தம்பலகாமத்தில் கனமழை – வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலப் பகுதிகள்

தற்போது பெய்துவரும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தாழ் நிலப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் இன்று புதன்னிழமை (26) குறித்த பகுதிக்கு தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, சபை தவிசாளர் எச்.தாலிப் அலி உள்ளிட்டோர் விஜயம் செய்து, நீரில் மூழ்கியுள்ள மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்ட வீதிகள் தொடர்பிலும் நிலைமையை கேட்டறிந்ததோடு, உடனடியாக அவ்வீதிகளை மூழ்கடித்துள்ள வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த விஜயத்தின்போது […]

நாட்டின் வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் அரசாங்கத்திடம் கோரிக்கை

திசைகாட்டி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை பக்கம் 72 இல் 20,000 பேரை ஆசிரியர் தொழிலுக்கு உள்ளீர்ப்போம் என்றும், 3,000 STEM பட்டதாரிகள் மற்றும் 9,000 STEM அல்லாத பட்டதாரிகள் தகவல் தொழிநுட்ப துறையிலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு, சுங்க திணைக்களத்திற்கு, வெளிநாட்டுச் சேவைக்கு, சுற்றுலா கைத்தொழிற்றுறைக்கு 3000 பேர் என்ற அடிப்படையில் தொழில்களைப் பெற்றுத் தருவோம் என வாக்குறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில், இவ்வாறு இவர்களை ஆட்சேர்ப்பு செய்யும் போது, வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு ஒரு வருட பயிலுநர் பயிற்சிகளை […]

மட்டக்களப்பில் சிவப்பு – மஞ்சள் கொடிகள் அலங்காரம்

மாவீரர் நினைவேந்தல் நாள் நாளை வியாழக்கிழமை (27) அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு நகரில் சிவப்பு – மஞ்சள் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை (26) காலை மட்டக்களப்பு இளைஞர் குழுக்களினால் இந்த கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மணிக்கூண்டு கோபுரம், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள சுற்றுவட்டம் ஆகியவற்றில் சிறப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் மட்டக்களப்பில் உள்ள நான்கு மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொக்கட்டிச்சோலை […]

கொழும்பு BMICH இல் ஊடகப் பட்டமளிப்பு விழா

இலங்கை ஜே.எம் மீடியா கல்லூரியின் 6ஆவது பட்டமளிப்பு விழா நவம்பர் மாதம் 22ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை ஜே.எம் மீடியா தயாரிப்பு மற்றும் கல்லூரியின் தலைவரும், ஊடகவியலாளருமான சட்டமாணி ராஷிட் மல்ஹர்டீன் தலைமையில் மிக பிரமாண்டமாக நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம் ஜலால்டீன் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக பிபிசி செய்தி சேவையின் முன்னாள் செய்தியாளரும் நியூஸ் வயர் செய்தி சேவையின் ஸ்தாகருமான […]

சிவனொளிபாத தளத்தை சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்

• “Clean Sri Lanka ஒரு நாள் சிரமதான வேலைத்திட்டம்” 29 ஆம் திகதி • “கடற்படை பங்களிப்புடனான சிரமதான நடவடிக்கை” டிசம்பர் 13 – 14 சிவனொளிபாத யாத்திரை காலத்துடன் இணைந்த வகையில், சிவனொளிபாத தளத்தின் சூழல் கட்டமைப்பைப் பாதுகாப்பதையும், யாத்திரிகர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டம், சுற்றாடல் அமைச்சுடன் இணைந்து செயற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் நேற்று (25) ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு சிவனொளிபாத யாத்திரை காலம் தொடங்குவதற்கு […]

“பிரிவினைவாதிகளின் நிறைவேற்றப்படாத 6 கோரிக்கைகள் அம்பலம்” – ஜே.வி.பி.யை கடுமையாக விமர்சித்த உதய கம்மன்பில

இன்றைய தினம் எதுல் கோட்டையில் நடைபெற்ற பிவிதுரு ஹெல உருமய (PHU) கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில், அதன் தலைவர் வழக்கறிஞர் உதய கம்மன்பில தெரிவித்த கருத்துக்கள். லண்டன் ஆர்ப்பாட்டம்: வடக்கு-தெற்கு பயங்கரவாதிகளின் “சகோதர உறவு” மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இங்கிலாந்தில் எதிர்கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆர்ப்பாட்டம் ஒரு “சுமுகமான ஆர்ப்பாட்டம்” என்று உதய கம்மன்பில கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது: “தில்வின் சில்வாவுக்கு எதிராக புலிக்கொடிகள் ஏந்தி வந்தபோதும், […]

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. அவர்களை நாம் நிச்சயம் பாதுகாப்போம். அதேபோல கடல்வளங்களை பாதுகாப்பதற்கும், ஏற்றுமதியை நோக்கி நகர்வதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (26.11.2025) நடைபெற்ற வரவு- செலவுத்திட்டத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, இலங்கையின் […]

விலகிச் சென்றவர்களை மீண்டும் அரவணைக்கும் நோக்கு; டிசம்பர் 6 ஆம் திகதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மாநாடு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) செயலாளர் துமிந்த திசாநாயக்க அவர்கள், இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், எதிர்வரும் கட்சி மாநாடு மற்றும் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து பல முக்கிய கருத்துக்களை வெளியிட்டார். மனவருத்தங்கள் காரணமாக கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் அரவணைக்கும் நோக்குடன், டிசம்பர் 6ஆம் திகதி அனுராதபுரத்தில் கட்சி மாநாட்டை நடத்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி திட்டமிட்டுள்ளது. துமிந்த திசாநாயக்க இது குறித்துக் கூறுகையில், “எங்களுக்குள் இருக்கும் கட்சி, எதிர்க்கட்சி […]

மாவீரர் தினம் தொடர்பில் யாழ். வணிகர் கழக பிரதிநிதிகளிடம் கோரிக்கை

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர்களுக்கும், யாழ். வணிகர் கழக பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, நாளையதினம் (27) யாழில் உள்ள வர்த்தக நிலையங்களை மாலை 2.00 மணியுடன் மூடுமாறு யாழ். மாநகரசபை உறுப்பினர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. “எமது மண்ணுக்காய் மரணித்த வீரர்களின் தினமான மாவீரர் தினத்தன்று, யாழில் உள்ள வர்த்தக நிலையங்களை மாலை 2.00 மணியுடன் பூட்டி உரிமையாளர் ஊழியர்கள் மாவீரர் நிகழ்வில் பங்கு பற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்” […]

பாராளுமன்றத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனை, தமிழ் இனத்தின் இறைவன் என பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். அத்துடன், மேதகுவின் ஆட்சியில் தமிழர் தாயகப்பரப்பில் கடற்றொழில், விவசாயம் என்பன தன்னிறைவு பெற்றிருந்ததாகவும், போதைப்பொருட்கள் அறவே அற்ற, பாதுகாப்பான சூழல் இருந்ததாகவும் ரவிகரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவித்தபோதே […]