திருகோணமலை புத்தர் சிலை; தேரருக்கு அழைப்பாணை

திருகோணமலையில் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரையில் புத்தர் சிலை சம்பவம் தொடர்பில் பலாங்கொட கஸ்ஸப தேரரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதவான் எம்.என்.எம். சன்சுதீன், டிசம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர் குறித்த தேரர் முன்னிலையாக வேண்டும் என இன்று (24.11.2025) நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

திருகோணமலையில் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரைக்குச் சொந்தமான காணியில் புத்தர் சிலையை நிறுவச் சென்றபோது, நடந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்க மறுத்ததால், பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்திருந்தனர்.

நீதிமன்றத்தில் பி அறிக்கையை சமர்ப்பித்த திருகோணமலை துறைமுக பொலிஸ், 16ஆம் திகதி ஏற்பட்ட குழப்பத்தின் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலாங்கொட கஸ்ஸபா தேரரிடம் வாக்குமூலம் பெற முயற்சித்ததாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை தண்டனைச் சட்டத்தின் பிரிவு 184இன் கீழ் இது தண்டனைக்குரிய குற்றம் என்றும், விசாரணைகளுக்கு ஒத்துழைப்பது அனைத்து குடிமக்களின் கடமை என்றும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்த பொலிஸார், நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் ஒரு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்காததால் அழைப்பாணை அனுப்புமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், பலாங்கொட கஸ்ஸப தேரரின் தற்போதைய வதிவிடத்தைக் கண்டுபிடிக்க முடியாததால், தேரர் பயன்படுத்திய மொபைல் தொலைபேசி எண்ணிற்கான தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கையை வழங்குமாறு தனியார் தொலைபேசி நிறுவனத்தின் மேலாளருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

IMG_2560

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

November 24, 2026

இலங்கையின் இலத்திரனியல் பயண அனுமதிப் பத்திரம் வழங்கும் உத்தியோகபூர்வ இணையதளம் தற்காலிகமாகச் செயலிழந்துள்ளதாகக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

IMG_2585

நாட்டின் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலைக்குத் திரும்பியது

November 24, 2026

நாட்டின் வளிமண்டலத் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த இந்தியாவின் நச்சுப் புகை, வடகிழக்குப் பருவக்காற்றுடன் இணைந்து விலகிச் சென்றுள்ளதாக மத்திய சுற்றாடல்

IMG_2584

தெற்காசியாவின் முதலாவது ‘எயார் டோம்’ கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில்!

November 24, 2026

தெற்காசியாவின் முதலாவது ‘எயார் டோம்’ (Air Dome) கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில் நிறுவப்பட்டுள்ளது. 4,000 பேர் வரை பங்கேற்கக்கூடிய

IMG_2583

திருமண விளம்பரங்கள் குறித்து அரசாங்கம் அவதானம்!

November 24, 2026

சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகும் மூடநம்பிக்கை விளம்பரங்கள், சமூகத்தைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் உள்ளடக்கங்கள் மற்றும் வன்முறையை

IMG_2582

இலங்கை அகதிகள் உருக்கமான கோரிக்கை!

November 24, 2026

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது நாட்டைவிட்டு வெளியேறி, இந்தோனேசியாவில் கடந்த 15 ஆண்டுகளாகப் பல இன்னல்களுக்கு மத்தியில் தங்கவைக்கப்பட்டுள்ள

vikatan_2026-11-23_ubr0qbgo_New-Project-44

“அமைச்சர் ராஜ்மோகன் மீது வழக்குப்பதிய முன் அனுமதி வேண்டும்!” – ஆளுநருக்கு திமுக கடிதம்!

November 24, 2026

சென்னை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.5 கோடி கொடுக்க ஒருவர் முன்வந்ததாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

pil

இரண்டு பிள்ளைகளுடன் உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்ட நபரால் பரபரப்பு

November 24, 2026

தமது இரண்டு குழந்தைகளுடன் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திலிருந்து நபர் ஒருவர் வாவியில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்ட சம்பவத்தால்

tr

இந்து சமுத்திரத்தில் நிலத்திலநடுக்கம்

November 24, 2026

இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட 6.5 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ship

கடலில் பழுதடைந்த சரக்குக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது

November 24, 2026

நடுக்கடலில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகச் செயலிழந்த சரக்குக் கப்பல் ஒன்று, ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்குப் பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. சைப்ரஸ்

Seeman 12

“கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்க!” – சீமான் வலியுறுத்தல்!

November 24, 2026

சென்னை: கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து அவரை உடனடியாகக் கைது செய்ய

hika

ஈரானில் ஹிஜாப் அணியாமல் இசை நிகழ்ச்சி நடத்திய பாடகிக்கு 74 சவுக்கடிகள்’ –

November 24, 2026

கட்டாய ஹிஜாப் அணியாமல் இசை நிகழ்ச்சியில் பாடிய பிரபல ஈரானியப் பாடகி பரஸ்தூ அஹ்மதிக்கும், அவரது இசைக்குழு மற்றும் தயாரிப்புக்

RJ4ZVUFNM5EQJOHRURPXIMAGO4

பர்லிங்டன் தீ விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

November 24, 2026

பர்லிங்டன்: பர்லிங்டன் நகரில் உள்ள வீடொன்றில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச்