தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஓய்வு

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்று (13) முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியிலிருந்தும் அரசு சேவையிலிருந்தும் ஓய்வு பெற்றார். ஒரு அறிக்கையை வெளியிட்டு, ரத்நாயக்க, 34 வருட அரச சேவைக்குப் பிறகு பதவி விலகுவதாக அறிவித்தார். அவர் ஒக்டோபர் 16, 2019 அன்று தேர்தல் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார், அதன் பின்னர் அவரது பதவிக் காலத்தில் தேசிய மற்றும் உள்ளூர் தேர்தல்களை நடத்துவதில் முன்னணிப் பங்காற்றியுள்ளார். தனது கடமைகளை நிறைவேற்றுவதில் தனக்கு […]

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி; தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது. இத்தொடரின் முதலாவது போட்டியை மேற்கிந்தியத் தீவுகளும், அடுத்த இரண்டு போட்டிகளை நியூசிலாந்தும் வென்றதுடன், நான்காவது போட்டியில் முடிவேதும் பெறப்படாத நிலையில், டுனெடினில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் வென்றதன் மூலம் 3-1 என்ற ரீதியில் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: நியூசிலாந்து மே. தீவுகள்: 140/10 (18.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: றொஸ்டன் சேஸ் 38 (32), […]

வெளியாக உள்ள திரைப்படங்கள்

தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள புதுப்படங்கள் மற்றும் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற படங்களின் ரீ-ரிலீஸ் என நாளை திரைக்கு வரவுள்ள படங்கள் குறித்து பார்ப்போம்… அதன்படி, தமிழில் நாளை ஏழு திரைப்படங்களும், ஒரு படம் ரீ-ரிலீசும் செய்யப்படுகிறது. காந்தா: துல்கர் சல்மான் ‘காந்தா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும். இப்படத்தில் மிஸ்டர் பச்சன் […]

பேருந்து மோதி இளைஞன் உயிரிழப்பு!

கலேன்பிந்துவெவ – ஹொரவ்பொத்தான பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர் பேருந்து மோதி உயிரிழந்தார். மஹதிவுல்வெவவிலிருந்து தம்பலகமுவ நோக்கி பயணித்த பேருந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஹொரவ்பொத்தான பகுதியை சேர்ந்த 19 வயதுடைய உல்முதீன் சாஹில் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞரின் சடலம் திருகோணமலை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அத்துடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் […]

சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம் சர்வதேசத்திற்கு காட்டும் கண்துடைப்பு – மூத்த சட்டத்தரணி இரத்தினவேல்

இலங்கையில் பொறுப்பு கூறல் கானல் நீராக காணப்படுகின்ற நிலையில் சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம் சர்வதேசத்திற்கு காட்டும் கண்துடைப்பு அலுவலகம் என மூத்த சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அரசியல் தீர்வும் பொறப்புக் கூறலும் ஒரு எண்ணிம ஆவண காப்பக அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு தொடக்க உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் […]

கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறைத் தலைவராக அமிர்தலிங்கம் தெரிவு !

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவராக கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை வரலாற்றில், ஒரு தமிழர் தலைவராக தெரிவு செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும். திருகோணமலை சம்பூரை பிறப்பிடமாகக் கொண்ட அவர், அத்துடன், ‘வரையறுக்கப்பட்ட வளங்களை உச்ச அளவில் பயன்படுத்துவது’ என்ற பொருளியல் கூற்றின் படி, நாங்கள் செயற்பட்டு முன்னேறினோம் என அவர் தெரிவித்துள்ளார்.

மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு

மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து, அவர்களை கௌரவிக்கும் முகமாக மன்னார் இரணை இலுப்பைக்குளம், முள்ளிக்குளம் பண்டிவிரிச்சான் பிரதேசத்தைச் சேர்ந்த 95 மாவீரர்களின் பெற்றோர்கள் இன்று (13) கெளரவிக்கப்பட்டனர். மன்னார் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்களின் உறவுகளுடன் 150 மேற்பட்டோர் பங்குபற்றலுடன் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் அருட்தந்தையர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். முதலில் மாவீரர் […]

திருநாவற்குளத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் உட்பட்ட நால்வர் போதை மாத்திரைகளுடன் கைது

போதை மாத்திரைகளுடன் திருநாவற்குளத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் உட்பட்ட நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் வியாழக்கிழமை (13) தெரிவித்தனர். வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்து வவுனியாவின் பல்வேறு இடங்ளில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 4 இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 150 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுளள்ளன. அந்தவகையில், திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரிடம் இருந்து 80 போதை மாத்திரைகளும், […]

தொல்பொருள் ஆணைக்குழுவில் இணையவுள்ளோர் தமது இனத்தினை பாதிக்கின்ற செயற்பாடுகளை எதிர்ப்பப்பவர்களாக இருக்க வேண்டும்

தொல்பொருள் ஆணைக்குழுவில் இணைத்துக் கொள்ளப்படும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் வெறும் பொம்மைகளாக இல்லாமல், சிறுபான்மை தேசிய இனத்தினை பாதிக்கின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது தமது நியாயமான கருத்துகளை இடித்துரைப்பவர்களாக இருக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த அரசாங்கங்களை விட இந்த அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்திற்கு சாதகமான நிலை […]

கனடா அரசின் அதிரடி தீர்மானம்

ரஷ்யாவுக்கு எதிராக கனடா புதிய தடைகளை விதித்துள்ளதாக கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அனிதா அறிவித்துள்ளார். நயாகரா பிராந்தியத்தில் நடைபெறும் G7 நாடுகள் குழுவின், வெளிநாட்டு அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டு வரும் ஆளில்லா விமான தாக்குதல் மற்றும் இணையத் தாக்குதல்களுக்கு பின்னணியில் இருப்போர் மீது இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். தடைகளை தவிர்க்கும் நோக்கில் ரஷ்யா பயன்படுத்தும் மறைமுகக் கடற்படையையும் (shadow fleet) […]