உரிமங்களை புதுப்பிக்கத் தவறிய துப்பாக்கி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை
கடந்த ஆண்டு உரிமங்களை புதுப்பிக்கத் தவறிய 7,000 க்கும் அதிகமான துப்பாக்கி உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் 2024 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையின்படி, டிசம்பர் 31, 2024 வரை 7,125 துப்பாக்கி உரிமங்கள் புதுப்பிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் பிரிவு 182 இன் பிரிவு 29 (1) இன் கீழ், துப்பாக்கி உரிமையாளர்கள் உரிமம் காலாவதியான பத்து நாட்களுக்குள் தங்கள் துப்பாக்கிகள் மற்றும் உரிமங்களை […]
நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா தகாத வார்த்தைகளால் விளிக்கப்பட்டார்?
நாடாளுமன்றத்தில் தன்னை தகாத வார்த்தைகளில் விளித்து பேசியதால் தனது வரப்பிரசாதங்கள் மீறப்பட்டுள்ளதாக அர்ச்சுனா ராமநாதன் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரைபின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களை ஆரம்பித்து வைத்து பேசும்போது சபாநாயகர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 08.11.2025 வரவு செலவுத் திட்ட விவாதத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற செயலாளருக்கு ஏற்கனவே அறிவித்துள்ளேன். அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக விளித்து […]
சிறப்பு தேடுதல்; பீடி இலைகளுடன் மூன்று படகுகள் கைப்பற்றல்
இலங்கை கடற்படையினர் கடந்த 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு களப்பு பகுதியிலும் சிலாபத்தில் உள்ள கருகபனை களப்பு பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் எழுநூற்று நாற்பத்திரண்டு (742) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் மூன்று (03) டிங்கி படகுகளை கடற்படையினர் கைப்பற்றினர். அதன்படி, நீர்கொழும்பு களப்பில் உள்ள கொத்தலாவல பாலத்திற்கு அருகில் மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கெலனி நடத்திய சிறப்பு […]
தடுத்து வைக்கப்பட்ட குர்ஆன் பிரதிகளை விடுவிக்க வேண்டும் – காதர்
சுங்கத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள குர்ஆன் பிரதிகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டிருக்கும் மீளாய்வு குழுவின் பரிந்துரைகளை நிராகரித்துவிட்டு, 25 இலட்சம் முஸ்லிம் மக்களின் சமய உரிமையை பாதுகாக்கும் வகையில் குர்ஆன் பிரதிகளை விரைவாக விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், […]
கொழும்பு பிரதான வீதியில் பஸ் விபத்து
மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் பொலன்னறுவை,பெதிவெவ பகுதியில் 21ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று புதன்கிழமை (12) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் அசுத்த நீர் விநியோகம்
கிளிநொச்சி மாவட்டத்திற்கு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் பொது மக்களுக்கு வழங்கப்படுகின்ற குழாய் வழி குடிநீர் பொருத்தமற்ற வகையில் காணப்படுகிறதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கிளிநொச்சியின், பரவிப்பாஞ்சான், திருநகர். பரந்தன்,பூநகரி போன்ற பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படுகின்ற நீரானது சேற்று நீரின் நிறத்திலும் மணத்திலும் காணப்படுகின்றதாகவும் குடிநீர் உட்பட அனைத்து தேவைகளுக்கும் குழாய் வழி நீரை பயன்படுத்தும் மக்கள் இதனால் பெரிதும் சிரமப்படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். அத்தோடு பொருத்தமற்ற வகையில் விநியோகிப்படுகின்ற நீர் தொடர்பாக ஆதாரங்களுடன் உரிய அதிகாரிகளின் […]
செய்தியாளர்களை அவமதித்த கெஹலியவின் மகன்
நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனான ரமித் ரம்புக்வெல்ல, கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை நோக்கி நடுவிரலைக் காட்டிய காணொளி சமூக ஊடகங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு எதிராகச் சட்டவிரோதச் சொத்துச் சேர்ப்பு தொடர்பான குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட பின்னரே இந்தக் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், ரமித் ரம்புக்வெல்ல ரூ. 296 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களுக்குக் கணக்கு […]
ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபர்!
அநுராதபுரம் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரை நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் குறித்த உத்தரவை இன்று (12.11.2025) பிறப்பித்துள்ளது. தேசிய மக்கள் கட்சியின் பேலியகொட நகரசபை உறுப்பினர் டிஸ்னா நெரஞ்சலவின் கணவரான குறித்த பாடசாலை அதிபர், கடந்த 5ஆம் திகதி (05.11.2025) போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார். மேலும், அவர்களது மகன், கடந்த மாதம் 29ஆம் திகதி போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2026-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரே கடைசி – ரொனால்டோ
போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பைத் தொடர் தனது கடைசி சர்வதேச தொடராக இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 40 வயதான ரொனால்டோ, “கடந்த 25 ஆண்டுகளாக கால்பந்துக்காக எல்லாவற்றையும் செய்துவிட்டேன். அநேகமாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே விளையாடுவேன்” என்று தெரிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 உலகக் கோப்பை ரொனால்டோவுக்கு ஆறாவது உலகக் கோப்பைத் தொடராக அமையும். இதுவரை ஐந்து உலகக் […]
யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்று மாசுபாடு
யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இதை குறைப்பது தொடர்பில், மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கும், யாழ்ப்பாண மாநகர சபைக்கும், மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. சுற்றாடல் மாசுபாட்டை குறைக்கும் வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு, மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கும், யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும் உத்தரவிடுமாறு கோரி, மருத்துவர் உமா சுகி நடராஜா என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்களான ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய […]