வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்த மண்டலம்!
வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக இன்று (25) முதல் எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென்,ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழையுடனான நிலைமை இன்று (25) முதல் அடுத்த சில நாட்களுக்குள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய […]
நடைபெற்றுக்கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிந்தது?
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகளில் சில கேள்விகள் கசிந்துள்ளதா என்பதை அறிய விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். நுகேகொடையில் உள்ள தனியார் கல்விக்கூடத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பொருளியல் மாதிரி வினாத்தாளில் முதலாம் வினாத்தாளில் 27 கேள்விகள், உயர்தரப் பொருளியல் வினாத்தாளில் 27 கேள்விகளும் ஒரே மாதிரியாக இருப்பதாக பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) தெரிவித்தார். “இது குறித்து விசாரணை நடத்துமாறு பிரதமர் ஹரிணி […]
ரூ.36 மில்லியன் வை -பை அன்டெனா மோசடி?
36 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக இரண்டு சந்தேக நபர்கள் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளனர். 34 மற்றும் 37 வயதுடைய சந்தேக நபர்கள் மட்டக்குளி மற்றும் வத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வருவது. சந்தேக நபர்கள் ஒரு தனியார் நிறுவனத்திற்கு Wifi antennas களை வழங்குவதாக கூறி, அப் பொருட்களை வழங்காமல், குறித்த நிறுவனத்திற்கு 36,989,684 ரூபாய் நிதி மோசடி செய்துள்ளனர். புகாரைத் தொடர்ந்து, சந்தேக […]
கனடாவில் தமிழீழ விடுதலை புலிகளுக்கான அங்கீகாரம்: இலங்கை கடுமையான கவலை
கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) தொடர்பான சின்னங்களை பொதுவெளியில் பயன்படுத்துவது மற்றும் பிரிவினைவாதச் சித்தாந்தங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் குறித்து கனேடிய அரசாங்கத்திடம் இலங்கை தனது கடுமையான கவலையை வெளியிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கேத்ரின் மார்ட்டின் உடனான சந்திப்பில் இந்த கவலையை வெளியிட்டுள்ளார். கனடாவில் உள்ள உள்ளூர் குழுக்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் இலங்கையின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க முயற்சிகளை பலவீனப்படுத்துவதாகவும், கட்டுப்படுத்தப்படா விட்டால் இருதரப்பு உறவுகளைப் […]
பேரணி தொடர்பான போலி புகைப்படங்கள்?
நுகேகொடை பேரணி தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவிய பல புகைப்படங்கள் போலியானவை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “பெரும்பாலான சமூக ஊடகங்கள் பொய்யான செய்திகளையும் புகைப்படங்களையும் வெளியிடுகின்றன. அவற்றில் வெளியிடப்படும் தவறான தகவல்களால் யாரும் பீதியடைய வேண்டாம். சமூக ஊடகங்களில் தகவல்களின் நம்பகத்தன்மை கணிசமாகக் குறைந்துள்ளது. சமூக ஊடகங்களில் தகவல்களைப் பதிவிடும் பலர் […]
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு நிதி மோசடி வழக்கில் இரண்டு சந்தேக நபர்கள் கைது
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து 35 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மோசடியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் வைஃபை ஆண்டெனாக்களை வழங்குவதாக உறுதியளித்து பொருட்களை வழங்கத் தவறி ஒரு தனியார் நிறுவனத்திடம் சுமார் ரூ.36.99 மில்லியன் மோசடி செய்துள்ளனர். இரண்டு நபர்களும் நேற்று (24) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டனர். 34 மற்றும் 37 வயதுடைய […]
ஏ-09 வீதியில் வேன் மோதி பாதசாரி பலி!
மரதன்கடவெல ஏ-09 வீதியில், தவலஹல்மில்லேவ பகுதியில் வேன் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (24) மாலை பதிவாகியுள்ளது. மரதன்கடவெலயிலிருந்து கெக்கிராவ நோக்கி சென்ற வேன் ஒன்று மோதியதிலே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது விபத்தில் காயடைந்த பாதசாரி மரதன்கடவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் மரதன்கடவெல – தவலஹல்மீல்லேவ பகுதியைச் சேர்ந்த 95 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் […]
கொலைச் சம்பவங்களுடன் தேடப்பட்டுவந்த சந்தேகநபர் கீரிமலையில் கைது
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் தாக்குதல் மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தேடப்பட்டுவந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவான் பகுதியில், ஒருவர் தாக்கப்பட்டு, காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியவாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், திங்கட்கிழமை (24) காங்கேசன்துறை – கீரிமலை பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் சுன்னாகம் பகுதியை சேர்ந்த 37 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சுன்னாகம் […]
நீர்கொழும்பில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு
நீர்கொழும்பு – லெல்லம பகுதியில் அடையாளம் தெரியாத சடலமொன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, நேற்று திங்கட்கிழமை (24) காலை குறித்த சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சுமார் 55 வயது மதிக்கத்தக்க, கபிலநில ஆடை அணிந்துள்ளார் என பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர். சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வன்முறைகளுக்கு முகங்கொடுக்கும்பெண்கள் முறைப்பாடளிக்க மூன்று அவசர சேவை
சமூகத்தில் பாலியல் வன்முறைகளுக்கு முகங்கொடுக்கும் பெண்கள் முறைப்பாடளிக்க மூன்று அவசர சேவை தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் ஆண் – பெண் சமத்துவம் மற்றும் சித்திரவதை ஒழிப்பினை முன்னிலைப்படுத்திய 16 நாள் செயற்திட்டம் குறித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 16 நாட்கள் […]