மரணச்சடங்கின் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிக்க தடை
சாவகச்சேரி நகராட்சிமன்ற எல்லைக்குற்பட்ட நகர் பகுதிக்குள் மரணச்சடங்கின் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் 6ஆவது மாதாந்த சபை அமர்வு நேற்று காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது, நகர் பகுதியின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதனால் பொதுப் போக்குவரத்து, அருகில் உள்ள வர்த்தக நிலையங்களில் தீ பரவும் அபாயம் மற்றும் நகர் பகுதிகள் அசுத்தமடைவதாக உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு பதில் வழங்கிய […]