கிளிநொச்சி மாவட்டத்தில் அசுத்த நீர் விநியோகம்

கிளிநொச்சி மாவட்டத்திற்கு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் பொது மக்களுக்கு வழங்கப்படுகின்ற குழாய் வழி குடிநீர் பொருத்தமற்ற வகையில் காணப்படுகிறதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கிளிநொச்சியின், பரவிப்பாஞ்சான், திருநகர். பரந்தன்,பூநகரி போன்ற பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படுகின்ற நீரானது சேற்று நீரின் நிறத்திலும் மணத்திலும் காணப்படுகின்றதாகவும் குடிநீர் உட்பட அனைத்து தேவைகளுக்கும் குழாய் வழி நீரை பயன்படுத்தும் மக்கள் இதனால் பெரிதும் சிரமப்படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்தோடு பொருத்தமற்ற வகையில் விநியோகிப்படுகின்ற நீர் தொடர்பாக ஆதாரங்களுடன் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்த மக்கள், உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே பொது மக்களின் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக தேசிய நீர் வழங்கல்வடிகாலமைப்புச் சபையை தொடர்பு கொண்டு வினவிய போது “ கிளிநொச்சி மாவட்டத்திற்கு இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது. ஒன்று புதிதாக நவீன தொழிநுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் இரண்டாவது ஏற்கனவே காணப்படுகின்ற பாரம்பரிய முறையிலான பழைய நீர் சுத்திகரிப்பு நிலையம். தற்போது பெய்த மழையுடன் கிளிநொச்சி குளத்தின் நீரில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஆதாவது அதிகளவு சேற்று நீர் குளத்தை வந்தடைந்தமையால் பழைய நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக அவற்றை முழுமையாக சுத்திகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கிளிநொச்சியின் ஒரு பகுதி பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படுகின்ற நீர் கலங்கிய நீராக காணப்படுகின்றது. ஆனால் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக விநியோகிக்கப்படுகின்ற நீரில் இவ்வாறான நிலைமை ஏற்படுவதில்லை.

இருப்பினும் கிளிநொச்சி முழுவதற்கும் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக நீரை விநியோகிப்பதற்கு அதன் கொள்ளளவு போதுமானதாக இல்லை எனத் தெரிவித்த அவர்கள் தம்மால் விநியோகிக்கப்படுகின்ற நீரின் தரம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவே பொது மக்கள் அச்சமின்றி பயன்படுத்த முடியும். அத்தோடு தற்காலிக ஏற்பாடாக கிளிநொச்சி முழுவதற்கும் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நீர் விநியோகம் மாற்றப்பட்டுள்ளது.

என்றும் ஆனாலும் மக்களின் பாவனைக்கு ஏற்ப முழுமையாக வழங்க முடியாத நிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகமே மேற்கொள்ளப்படும்” எனவும் தெரிவித்தனர்.

fue

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

May 31, 2026

நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இந்த

tamil

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம்; நம்பிக்கைக்காக – வாழ்க்கைக்காக நடப்போம்! உயிர்களைக் காப்போம்!

May 31, 2026

ஒரு நோயை எதிர்த்து போராடுவது மருத்துவர்களின் கடமை மட்டும் அல்ல… அது ஒவ்வொரு மனிதனின் மனிதநேயப் பொறுப்பும் கூட. புற்றுநோயால்

mass

பரவி வரும் மூளைக்காய்ச்சலைத் தடுக்க கல்வி அதிகாரிகளுக்கு வழிகாட்டும் அறிவுறுத்தல்கள்

May 31, 2026

தற்போது சில மாவட்டங்களில் பரவி வரும் என்டிரோவைரஸ் மூளைக்காய்ச்சல் எனப்படும் நோயை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து, சுகாதார மற்றும்

har

பிரதமர் ஹரிணி பிரித்தானியாவில் தங்கியிருந்த இல்லம் குறித்தும் சர்ச்சை

May 31, 2026

இலங்கை அரசியல் களத்தில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரின் பிரித்தானிய விஜயங்களின்

chann

தமிழ் இனப்படுகொலை நாட்டில் இடம்பெறவில்லை; ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களைக் கொன்ற ‘பிரிகேடியர் பால்ராஜ்’ ஐ பாராளுமன்றில் நினைவுகூர விட்டிருக்கக் கூடாது!

May 31, 2026

டாளுமன்றத்திற்குள் பயங்கரவாதிகள் நினைவுகூரப்படுவது குறித்தும் ஜனாதிபதி மற்றும் அரசு உடனடியாகத் தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என

NT5WBSMVIZCQFAUVDLDAPULJTM

நோர்த் யார்க்கில் ‘வீட்டின் அருகிலேயே’ நபர் ஒருவர் சுட்டுக் கொலை (Formal Tamil)

May 30, 2026

நோர்த் யார்க்கில் (North York) உள்ள தனது வீட்டின் அருகிலேயே 27 வயது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து,

arrestt

பிராம்ப்டன் கொலை முயற்சி வழக்கில் ஒருவர் கைது

May 30, 2026

பீல் பிராந்தியம் (Region of Peel) – பிராம்ப்டனில் நடந்த கொலை முயற்சி வழக்கு தொடர்பாக ஒரு நபரை 21-வது

acc 12

மிசிசாகா 410 நெடுஞ்சாலையில் நேரிட்ட கோர விபத்து

May 30, 2026

மிசிசாகாவில் சனிக்கிழமை அதிகாலை, டெரி சாலைக்கு (Derry Road) அருகே, நெடுஞ்சாலை 410-இன் தெற்கு திசை பாதையில் (Highway 410

acc 12

ஸ்மித்ஸ் பால்ஸ் அருகே நிகழ்ந்த வாகன மோதலில் ஒருவர் பலி, குழந்தை கவலைக்கிடமான நிலையில் அனுமதி

May 30, 2026

விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே குழந்தை விமானம் (Airlifted) மூலம் ‘சியோ’ (CHEO) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிபிசி நியூஸ்

default (29)

பழங்குடி மக்களுக்கு எதிராக கனடா தொடர்ந்து இனப்படுகொலை செய்து வருகிறது: சர்வதேச தீர்ப்பாயம்

May 30, 2026

னடா அரசாங்கம் ‘பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு உத்தியை நிலைநிறுத்தியுள்ளது’ என்று தீர்ப்பாய நீதிபதி கூறுகிறார். ஹோலி கப்ரேரா ·

w-412,h-232,imgid-01j20fp4ps4b0d77k9mwf2r578,imgname-free-bus-pass-1

“சீருடை இருந்தால் போதும்; காசு தேவையில்லை!” – ஜூன் 4-ல் பள்ளி திறப்பையொட்டி அரசு பஸ்களில் இலவசப் பயணத்திற்கு அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அதிரடி உத்தரவு!

May 30, 2026

சென்னை: “ஜூன் 4-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில், அரசுப் பள்ளி மாணவ-மாணவியர் எவ்விதக் கட்டணமும்

Madras-High-Court

“அமைச்சர்களுக்காகக் கடவுள் காத்திருக்க வேண்டாம்!” – திருப்பரங்குன்றம் நடை திறப்பு விவகாரத்தில் தவெக அரசுக்கு உயர்நீதிமன்றம் உக்கிர அறிவுறுத்தல்!

May 30, 2026

சென்னை: “மாநிலத்தில் உள்ள எம்பிக்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் போன்ற விஐபி-க்களுக்காகக் கோவில்களில் கடவுள் ஒருபோதும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை”