இலங்கைவாழ் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டியது அவசியம்

இலங்கைவாழ் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும், சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறை ஒன்றின் தேவைப்பாட்டினையும் பிரித்தானியத் தமிழர் பேரவை உறுப்பினர்கள் ஸ்கொட்லாந்து முதலமைச்சர் ஜோன் ஸ்வின்னிக்கிடம் வலியுறுத்தியுள்ளனர். ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் (முதலமைச்சரே ஸ்கொட்லாந்து அரசாங்கத்தின் தலைவரும் அரசாங்கத்தின் சகல கொள்கைகள், தீர்மானங்களுக்குப் பொறுப்பானவரும் ஆவார்) ஜோன் ஸ்வின்னிக்கும் பிரித்தானியத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது சுமார் 16 வருடங்களாக நீதிக்காகக் காத்திருக்கும் தமிழ் மக்கள் தற்போது முகங்கொடுத்துவரும் மிகமோசமான […]

ரில்வினுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்; புலம்பெயர் தமிழ் மக்களுக்கு ஈ.பி.டி.பி. கண்டனம்

புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு பிரிவினர் கோமா நிலையில் இருந்து மீண்டு யதார்த்தத்தினை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. லண்டனில் ஜே.வி.பி. தலைவர்களுள் ஒருவரான ரின்வின் சில்வாவற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறை ஆர்ப்பாட்டத்திற்கு தமது கண்டனத்தினையும் வெளிப்படுத்தி இருக்கின்றது. யாழ். ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட ஈ.பி.டி.பி. கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்தினால் குறித்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், விமர்சனங்களுக்கு அப்பால் கடந்த ஆயுத வழிமுறையில் ஈடுபட்டு பின்னர் ஜனநாயக […]

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘ரிவால்வர் ரீட்டா’

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக தமிழ், தெலுங்கு மொழியில் ‘உப்பு கப்புரம்பு’ படம் வெளியானது. இதனையடுத்து அவர் நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது. இந்த வாரம் வெளியாகவுள்ள இப்படத்துக்கான புரமோஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் ‘ரிவால்வர் ரீட்டா’ சம்பந்தமான பேட்டியில் கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளது ரசிகர்கள் இடையில் கவனம் ஈர்த்து வருகிறது. தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் தற்போது ‘ரிவால்வர் ரீட்டா’ […]

சூர்யா 47 படத்தில் முன்னணி இயக்குனர் பேசில் ஜோசப்?

சூர்யா 47 திரைப்படம் குறித்து லேட்டஸ்ட்டாக ஒரு தகவல் கிடைத்திருக்கின்றது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மலையாள புகழ் பேசில் ஜோசப் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் தீயாய் பரவி வருகின்றது. அத்தகவல் ரசிகர்களை ஹைப்பில் ஆழ்த்தியிருக்கிறது முக்கிய அம்சங்கள்: சூர்யா 47 படத்தை ஜீத்து மாதவன் இயக்கவுள்ளார். மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி இயக்குனர்களில் இவரும் ஒருவர். பஹத் பாசிலை வைத்து ஆவேஷம் என்ற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்த ஜீத்து மாதவன் அடுத்ததாக சூர்யாவை இயக்கவுள்ளாராம். […]

கவின் – ஆண்ட்ரியா கூட்டணியின் மாஸ்க் இரண்டு நாள் வசூல்

கவின் மற்றும் ஆண்ட்ரியா இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் தான் மாஸ்க். வெற்றிமாறனும் ஆண்ட்ரியாவும் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரம் குறித்து தற்போது தகவல் கிடைத்திருக்கின்றது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகனான கவின் நடிப்பில் லேட்டஸ்ட்டாக வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் மாஸ்க். வெற்றிமாறன் மற்றும் ஆண்ட்ரியா இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. அந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இப்படம் ஒரு சில தினங்களுக்கு முன்பு திரையில் வெளியானது. […]

விஜய் சேதுபதியின் அடுத்தபடம்

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்துடைய பணிகள் கடந்த சில மாதங்களாக மும்முரமாக நடந்து வந்தது. இப்படத்துடைய அப்டேட் எதுவும் வெளியாகாமல் ஷுட்டிங் மற்றும் நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த படத்துடைய முக்கியமான அறிவிப்பு ஒன்றினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் பூரி ஜெகன்நாத். இவருடன் கூட்டணி அமைத்துள்ளார் விஜய் சேதுபதி. இவர்களது காம்போவில் உருவாகும் படத்துடைய பணிகள் கடந்த சில மாதங்களாகவே மும்முரமாக நடந்து வந்தது. இந்நிலையில் […]

பிரபல பாலிவுட் நடிகரான தர்மேந்திரா மரணம்!

பிரபல பாலிவுட் நடிகரான தர்மேந்திரா உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே வதந்தி பரவிய நிலையில் இன்று அவர் மரணம் அடைந்துவிட்டார். இந்திய சினிமாவின் He- man என்று அழைக்கப்பட்ட பாலிவுட் ஜம்பவான் தர்மேந்திராவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறலாக இருப்பதாக கூறியதை அடுத்து ப்ரீச் கான்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தர்மேந்திரா நவம்பர் 10ம் தேதி காலை உயிரிழந்ததாக தகவல் வெளியானது. அதன் […]

பாணந்துறை தொழிற்சாலையில் தீ விபத்து!

பாணந்துறை – ஹிரன பகுதியில் இன்று திங்கட்கிழமை (24) பகல் தொழிற்சாலையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 7 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மொரட்டுவை தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் தீ விபத்துக்கான காரணங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர்; புதிய பேருந்து சேவை

சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் பிரதேச மக்களின் நலனை கருத்திற்கொண்டு 782 வழித்தட பேருந்து சேவையில் புதிய இணைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையானது இன்று (24) முதல் இலங்கை போக்குவரத்து சபையினால்ஆரம்பிக்கப்பட உள்ளதாக காரைநகர் அரச போக்குவரத்து சாலை முகாமையாளர் தெரிவித்துள்ளார். கொழும்பு – காரைநகர் இடையே போக்குவரத்தில் ஈடுபடும் அரச பேருந்து கொழும்பில் இருந்து வந்து அதிகாலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்திற்கு சென்று அங்குள்ள பயணிகளை ஏற்றியவாறு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு வரும். […]

உயர் திறனுடையவர்களை நாட்டுக்குள் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் – எதிர்க்கட்சித்தலைவர்

வைத்தியர்கள் உள்ளிட்ட உயர் திறனுடையவர்கள் நாட்டைவிட்டு செல்லும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களை தடுத்து நாட்டில் தக்கவைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க தவறினால், யார் அரசாங்கம் செய்தாலும் நாட்டை முன்கொண்டுசெல்ல முடியாமல்போகும். அதனால் வைத்தியர்களை நாட்டுக்குள் தக்க வைத்துக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு […]