‘ஃப்ரெண்ட்ஸ் ‘ படத்தின் புதுப்பிக்கப்பட்ட முன்னோட்டம் வெளியீடு

விஜய் – சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ப்ரண்ட்ஸ் ‘ திரைப்படம் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் எதிர்வரும் 21 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியிடப்படுகிறது. இதற்காக புதுப்பிக்கப்பட்ட இப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பேரரசு – பொன் குமரன் -கௌதம் ராஜ் – ஆகியோர் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினார். ‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் மறு வெளியீட்டு உரிமையை தயாரிப்பாளர் அப்பச்சனிடம் […]

அனுபமா பரமேஸ்வரனின் ‘லாக் டவுன்’

‘பைசன்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘லாக் டவுன்’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஏ. ஆர். ஜீவா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘லாக் டவுன்’ எனும் திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். கொரோனா தொற்று காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் […]

ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் நடிகர் பாலஹாசனின் ‘ரேகை’

பிரபல எழுத்தாளரான ராஜேஷ் குமார் எழுதிய க்ரைம் நாவல் ஒன்றினை தழுவி தயாராகி இருக்கும் ‘ரேகை’ எனும் கிரைம் திரில்லரான இணைய தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. எழுத்தாளர் எம். தினகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரேகை’ எனும் இணைய தொடரில் பாலஹாசன், பவித்ரா ஜனனி, போபலன், பிரகதேஷ், வினோதினி வைத்தியநாதன், ஸ்ரீ ராம் ,அஞ்சலி ராவ், இந்திரஜித் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். குற்ற சம்பவம் தொடர்பான தடயவியல் […]

ஜப்பான் துறைமுகத்தில் திடீர் தீ: 170 கட்டிடங்கள் எரிந்தன

ஜப்பானின் தென்மேற்கு ஒய்டா மாகாணத்தில் சகனோஸ்கி நகரம் உள்ளது. கடற்கரை நகரமான இங்கிருந்து பிடிக்கப்படும் சாளை வகை மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்காக துறைமுகம் அமைத்தும், மீன்களை உறைய வைக்க, பதப்படுத்த கிடங்குகள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த துறைமுகத்தில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றி எரிந்த தீ, மற்ற கட்டிடங்களுக்கும் வேகமாகப் பரவி அருகே உள்ள மீனவர்களின் வீடுகளுக்கும் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் வாகனங்கள் மற்றும் […]

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒரு மாதத்திற்குள் நிறைவு?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள 16.6 மில்லியன் ரூபாய் அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்குத் தொடர நடவடிக்கை அத்துடன், மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டமா அதிபர் கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரவுக்கு அறிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சட்டமா அதிபர் சார்பில் […]

தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் உயிரிழப்பு!

தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்றிரவு (19.11.2025) உயிரிழந்துள்ளார். ஆனந்தசுதாகரின் மனைவி கடந்த 2018ஆம் ஆண்டு கணவரின் பிரிவால் நோயுற்ற நிலையில் மரணமானார். இதனால் அநாதரவாக நிர்க்கதியாக நின்ற பிள்ளைகளை வயதான காலத்திலும் பராமரித்து வந்த பேத்தியாரான கமலா (வயது 75) என்பவர் நோயுற்று கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிற்சை பலனின்றி நேற்று புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அரசியல் கைதி […]

அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்தியையும் வாக்குறுதிகளையும் நாளைய ‘பெரும் மக்கள் குரல்’ வெளிப்படுத்தும்

நாளை (நவம்பர் 21) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நடத்தப்படவுள்ள “மஹா ஜன ஹ(ன்)ட” (பெரும் மக்கள் குரல்) மேடையானது, அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்தியையும், அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்டுவதையும் நோக்கமாகக் கொண்டது மட்டுமே என முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று (2025.11.20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். வெறுமனே நினைவூட்டல் மேடை: “நாளை (21) நாம் நடத்தும் […]

தெற்காசியாவில் இலங்கையே சிறு அளவிலான மீன்பிடி நிர்வாகத்திற்கான தேசியத் திட்டத்தை ஆரம்பித்த முதல் நாடு

உலக மீன்வள தினத்தை முன்னிட்டு, சிறு அளவிலான மீன்பிடி நடவடிக்கைகளுக்கான தேசிய செயல் திட்டத்தை (NPOA-SSF) உருவாக்குவதில் சர்வதேசப் பயிலரங்கின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ விஜித ஹேரத், சிறு அளவிலான மீன்பிடி நிர்வாகத்திற்கான தேசியத் திட்டத்தைத் தயாரிக்கத் தொடங்கிய தெற்காசியாவின் முதல் நாடு இலங்கை என்று பெருமையுடன் அறிவித்தார். மீன்வளம் மற்றும் நீர்வளங்கள் அமைச்சு, மீன்வளம் மற்றும் நீர்வளங்கள் திணைக்களம் (DFER), வங்காள விரிகுடா திட்டம் – […]

உக்ரைன் மீது ரஷ்யா கடும் தாக்குதல்; 3 சிறுவர்கள் உட்பட 26 பேர் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைக் கொண்டு நடத்திய பாரிய தாக்குதலில் 3 சிறுவர்கள் உட்பட குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யா 476 ட்ரோன்கள் மற்றும் 48 ஏவுகணைகளை பிரயோகித்து உக்ரைனின் மேற்கு நகரான டெர்னோபிலில் (Ternopil) உள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை நோக்கித் தாக்குதல் நடத்தியதில் உயிரிழப்புகள் ஏற்பட்டதோடு, 93 பேர் படுகாயமடைந்ததாகவும் அவர்களில் 18 பேர் சிறுவர்கள் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ரஷ்ய X-101 குரூஸ் […]

25 மாணவிகள் கடத்தப்பட்டனர்: நைஜீரியாவில் சம்பவம்

நைஜீரியாவில் மாணவிகளுக்கான விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த பயங்கரவாத கும்பலால் 25 மாணவிகள் துப்பாக்கிமுனையில் கடத்திக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், 2 மாணவிகள் கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிச் சென்று பொலிஸாரிடம் தஞ்சமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாரிடம் தஞ்சமடைந்த மாணவியரில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதையடுத்து, அவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமேற்கு நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள மாணவிகளுக்கான பள்ளி விடுதியொன்றில் கடந்த திங்கட்கிழமை (17) அதிகாலை 4 மணியளவில் பயங்கரவாதிக் கும்பலொன்று அத்துமீறி நுழைந்தது. அந்த கும்பல் விடுதியிலிருந்த 25 மாணவிகளை […]