கொழும்பு துறைமுக வளாகத்தில் மனித புதைகுழிகள்?

கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் மேலும் விபரமறிய பல்வேறு கேள்விகளை உள்ளடக்கி நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளருக்கு மக்கள் போராட்ட முன்னணி கடிதமொன்றை இன்று திங்கட்கிழமை (24) அனுப்பியுள்ளது. மக்கள் போராட்ட முன்னணி அனுப்பியுள்ள கடிதத்தில், இதுவரை எத்தனை மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன ? புதைகுழிகள் தொடர்பாக தடயவியல் பரிசோதனைகள் நடத்தப்பட்டதா? அப்படியானால் அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் என்னென்ன? போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: […]

டிசம்பரில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு வருகை

ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக எதிர்வரும் டிசம்பர் மாதம் 9 அல்லது 10 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு நாட்டுக்கு வருகைதரவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழு என்பது ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை ஒத்துழைப்பு உடன்படிக்கையின் அமுலாக்கத்தை மேற்பார்வை செய்வதுடன் இருதரப்பு உறவுகள், வர்த்தகம், மனித உரிமைகள், ஆட்சியியல் நிர்வாகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு என்பன தொடர்பில் சந்தித்துக் கலந்துரையாடும் ஒரு கட்டமைப்பாகும். இக்கட்டமைப்பின் சந்திப்பில் […]

மூளாயில் தவறான முடிவெடுத்த சிறுமி உயிர் மாய்ப்பு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் சிறுமி ஒருவர் தவறான முடிவு எடுத்து 24ஆம் திகதி திங்கட்கிழமை உயிர் மாய்த்துள்ளார். மூளாய் – ஆலடி பகுதியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் கீர்த்திகா (வயது 17) என்ற சிறுமியே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுமி திங்கட்கிழமை (24) காலை சுருக்கிட்டுள்ளார். இதை அவதானித்த தாயார் கயிற்றினை அறுத்துள்ளார். பின்னர் அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கப்பட்டது. அவ்விடத்திற்கு வந்த நோயாளர் காவு வண்டி, […]

இந்திய இழுவைப் படகுகளால் மயிலிட்டி கடற்றொழிலாளர்களின் தொழில் முதல் நாசம்

இந்திய இழுவைப் படகுகளால் யாழ்ப்பாணம் – மயிலிட்டி கடற்றொழிலாளர்களின் ஒரு கோடி ரூபா பெறுமதியான தொழில் முதல்கள் நாசம் செய்யப்பட்டுள்ளதாக மயிலிட்டி கடற்றொழில் சங்கத்தின் தலைவர் குணரத்தினம் குணராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், “நேற்றிரவு 10.00 மணியளவில் நூற்றிற்கும் மேற்பட்ட இந்திய இழுவைப் படகுகள் எமது மயிலிட்டி கடற்கரையில் இருந்து சுமார் 2 கீலோமீட்டர்களுக்குள் உள்நுழைந்து அட்டகாசம் செய்துள்ளன. இதனால் 20 கடற்றொழிலாளர்களின், சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வலைகள் உள்ளிட்ட […]

புன்னாலைக்கட்டுவன் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் 24ஆம் திகதி திங்கட்கிழமை காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் உள்ள கள்ளுத் தவறணை ஒன்றுக்கு சென்ற நபர் ஒருவர் கள்ளுத் தவறணையில் வைத்து இருவரால் தாக்குதல்களுக்கு உள்ளானார். தாக்குதலுக்கு உள்ளான அவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவர்மீது தாக்குதலை மேற்கொண்ட இருவரும் தலைமறைவாகி […]

இராணுவத்தினரின் பெற்றோருக்காக வழங்கப்படும் கொடுப்பனவை இடைநிறுத்தவில்லை!

இராணுவத்தினரது பெற்றோருக்காக வழங்கப்பட்ட கொடுப்பனவை இடைநிறுத்தவில்லை. பயனாளர்களின் விபரம் மாத்திரமே கோரப்பட்டுள்ளது. கொடுப்பனவு இடைநிறுத்தியதாக குறிப்பிட்டு ஒரு தரப்பினர் அரசாங்கத்துக்கு எதிரான தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற அமர்வின்போது பாதுகாப்பு அமைச்சரின் பிரதிநிதியாக விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, இராணுவத்தினரது பெற்றோருக்காக வழங்கப்படும் ‘மௌபிய’ கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஒரு தரப்பினர் தவறான செய்தியை […]

தென்காசியில் பஸ் விபத்து : 6 பேர் பலி, 28 பேர் காயம்!

இந்தியா, தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை (24) இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் காயமடைந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மதுரையிலிருந்து செங்கோட்டைக்குச் சென்ற தனியார் பஸ் ஒன்றும், தென்காசியிலிருந்து கோவில்பட்டிக்குச் சென்ற மற்றொரு பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் இரண்டு பஸ்களும் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்த 28 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று […]

அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 26ல் உருவாகுது ‘சென்யார்’ புயல்?

தென்காசி, நெல்லைக்கு இன்று (நவ.,24) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. நாளை (நவ.,25) 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அந்தமான் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மறுநாள் (நவ.,26) புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இவ்வாறு உருவாகும் புயலுக்கு, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமி ரேட்ஸ் பரிந்துரைப்படி, ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்திய கடல்பகுதிகளில் 3 சுழற்சிகள் ஒன்றாக […]

இந்திய அணி சாம்பியன்

டாக்காவில் நடந்த உலகக் கோப்பை மகளிர் கோப்பை கபடி போட்டியில் தைவான் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. உலகக் கோப்பை மகளிர் கபடி போட்டி வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. 11 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்றன. லீக் போட்டிகளில் தாய்லாந்து, வங்கதேசம், ஜெர்மனி மற்றும் உகாண்டா அணிகளை வீழ்த்தியதுடன் அரையிறுதியில் ஈரான் அணியையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தைவான் அணிகள் மோதின. இதில் […]

பயங்கரவாத பிடியிலுள்ள மாணவர்களை விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ வேண்டுகோள்!

நைஜீரியாவில் பயங்கரவாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட 300க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களை விடுவிக்குமாறு புனித பாப்பரசர் லியோ நேற்று (23) கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் பள்ளி மாணவர்களை இலக்குவைத்து, ஆயுததாரிகள் கடத்திச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. அந்நாட்டின் நைஜர் மாகாணத்தில், 300க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் கத்தோலிக்க கிறிஸ்தவ பாடசாலையொன்றினுள் துப்பாக்கிகளுடன் பயங்கரவாத கும்பலொன்று நுழைந்துள்ளது. அந்த கும்பல் துப்பாக்கிமுனையில் 100க்கு மேற்பட்டோரை கடத்திச் சென்றதாக […]