தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக மாவீரர்களுக்கு நினைவாலயம்

மாவீரர்களின் நினைவாக யாழ். நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் நினைவாலயம் நாளை மாலை 6 மணியளவில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. தாயக மண்ணின் விடியலுக்காக வித்தாகிப் போனவர்களுடன், தாயக மண்ணுக்காகத் தம்மை அர்ப்பணித்த மாமனிதர்களையும், நாட்டுப் பற்றாளர்களையும் ஆவணப்படுத்தும் வகையிலேயே மாவீரர்களின் நினைவாலயம் இம்முறை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுவீடனின் மன்னர் கனடா விஜயம்

சுவீடனின் மன்னர் பதினாறாம் கார்ல் குஸ்டாஃப் (King Carl XVI Gustaf) மற்றும் அரசி சில்வியா (Queen Silvia) ஆகியோர் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாகச் கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். நேட்டோ மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதிலும் ஒரு புதிய வியூகக் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதிலும் இந்தப் பயணம் கவனம் செலுத்துகிறது. இந்த அரச தம்பதியை ரைடோ ஹாலில் (Rideau Hall) பிரதம நீதியரசர் ரிச்சர்ட் வாக்னர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோர் வரவேற்றனர். […]

17 ஆண்டுகளுக்கு முன் டொரன்டோவில் மீட்கப்பட்ட சடலத்தில் மரபணு ஆய்வு

சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்னர் டொரன்டோ நகர மையத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஒருவரை, மரபணுப் பாரம்பரிய ஆய்வுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரொறன்ரோ பொலிஸார் தற்போது அடையாளம் கண்டுள்ளனர். 2008 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி, ப்ளூர் ஸ்ட்ரீட் E. மற்றும் பார்லிமென்ட் ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள சுரங்கப்பாதை பாலத்தின் அடியில் இந்த நபர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இவரது மரணத்தில் எந்தச் சந்தேகமும் இல்லை என்று கண்டறியப்பட்டாலும், “வழக்கமான விசாரணை நுட்பங்கள்” மூலம் இவரை அடையாளம் […]

கனடாவின் தேசிய அவசர எச்சரிக்கை அமைப்பின் வருடாந்த சோதனை

ஒன்றாரியோவில் கனடாவின் அலர்ட் ரெடி (Alert Ready)எனும் தேசிய அவசர எச்சரிக்கை அமைப்பின் வருடாந்த சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க அமைப்புகள் மட்டுமே இந்த எச்சரிக்கைகளை வெளியிட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இது தொடர்பில் தெரிய வருகையில், பொதுவாக மனிதர்களின் உயிருக்கு அபாயம் ஏற்பட்டால் மட்டுமே இந்த எச்சரிக்கைகள் அனுப்பப்படுகின்றன. அலர்ட் ரெடி (Alert Ready) இணையத்தளத்தின் தகவலின்படி, இந்த ஆண்டில் ஒன்றாரியோவில் மொத்தம் 230 அவசர எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. […]

மிசிசாகாவில் ஆயுத முனையில் கொள்ளை; ஒருவர் கைது

கனடாவின்  பீல் பகுதி – பீல் பொலீஸ் துறை மிசிசாகாவில் உள்ள ஒரு LCBOவில் நடைபெற்ற ஆயுதக் கொள்ளை தொடர்பாக ஒரு நபரை கைது செய்துள்ளது. மேற்படி சம்பவம் நவம்பர் 12, புதன்கிழமை, சுமார் இரவு 8:50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஒரு சந்தேகநபர் LCBOக்குள் நுழைந்து காசாளரிடம் சென்று கத்தியைக் காட்டி, அதை பாதிக்கப்பட்ட நபரின் நோக்கிப் பிடித்தார் மற்றும் பல மதுபானப் போத்தல்களைச் சக்கரவண்டி டஃப்ஃல் பையில் வைத்து திருடப்பட்ட பொருட்களுடன் கால்நடையாக தப்பிச் சென்றார். […]

மீன்பிடி தினத்தை முன்னிட்டு “அக்வா பிளான்ட் 2025”; பயிற்சி பட்டறைகள் ஆரம்பம்

உலக மீன்பிடி தினத்தை முன்னிட்டு, இலங்கை சர்வதேச மற்றும் தேசிய ரீதியாக சிறு அளவிலான மீன்வள மேலாண்மைத் திட்டங்களை உருவாக்கும் நோக்கில் இரண்டு முக்கிய பயிற்சி பட்டறைகளை நடத்துகின்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் மற்றும் சர்வதேச உணவுப் மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மற்றும் வங்காள விரிகுடா திட்டம் – அரசுகளுக்கிடையேயான அமைப்பு (BOBP-IGO) ஆகியவற்றுடன் இணைந்து, தெற்காசிய நாடுகளுக்கான சிறு அளவிலான மீன்வள […]

நுகேகொடைப் பேரணி; உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு ஏற்படும் சிரமம்!

நாளை (21) நடைபெறவுள்ள நுகேகொடைப் பேரணியால் உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு ஏற்படும் சிரமம் குறித்த கரிசனை பற்றி அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளதது. ஐக்கிய மாற்று அணியான (ඒකාබද්ධ විකල්පය) லங்கா ஜனதா கட்சி, அருணலு ஜனதா கட்சி, மற்றும் சிங்கள தீப முன்னணி ஆகியவற்றின் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை. நாளை (நவம்பர் 21) நுகேகொடையில் நடைபெறவிருக்கும் கூட்டத்தின் காரணமாக, உயர்தரப் பரீட்சைக்கு (A/L) முகம் கொடுக்கும் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்று ஐக்கிய மாற்று […]

அரசாங்கத்திற்கு எதிரான நாளைய ஆர்ப்பாட்டத்தை தமிழ் மக்களும் தமிழ் கட்சிகளும் முற்றாக புறக்கணிக்க வேண்டும் – ந. ரவிகுமார்

நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலைகைளை நுணுக்கமாக கவனித்துப் பார்ப்பதற்காக, நாளை நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் சில எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்துள்ள அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கான எமது தெளிவான மற்றும் பொறுப்பான நிலைப்பாட்டை அறிவிக்க விரும்புகிறோம். இன்று நாட்டில் உருவாகி வரும் அரசியல் மாற்றங்கள், சிறுபான்மை தமிழ் மக்களுக்கு வரலாற்றில் இதுவரை கிடைக்காத அளவுக்கு புதிய வாய்ப்புகளையும் சாதகமான சூழலையும் வழங்கி வருகின்றன. சுதந்திரம் கிடைத்தது முதல் 76 ஆண்டுகளாக […]

சமூக மற்றும் பாடசாலை மட்டத்தில் கழிவு முகாமைத்துவ விழிப்புணர்வு அவசியம் – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மேல் மாகாண கழிவு முகாமைத்துவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசேட உபகுழுவின் கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்பில் நவம்பர் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போது, மேல் மாகாணத்தின் வீடுகள், வீதிகள், நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் வெளியேற்றும் நகரத் திண்மக் கழிவு முகாமைத்துவத்தின் தற்போதைய நிலை, திண்மக் கழிவுகளால் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் கழிவு முகாமைத்துவம் பற்றிய நிபுணத்துவமிக்க […]

சர்வானந்த் நடிக்கும் ‘ பைக்கர்’

‘எங்கேயும் எப்போதும்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் அறிமுகமாகி, ‘ஜே கே என்னும் நண்பனின் வாழ்க்கை’ மூலம் பிரபலமான நடிகர் சர்வானந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ பைக்கர் ‘ எனும் திரைப்படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. தெலுங்கு இயக்குநர் அபிலாஷ் ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ பைக்கர்’ எனும் திரைப்படத்தில் சர்வானந்த் , டொக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜே. யுவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு […]