வெனிசுலா வான்வெளியில் விமானங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வெனிசுலா வான்வெளியில் பறக்கும்போது ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) முக்கிய விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் அதிகம் குவிக்கப்பட்டுள்ள நிலையில், “அதிகரித்த இராணுவ நடவடிக்கை” காரணமாக இராணுவ விமானங்கள் பறக்கக்கூடும் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட FAAவின் NOTAM (விமானப்படை வீரர்களுக்கான அறிவிப்பு) எச்சரிக்கை, “மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை மற்றும் வெனிசுலாவில் அல்லது அதைச் சுற்றியுள்ள அதிகரித்த இராணுவ நடவடிக்கை” ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. […]

மயிலங்காடு பகுதியில் கசிப்புடன் பெண்ணொருவர் கைது

பத்தாயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் 42 வயதுடைய பெண் ஒருவர் ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சந்தேகநபரான பெண் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் நேற்றிரவு 10 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எரிபொருள் விலைகளில் மாற்றம்?

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்த்துள்ளதால் அது இலங்கை எரிபொருள் விலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது. ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகள் மற்றும் ரஷ்யாவிலிருந்து எரிபொருளை ஏற்றிச் செல்லும் 117 கப்பல்கள் மீது விதிக்கப்பட்ட தடைகள் இதற்கு பெரும் காரணமென கூறப்படுகிறது. மேலும், உக்ரைனின் 17 ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடந்த ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக ரஷ்யா எரிபொருள் ஏற்றுமதியை கட்டுப்படுத்தியுள்ளது. இது உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பை […]

பெல்ஜியத்தில் பிரதி வெளியுறவு அமைச்சர்

வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர்; அருண் ஹேமச்சந்திரா, பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஆணையகத்தின் சர்வதேச கூட்டாண்மைகளுக்கான பணியகத்தின் ஆசிய மற்றும் பசிபிக் பகுதிக்கான பணிப்பாளரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, இலங்கையின் தற்போதைய வளர்ச்சிப் பாதை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உலகளாவிய நுழைவாயில் முயற்சியின் மூலம் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது, சர்வதேச கூட்டாண்மைகளுக்கான பணியகத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பகுதிக்கான பணிப்பாளர், இலங்கையின் சமீபத்திய முன்னேற்றம் குறித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். நாட்டில் […]

யுத்தத்தில் உயிர் இழந்தவர்கள் நினைவேந்தல்; கிளிநொச்சியில் பிமல் வெளியிட்ட அறிவிப்பு

யுத்தத்தில் உயிர் இழந்தவர்களை நினைவு கூருவதில் எந்த தடையும் இல்லை என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (22.11.2025) நடந்த ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது அவர்களின் ஜனநாயக உரிமை. அரசாங்கள் வர முன்பே மக்கள் இறந்தவர்களை நினைவு கூர்ந்தனர். அது அவர்களின் ஜனநாயக உரிமையாகவே காணப்பட்டது. எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றது. மக்கள், இறந்த […]

நிலத்தகராறு; மண்வெட்டி தாக்குதலில் பெண் மரணம்

பொத்துவில், ஹுலன்னுகே, 12வது தூண் பகுதியில், ஒரு பெண் மீது நபர் ஒருவர் மண்வெட்டியால் தாக்கியதாகவும், படுகாயமடைந்த நிலையில், லாஹுகல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் பொத்துவில் காவல் நிலைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உயிரிழந்தவர் ஹுலன்னுகே பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய கோனார முதியன்செலாகே விமலவதி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட மோதலின் போது, ​​மண்வெட்டியால் தலையில் தாக்கப்பட்டு அந்தப் பெண் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலை […]

சிறந்த நூலகங்களுக்கான விருது நிகழ்வு

2024ஆம் வருடத்தில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட நூலகங்களுக்கான விருது வழங்கும் விழா, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹிந்தும சுனில் செனவி அவர்களின் தலைமையில் தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 2024ஆம் பயனுள்ள வகையில் வாசிப்பை மேம்படுத்தும் திட்டங்களைச் செயற்படுத்திய மாநகர சபைகள், நகரசபைகள், பிரதேச சபைகள் மற்றும் பாடசாலை நூலகங்கள் என ஏறத்தாழ 1500 நூலகங்கள் இவ்விருதுக்காக அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. […]

சர்வதேச கிரிக்கட் பேரவையின் டெஸ்ட் செம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்

சர்வதேச கிரிக்கட் பேரவையின் டெஸ்ட் செம்பியன்ஷிப் 2025-2027 ஆண்டுகளுக்கான அணிகளுக்கான புள்ளிப்பட்டியல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலிய அணி, நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக பெற்றுக்கொண்ட வெற்றியை அடுத்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பட்டியலில் அவுஸ்திரேலிய அணி முதல் இடம் பெற்றுள்ளது. தென்னாபிரிக்க அணி இரண்டாம் இடத்தை வகிக்கிறது. மூன்றாம் இடத்தை இலங்கை அணியும், நான்காம் இடத்தை இந்தியாவும் பெற்றுள்ளன. பாகிஸ்தான் 5ஆம் இடத்தையும் இங்கிலாந்து 6ஆம் இடத்தையும் பெற்றுள்ளன. பங்களாதேஸ் 7ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் […]

முல்லைத்தீவில் தேசிய கராத்தே பயிற்றுனர்களின் பயிற்சி நெறி

முல்லைத்தீவு மாவட்ட உள்ளக அரங்கில் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு பிரிவின் ஒழுங்குபடுத்தலுடன் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு வீரர்களுக்காக தேசிய கராத்தே பயிற்றுனர்களினால் வழங்கபட்ட இரண்டு நாள் கராத்தே பயிற்சி கடந்த வியாழக்கிழமை (20) நடைபெற்றது. இந்த பயிற்சி நெறிக்காக நிதியானது மாகாண விளையாட்டு திணைக்களத்தால் (PSGD) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய வீரர்களை பயிற்றுவிக்கும் பயிற்றுனர்களினால் பயிற்சிகளை வழங்கியதுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் 108 கராத்தே வீரர்கள் மேற்படி 2 நாள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

மூன்று நாட்களில் கெப் வாகனத்தைக் கொண்டுவர முடியுமெனில் ஏன் மருந்துகளைக் கொண்டுவர முடியாது – நாமல்

மூன்று நாட்களில் கெப் வாகனத்தைக் கொண்டுவர முடியுமெனில், ஏன் நாட்டுக்கு மருந்துகளை கொண்டுவர முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய (22.11.2025) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், அரச அதிகாரிகளுக்கு வாகன பெர்மிட்களை கொடுப்போம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெர்மிட்களை வழங்க மாட்டோம் எனவும் அரசாங்கம் உறுதியளித்திருந்தது. ஆனால், இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கெப் வாகனம் கொண்டுவரப்பட உள்ளது. அரசாங்கம் 1,700 கெப் […]