ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!
கிண்ணியாவில் ஐஸ் போதைப்பொருளை, விற்பனை செய்வதற்காக தனது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றுமுன்தினம்(11) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிண்ணியா – மகரூப் நகர் பிரதேசத்தை சேர்ந்த, 33 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 2.720 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற, இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். […]
தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் தெரு நாய்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியன் முதல் மூன்று மில்லியன் வரை அபாயகரமாக உயர்ந்துள்ளதாக இலங்கை விலங்குகள் நலச் சங்கம் எச்சரித்துள்ளது. இந்த அபரிமிதமான அதிகரிப்பால், ஒவ்வொரு வருடமும் சுமார் 250,000 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. கண்டியில் நேற்று (12) ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய விலங்கு நலன் மூலம் சமூகப் பாதுகாப்பிற்கான கண்டிச் சங்கத்தின் செயலாளர் சம்பா பெர்னாண்டோ , இந்த நிலைமை மிகவும் தீவிரமடைந்து வருவதாகவும், “நாம் வெடிக்கக் காத்திருக்கும் […]
H3N2 வைரஸ் குறித்து கனடாவுக்கு எச்சரிக்கை
கனடாவில் இந்த ஆண்டு குளிர்காலம் கடுமையான காய்ச்சல் பரவலுக்கான எச்சரிக்கைகளை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் பரவும் H3N2 வகை influenza வைரஸ், இந்த ஆண்டுக்கான தடுப்பூசியுடன் பொருந்தாமல் இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது 5 சதவீதம் என்ற தொற்று பரவல் அளவை விட குறைவாக இருந்தாலும், சில வாரங்களுக்கு முன்பு இருந்ததை ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது. தென் அரைகோளத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சாதாரணத்தை விட அதிகமான காய்ச்சல் தொற்றுகள் பதிவாகியுள்ளன. அவுஸ்திரேலியாவில் மட்டும் 4.1 […]
இரட்டை உலக சாதனை படைத்த சாமுத்ரிகா!
சாமுத்ரிகா மேக்கப் ஸ்டுடியோ மற்றும் அகாடமி 315 பங்கேற்பாளர்களுடன் இரு பிரிவுகளில் ஒரே மேடையில் இரட்டை உலக சாதனையை கொழும்பில் படைத்துள்ளது. இந்த சாதனையில் 315 பங்கேற்பாளர்கள் நேரடியாகவும் இணையம் வழியாகவும் கலந்து கொண்டனர். மணப்பெண் அலங்காரப் பிரிவில் 170 அழகுக்கலைஞர்களும், மணப்பெண் அலங்காரம் அல்லாத பிரிவில் 140 துறைசார் போட்டியாளர்களும் ஒரே நேரத்தில் பணியாற்றி இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இந்தக் குறிப்பிடத்தக்க சாதனை, உலக சாதனைகள் சங்கத்தின் (World Record Union) நடுவர் திருமதி […]
சீனாவில் ரூ.50,000 கோடி மோசடி; குற்றவாளி லண்டனில் தலைமறைவு
சீனாவில் 50,000 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றிவிட்டு, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தஞ்சம் புகுந்த மோசடி ராணி, விரைவில் தண்டனையை எதிர்கொள்ள இருக்கிறார். கடந்த 2021ம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களா ஒன்றை வாங்க முயன்றார். வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர், அவ்வளவு பெரிய தொகையை லண்டனில் முதலீடு செய்வது சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால், அவர் அதற்கான உரிய விளக்கத்தை அளிக்கவில்லை. இதையடுத்து, லண்டனின் ஹாம்ப்ஸ்டெட் ஹீத் […]
தமிழகம், புதுச்சேரியில் இன்று மிதமான மழை
தமிழகம், புதுச்சேரியில் இன்று, மிதமான மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் அதிகபட்சமாக, 13 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் பகுதிகளில் தலா, 6; மதுரை மாவட்டம் எழுமலையில், 5; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது. தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் […]
தொடர்ச்சியாக கோவில்களில் குற்றங்கள்; தமிழக முதல்வருக்கு ராஜ குற்ற தோஷம்?
”கோவில்களில் நடக்கும் குற்றங்களுக்கு, ‘ராஜ குற்றம்’ என, ஒன்று உண்டு. முதல்வர் உள்ளிட்ட ஆட்சியாளர்களுக்கு அந்த தோஷம் ஏற்படும்,” என, ஜோதிடரும் தமிழக பா.ஜ., ஆன்மிகம், கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில அமைப்பாளருமான ஷெல்வி தாமோதர் தெரிவித்தார். பா.ஜ., ஆன்மிகம், கோவில் மேம்பாட்டு பிரிவு சார்பில், கோவை, சேலம், வேலுார் பெருங்கோட்ட மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. அதன் பிறகு, ஷெல்வி அளித்த பேட்டி: விருதுநகரில் கோவில் காவலாளிகள் கொல்லப்பட்டது போல, மற்ற […]
செங்கோட்டை கார் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது உமர் தான் – டிஎன்ஏ சோதனை
டில்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு நடத்தியது பயங்கரவாதி உமர் தான் என்பது டிஎன்ஏ சோதனையில் உறுதி செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ஆதிலை கைது செய்தபோது, அவர்கள் மிகப் பெரிய தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியிருந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. காஷ்மீர், உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானாவில் இருந்து, 2900 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் டாக்டர் ஆதில் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஜம்மு – காஷ்மீரின் […]
இலங்கை தபால்சேவை மூலம் பிறப்புச் சான்றிதழ்கள்
இலங்கை தபால் சேவை மூலம் குடிமக்களுக்கு தேசிய பிறப்புச் சான்றிதழ்களை நேரடியாக வழங்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டத்தை இலங்கை நேற்று புதன்கிழமை (12) ஆரம்பித்துள்ளதாக பதிவாளர் நாயகம் துறை அறிவித்துள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவின் தலைமையில் கம்பஹா மாவட்ட செயலகத்தில் இந்த முயற்சி தொடங்கப்பட்டது. இது அதிகாரப்பூர்வ ஆவணங்களின் பாதுகாப்பான மற்றும் திறமையான விநியோகத்தை மேம்படுத்த பதிவாளர் நாயகம் துறைக்கும் அஞ்சல் துறைக்கும் இடையிலான கூட்டு முயற்சியைக் குறிக்கிறது. […]
புதுடெல்லியை தாக்கும் நோக்குடன் மருத்துவர்களைத் தீவிரவாதத்திற்குள் ஈர்த்ததாக மதகுரு கைது
புதுடெல்லியை தாக்கும் நோக்குடன் ஃ பரிதாபாத்தில் 2,900 கிலோ கிராம் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில், மருத்துவர்கள் மற்றும் இளைஞர்களை தீவிரவாத கொள்கைகளுக்குள் ஈர்த்ததாக கருதப்படும் காஷ்மீரை சேர்ந்த ஒரு மதகுரு (இமாம்) கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் பகுதியை சேர்ந்த இமாம் இர்ஃபான் அகமது வாகா அன்று கைது செய்யப்பட்டார். இவர் இதற்கு முன்பு ஸ்ரீநகரில் உள்ள அரசுக் மருத்துவக் கல்லூரியில் துணை மருத்துவ ஊழியராகவும் (paramedical worker), பின்னர் நௌகாமில் இமாமாகவும் பணியாற்றியவர். இர்ஃபான் […]