இறங்கி அதனை நினைவுபடுத்த வேண்டி ஏற்பட்டது. அந்தவகையில் எமது நுகேகொடைக் கூட்டம் வெற்றியளித்தது. மக்களுக்காக […]

வடக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் மோசடிகள்; பொலிஸார் கூடுதல் அக்கறையுடன் செயற்பட வேண்டும் – ஆளுநர் வேதநாயகன்

வடக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் காணி மோசடிகள், சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் போதைப்பொருள் பாவனை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பொலிஸார் கூடுதல் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநருக்கும், மாகாணத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் புத்திக சிறிவர்தனவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று(25) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் ‘வெளிப்படுத்தல் உறுதி’ மூலமாகப் […]

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து இளைஞர் உயிரிழப்பு

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞராவார். படகின் இன்ஜினை பழுதுபார்த்து, அதனை பரிசோதனை செய்யச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

பல்கலைக்கழக மாணவன் போதைப் பொருளுடன் கைது!

மூதூர்- நெய்தல்நகர் பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து பல்கலைகழக மாணவரொருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(25) மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, பல்கலைக்கழக மாணவனிடமிருந்து 10 கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள், மூன்று கையடக்க தொலைபேசிகள், வங்கி புத்தகமொன்றும் மீட்கப்பட்டுள்ளன. மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மூதூர் போதை ஒழிப்பு பிரிவு பொலிஸார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக […]

நாடு முழுவதும் காற்றுடன் மழையுடனான வானிலை !

அடுத்துவரும் சில தினங்களுக்கு நாடு முழுவதிலும் காற்றும் மழையுடனான வானிலையும் அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக இலங்கையின் தென் திசையில் தாழ் அமுக்கப் பிரதேசம் நிலைகொண்டிருந்தது. இது அடுத்துவரும் 30 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக விருத்தியடையும். இதன் தாக்கத்தின் காரணமாக அடுத்துவரும் சில தினங்களுக்கு நாடு முழுவதிலும் காற்றும் மழையுடனான வானிலையும் அதிகரித்துக் காணப்படும். ஆகையினால் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற எதிர்கால எதிர்வு […]

கிளி.ஸ்கந்தபுரத்தில் மருமகனின் தாக்குதலில் மாமனார் பலி!

கிளிநொச்சி அக்கராஜன் குளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி மாமனார் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம்(24) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மகளை மருமகன் தாக்க முற்பட்ட போது அவர் தந்தை வீட்டிற்கு தப்பியோடி வந்துள்ளார். இந்தநிலையில் மகளை தாக்க முற்பட்ட. மருமகனை தடுக்க முற்பட்டவேளை மருமகனின் தாக்குதலுக்குள்ளான நிலையில் மாமனார் வைத்தியசாலை கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 59 வயதான கதிரவேலு சிவராசசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளதுடன் 25வயதுடைய […]