கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘ரிவால்வர் ரீட்டா’

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக தமிழ், தெலுங்கு மொழியில் ‘உப்பு கப்புரம்பு’ படம் வெளியானது. இதனையடுத்து அவர் நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது. இந்த வாரம் வெளியாகவுள்ள இப்படத்துக்கான புரமோஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் ‘ரிவால்வர் ரீட்டா’ சம்பந்தமான பேட்டியில் கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளது ரசிகர்கள் இடையில் கவனம் ஈர்த்து வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் தற்போது ‘ரிவால்வர் ரீட்டா’ உருவாகியுள்ளது. இப்படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில், இதற்கான புரமோஷன் நிகழ்ச்சி துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் தனது உடல் எடை ரகசியம் தொடர்பாக நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘ரிவால்வர் ரீட்டா’ உருவாகி நீண்ட காலமாக ரிலீஸ் செய்யப்படாமல் இருந்தது. இதனையடுத்து தற்போது ஒரு வழியாக இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் உறுதி செய்துள்ள நிலையில், படத்துக்கான புரமோஷன் பணிகள் துவங்கியது. அப்படி, ‘ரிவால்வர் ரீட்டா’ படம் தொடர்பான நேர்காணல் ஒன்று தனது ஆரோக்கியம் மற்றும் உடல் எடை குறைப்பு பயணம் குறித்து பேசியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

அதில், முன்பு நான் உடல் எடை கொஞ்சம் அதிகமாக இருந்த சமயத்தில் அழகாக இருப்பதாக சொல்வர்கள். நிஜமாகவே அப்போது எனது உணவு பழக்கவழக்கங்கள் வித்தியாசமாக இருந்தது. ஒரே நேரத்தில் 10 இட்லிகள், தோசைகள் எல்லாம் சாப்பிட்டு இருக்கிறேன். அதன்பின்னர் உடற்பயிற்சி செய்வதற்கு முடிவு செய்தேன். எனது உணவு பழக்கங்களையும் கட்டுப்படுத்த துவங்கினேன்.

முதலில் கார்டியோ மட்டும் தான் செய்ய துவங்கினேன். தீவிரமாக கார்டியோ செய்தேன். இதன் மூலமாக 12 மாதங்களில் சுமார் பத்து கிலோ வரை எடையை குறைத்தேன். சினிமாவில் நடிப்பதை காட்டிலும், உடல் ஆரோக்கியத்திற்கு தற்போது அதிக முன்னுரிமை கொடுப்பதாக கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். மேலும், யோகா எனக்கு மிகவும் பலனளித்தது. தினமும் ஒன்றரை மணிநேரம் உடற்பயிற்சி செய்து வருகிறேன். தற்போது நான் ஆரோக்கியமாக இருப்பதாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.

சினிமா குடும்பத்தை சார்ந்த கீர்த்தி சுரேஷ், குழந்தை நட்சத்திரமாக தனது திரையுலக பயணத்தை துவங்கினார். மலையாளத்தில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்த இவர், தமிழில் ‘இது என்ன மாயம்’ என்ற படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்து அறிமுகமானார். இதனையடுத்து முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் நடித்து வரவேற்பினை பெற்றார் கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில் ‘மகாநதி’ படம் அவரது திரை வாழ்வில் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது. நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக உருவான இப்படத்தில் சாவித்திரியாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இதற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றார். இதனிடையில் தெறி பட ரீமேக்காக அட்லீ தயாரிப்பில் வெளியான ‘பேபி ஜான்’ படத்தின் வாயிலாக இந்தியில் அறிமுகமானார். இப்படம் பெரியளவில் ரசிகர்களை கவராமல் போய் விட்டது.

இதனிடையில் சந்துரு இயக்கத்தில் பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் தயாரிப்பில் ‘ரிவால்வர் ரீட்டர்’ படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். ஜான் விஜய், அஜய் கோஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ள இப்படம் வரும் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ரிலீசாக இருக்கிறது. மேலும், ‘அக்கா’ என்ற வெப் சீரிஸில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

suresh11

சலே நடமாடுகிறார், அவராகவே ஆடை அணிகிறார்: அவருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தகவல்

June 24, 2026

குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் (CID) காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் சுரேஷ் சலே, மோசமாக

MediaFile_20260624_064746_697

தெல்தெனிய பெண் கொலை : பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் கைது

June 24, 2026

நிறுத்தப்பட்டிருந்த வாகனமொன்றினுள் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட தெல்தெனிய கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது

myan

ஒன்லைன் நிதி மோசடி மையங்களுக்குள் 5,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சிறை?

June 24, 2026

தாய்லாந்து எல்லைக்கு அருகிலுள்ள மியான்மார் பகுதிகளில் இயங்கி வரும் ஒன்லைன் நிதி மோசடி மையங்களுக்குள் இன்னும் 5,300க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக

Nada

யாழ்.பலாலி விமான நிலையத்தில் நடராஜர் சிலை பிரதிஷ்டை?

June 24, 2026

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய யாழ். கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

729481106_1021088533701986_4482724275745954913_n

விட்பி கடையில் கள்ள நோட்டுகள் புழக்கம்: சந்தேக நபரைத் தேடும் காவல்துறை

June 24, 2026

கனடாவின் விட்பி (Whitby) நகரில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் கள்ள நோட்டுகளைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்கிய சந்தேக

730515905_1623541362526678_1589963721921684927_n

ஒஷாவா மருந்தகங்களில் போலி மருந்துச்சீட்டு மோசடி: மொன்றியலைச் சேர்ந்த இருவர் மீது குற்றம் சாட்டு

June 24, 2026

ஒஷாவா நகரில் உள்ள பல மருந்தகங்களில் (Pharmacies) போலி மருந்துச்சீட்டுகளைப் பயன்படுத்தி மருந்துகளைப் பெற முயன்றதாகக் கூறப்படும் மோசடி விவகாரம்

Rajitha

இதுவரை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது மரபணு மாதிரிகள் சேகரிக்கப்படவில்லை – சட்டத்தரணி ரனித்தா

June 24, 2026

மரபணு தொடர்பான விடயத்தில், இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமோ அல்லது ஏனைய அரச நிறுவனங்களோ காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின்

730451457_856458137519480_6962660640323909533_n

மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டு: ஹாலிஃபாக்ஸ் நபருக்கு மாகாணம் தழுவிய பிடியாணை

June 24, 2026

மாகாணம் தழுவிய தற்காலிகப் பிடியாணை (Provincewide warrant) பிறப்பிக்கப்பட்டுள்ள 22 வயதுடைய ஹாலிஃபாக்ஸ் (Halifax) நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக்

727788199_1687261052550087_6943194283308762826_n

பியர்சன் தங்கக் கொள்ளை விவகாரம்: துப்பாக்கிக் கடத்தல் வழக்கில் பிராம்ப்டன் நபருக்கு அமெரிக்காவில் 13 ஆண்டுகள் சிறை

June 24, 2026

டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் (Toronto Pearson Airport) பெரும் தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட

mull

யானை தாக்கி இளைஞன் உயிரிழப்பு; முல்லைத்தீவில் சம்பவம்

June 24, 2026

வயலுக்கு காவலுக்கு சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஒன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக

strike

அரசாங்கத்திற்கு எதிராக யாழில் வேலையற்ற பட்டத்தாரிகள் போராட்டம்?

June 24, 2026

வேலையற்ற பட்டதாரிகள் நாளை 25ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்

Dengue

14 மாவட்டங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை

June 24, 2026

இலங்கையில் வேகமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாட்டின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 538 கிராம உத்தியோகத்தர்