திரு.மயில்வாகனம் சிவபாதசுந்தரம்

வவுனியா வைரவபுளியங்குளத்தை பிறப்பிடமாகவும் 32, குட்செட் வீதி. வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் சிவபாத சுந்தரம் (ஓய்வுநிலை நிர்வாக உத்தியோகத்தர். அகில இலங்கை சமாதான நீதவான். செய்தி நிருபர். சத்திய பிரமாண மொழிபெயர்ப்பாளர்)அவர்கள் காலமானார். அன்னார் அமரர் மயில்வாகனம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும் அமரர் முருகேசு தங்கமுத்து தம்ப திகளின் மருமகனும் சி.தவமலர் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு கணவரும் Dr.ச.குமுதினி (மருத்துவபீடம் – யாழ்ப்பாணம்). மு.சிவாஜினி (உதவி ஆசிரியர்-கனடா), இ.தர்சினி (கணக்காளர் -நியூசி லாந்து) […]

பேராபத்து நிகழ்ந்த கடுகண்ணாவ தொடர்பில் வெளியான தகவல்

கடுகண்ணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து, அந்தப் பகுதி மிகவும் அபாயரமானதென அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. மண் சரிவு ஏற்பட்ட இடமும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் ஆபத்தான பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்தப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு இது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, கண்டி மேலதிக மாவட்டச் செயலாளர் திலித் நிஷாந்தா குறிப்பிட்டுள்ளார். பாதிப்புக்குள்ளான கட்டடத்தின் சட்டபூர்வமான தன்மை குறித்து ஆராயப்படும் என்றும், அந்தப் பகுதியைச் சுற்றி இன்னும் பல ஆபத்தான பாறைகள் […]

சாதனை படைத்த இலங்கைத் தமிழர் சபேசன்

இந்தியாவின் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற பாடல் போட்டியில் இலங்கை தமிழரான சபேசன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். இந்திய தனியார் தொலைக்காட்சியின் சரிகமப நிகழ்ச்சியின் ஐந்தாம் சீசனின் இறுதி சுற்று நேற்று (23) இடம்பெற்றது. தற்போது அவர், போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து, அவருக்கு இலங்கை வாழ். மக்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாவீரர் வாழ்வோடு பின்னிப் பிணைந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்துவோம் – அருட்தந்தை மா.சத்திவேல் கோரிக்கை

தமிழர் தேசமெங்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு சுடர் ஏற்றுவதற்காக ஆயத்தப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த அரசியல் கைதிகளின் விடுதலையையும் வலியுறுத்துவோம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் நேற்று(23.11.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எம்முடைய ஆட்சியில் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வோம்” என தற்போதைய ஜனாதிபதி அவரது ஜனாதிபதி […]

விசுவமடுவில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு

மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் நேற்றையதினம் (23.11.2025) முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு புத்தடி விநாயகர் ஆலயத்திற்கு அருகாமை பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் விசுவமடு மேற்கு, கிழக்கு பகுதிகளை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையவர்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள். விசுவமடு பிரதேசத்தினை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் மாலை அணிவிக்கப்பட்டு மங்கள வாத்திய இசையுடன் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்து வரப்பட்டு பொதுச்சுடரினை மூன்று மாவீரர்களின் சகோதரி புஷ்பராணி ஏற்றி […]

திருகோணமலை புத்தர் சிலை; தேரருக்கு அழைப்பாணை

திருகோணமலையில் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரையில் புத்தர் சிலை சம்பவம் தொடர்பில் பலாங்கொட கஸ்ஸப தேரரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. திருகோணமலை நீதவான் எம்.என்.எம். சன்சுதீன், டிசம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர் குறித்த தேரர் முன்னிலையாக வேண்டும் என இன்று (24.11.2025) நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார். திருகோணமலையில் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரைக்குச் சொந்தமான காணியில் புத்தர் சிலையை நிறுவச் சென்றபோது, நடந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்க மறுத்ததால், பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்திருந்தனர். […]

கொழும்பில் ENOVA வின் புதிய தயாரிப்புகள் அறிமுகம்

இலங்கையின் முன்னணி உணவெண்ணெய் உற்பத்தி நிறுவனமான வெங்கடேஸ்வரா ஆக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இன்று தனது புதிய தயாரிப்பு வரிசையை -உணவெண்ணெய், மார்ஜரின் மற்றும் பேக்கரி கொழுப்பு தயாரிப்புகளுடன் தனது முதன்மை பிராண்டான ENOVA பெயரில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில், நடந்த ஆண்டு மாநாடு மற்றும் தயாரிப்பு வெளியீட்டு விழாவில் பல்வேறு வணிகத் தலைவர்கள், கூட்டாளர்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகள் பங்கேற்றனர். புதிய தயாரிப்புகள், வீடுகளிலும், தொழில்துறை சமையல்/பேக்கரி பயன்பாடுகளிலும் தரமான பொருட்களை வழங்கும் […]

மழையுடனான வானிலை தொடரும்

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் சில நாட்களுக்கும் தொடரும். அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை ஆராய்ச்சி மத்திய நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. […]

வியட்நாமில் கனமழை ; பலியானவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு

ஆசிய நாடான வியட்நாமில் கடந்த வாரம் தொடக்கம் பெய்து வரும் கனமழை பல்வேறு மாகாணங்களில் பெரும் அனர்த்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக குவாங் நாம், தாக்லாங், கான் ஹோவா உள்ளிட்ட 5 மாகாணங்களில் இடையறாத கனமழை காரணமாக பெருமளவில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை […]

கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய வரைபு ஆவணம்; கலந்துரையாடல்

அமைச்சரவையின் அனுமதியை அடுத்து பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படவுள்ள நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை பற்றிய வரைபு ஆவணம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, நுண்நிதிக் கடன் வழங்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எதிர் கால நடவடிக்கைகள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உப குழு மற்றும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் இணைந்து விரிவாகக் கலந்துரையாடினர். […]