வரவு செலவு திட்டம் ஊர்காவற்துறையில் தோற்கடிப்பு

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகையில் உள்ள ஊர்காவற்துறை பிரதேச சபை வரவு செலவு திட்டம் திங்கட்கிழமை (24) தோற்கடிக்கப்பட்டது. 13 ஆசனங்களை கொண்ட ஊர்காவற்துறை பிரதேச சபையில் , ஈழமக்கள் ஜனநாயக கட்சி 4 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன தலா 03 ஆசனங்களையும் , இலங்கை தமிழ் அரசுக் கட்சி 2 ஆசனங்களையும் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது. அந்நிலையில், […]
சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய சிறிதரன் எம்.பி
திருகோணமலையில், சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் இன்று (25) காலை விஜயம் செய்து உயிர் நீத்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தியுள்ளார். இதன்போது மாவீரர் துயிலுமில்லத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக ஆத்மா சாந்தி வேண்டி மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். ஏற்பாட்டாளர்களோடு கலந்துரையாடல்; இதன்போது மாவீரர்களின் குடும்பங்களின் உறவினர்கள், கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் சகிதம் சென்று மாவீரர்களின் நினைவுச் சின்னத்திற்கு சுடரேற்றி, மலர் அஞ்சலி செலுத்தி வணக்கம் செலுத்தினார், அத்தோடு […]
சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்: பிறக்காத குழந்தைக்கும் ஆபத்து

இலங்கையில், சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் வகைகளை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் முகநூல் பக்கத்தில், சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களின் விளைவ குறித்தும் பதிவிடப்பட்டுள்ளது. இதற்கமைய, சமீபத்தில், நுகர்வோர் விவகார சபை சந்தையில் கிடைக்கும் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை ஆய்வக ஆராய்ச்சிக்காக அனுப்பியிருந்தது. எனவே, அந்த அறிக்கைகளின்படி, பெரும்பாலான சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களில் பாதரசம் எனப்படும் கன உலோகம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதரசம் அளவு அதிகரிப்பு பாதரசம் 1 பிபிஎம்-க்கு மேல் இருந்தால், அது […]
கனடா – அமெரிக்கா ஆழமான “கலாசார முறிவு” ?

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான உறவுகளில் ஒரு ஆழமான “கலாசார முறிவு” ஏற்பட்டுள்ளதாகச் சனிக்கிழமை தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹாலிஃபாக்ஸ் சர்வதேசப் பாதுகாப்புப் பேரவையில் கலந்துகொண்ட அமெரிக்க அரசின் செனட்டர்கள், இந்த எச்சரிக்கையை விடுத்தனர். டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புக்கு அப்பால் சென்று, பல கனேடியர்கள், அமெரிக்கர்களை “எதிரிகள்” போல் பார்ப்பதுதான் பெரிய பிரச்சனை என்று அமெரிக்க அரசின் செனட்டர்கள் தெரிவித்தனர். இதேவேளை, வட கரோலினா மாநிலத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அமெரிக்க செனட்டர் […]
கனடா ஸ்மித்ஸ் ஃபால்ஸ் விபத்து தொடர்பில் விசாரணை ஆரம்பம்

ஒன்ராறியோ – ஸ்மித்ஸ் ஃபால்ஸ் (Smiths Falls) பகுதிக்குத் தெற்கே ஏற்பட்ட மூன்று வாகனங்கள் மோதிய விபத்து குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில், ஒரு வாகனத்தின் சாரதி உயிரிழந்தார். உயிரிழந்தவர் அப்பகுதியைச் சேர்ந்த 61 வயதுப் பெண் ஆவார். கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் கவுண்டி சாலை 29-இல் (County Road 29) கிட்லி சவுத் எல்ம்ஸ்லி டவுன்லைன் சாலை (Kitley South Elmsley Townline Road) சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் சிக்கிய மற்ற […]
எமது ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உயிர் தியாகம் செய்த அனைத்து இன மாவீரர்களையும் கூர வேண்டும் – மூத்த போராளி மனோகரன்
எமது ஈழ விடுதலை போராட்டத்திற்கு உயிர் தியாகம் செய்த அனைத்து இன மாவீரர்களையும் நினைவு கூர வேண்டும் என்பதுடன், அவர்களின் பெற்றோரையும் கௌரவப்படுத்த வேண்டும் என மூத்த போராளி காக்கா அண்ணா என அழைக்கப்படும் மு. மனோகரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், மூன்று சிங்கள மாவீரர்களின் தாய் துயிலுமில்ல வாசலில் அவமானப்படுத்தப்பட்டமை தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியது. அந்த மாவீரர்களின் […]
மட்டக்களப்பு தொல்பொருள் பெயர் பலகைகள் அகற்றல் : மூவருக்கு பிணை

மட்டக்களப்பில் உள்ள தொல்பொருள் இடங்களில் தொல்பொருள் துறையால் நிறுவப்பட்ட தொல்பொருள் இடங்களைக் குறிக்கும் பெயர்ப்பலகைகளை அகற்றியதாகக் கூறப்படும் வழக்கில், வாழைச்சேனை பிரதேச சபைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் உட்பட மூன்று பேரை தலா 500,000 ரூபாய் தனிப்பட்ட பிணையில் விடுவிக்க வாழைச்சேனை நீதவான் எம்.ஐ. அகமது ரதீஃப் உத்தரவிட்டார். வழக்கறிஞர் எம்.ஏ. சுமந்திரன் மூலம் நீதிமன்றத்தில் ஆஜரான வாழைச்சேனை பிரதேச சபைத் தலைவர் சுந்தர லிங்கம் சுதாகரன், துணைத் தலைவர் குழந்தைவேல் பத்மநிதன், பிரதேச சபை […]
மூன்றாம் ஆண்டு மாணவி பாலியல் துஷ்பிரயோகம்
பாடசாலை விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை நடத்துவதாக கூறி மூன்றாம் ஆண்டு மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரை கைது செய்ய பல சிறப்பு பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தம்புள்ளை போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கலேவெல கல்வி வலயத்திற்குட்பட்ட தம்புள்ளை பிரிவில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் மூன்றாம் ஆண்டு வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் அந்த வகுப்பு மாணவி ஒருவர் துஷ்பிரயோகம் செய்ததாக குழந்தையின் பெற்றோர் தம்புள்ளை பொலிஸ் குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்தில் நேற்று திங்கட்கிழமை […]
2026 வரவுசெலவுத் திட்டம்; கல்விக்காக அதிகபட்ச தொகை ஒதுக்கீடு!

2025ஆம் ஆண்டில் கல்விக் கொள்கை தயாரித்தல், திட்டம் வகுத்தல், நிறுவனக் கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை எம்மால் சிறப்பாக முன்னெடுக்க முடிந்துள்ளது. நிதி ஒதுக்கீட்டில் மாத்திரம் அனைத்தும் நடந்துவிடாது. நிறுவனக் கட்டமைப்பைப் பலப்படுத்தி, கொள்கைத் திட்டங்களுக்கு அமைய செயல்படுத்தப்பட வேண்டும். கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கல்விக்காக ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகை இந்த வரவுசெலவுத் திட்டத்திலேயே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், 2025ஆம் ஆண்டில் கல்விக் கொள்கைகளைத் தயாரிப்பதற்கும், திட்டங்களைத் தயாரிப்பதற்கும், […]
இலங்கைப் பொதுமக்களை தொற்றாத நோய்களில் இருந்து பாதுகாத்தல்

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் துணை நிறுவனமான தேசிய விளையாட்டு அறிவியல் நிறுவனம் ஏற்பாடு செய்த, இலங்கைப் பொதுமக்களை தொற்றாத நோய்களில் இருந்து பாதுகாத்தல் மற்றும் உடற்பயிற்சி மூலம் புனர்வாழ்வளித்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்று விளையாட்டு அறிவியல் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கை தேசிய விளையாட்டு அறிவியல் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக விளையாட்டுப் போஷாக்கு விரிவுரையாளராகப் பணியாற்றிய கலாநிதி ஜயந்த தசநாயக்க அவர்கள் வழிநடத்தினார். அங்கு, அரச சேவையில் உள்ள அதிகாரிகளும் […]