சில மாவட்டங்களுக்கு சிவப்பு மின்னல் எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் கடும் மின்னல் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று(12) இரவு 11.30 மணி வரை நடைமுறையில் உள்ள இந்த எச்சரிக்கையின்படி, 08 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், களுத்துறை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் 17 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த மாவட்டங்களில் கடுமையான […]

மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க தவறினால் எமக்கு ஏற்பட்ட நிலையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் – ராேஹித்த அபேகுணவர்த்தன

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடத்தில் இடம்பெற்ற பெரும்பாலான கூட்டுறவு சங்க தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது. இது அரசாங்கத்துக்கு நல்லதில்லை. அதனால் அரசாங்கம் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க தவறினால், எமது அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நிலையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ராேஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து […]

3 பெண்களில் ஒருவர் அதிக எடை கொண்டவர்; இலங்கையில் 42 சதவீத பெண்கள் பருமனாக உள்ளனர்!

இலங்கையில் கிட்டத்தட்ட 3 பெண்களில் ஒருவர் (29.6 சதவீதம்) அதிக எடை கொண்டவர்களாகவும், 18-60 வயதுடைய 8 பேரில் ஒருவர் (12.6 சதவீதம்) உடல் பருமன் உள்ளவர்களாகவும் உள்ளனர். அதிக எடை மற்றும் உடல் பருமன் விகிதங்கள் 50-60 வயதுடைய பெண்களிடையே உள்ளன என தேசிய ஊட்டச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்து கணக்கெடுப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய ஊட்டச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்து கணக்கெடுப்பின்படி, அதிக எடை 25 கிலோ முதல் 29.9 கிலோ/மீ² வரையிலான உடல் நிறை குறியீட்டை […]

தமிழகத்தில் இருந்து இலங்கை வரவிருந்த விமானத்தில் கோளாறு

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வரவிருந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறு விமானியின் சாதுர்யத்தினால் தவிர்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்ல தயாரான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்திலேயே கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானம் புறப்படுவதற்கு முன்னர் கோளாறினை விமானி கண்டுபிடித்துள்ள நிலையில், பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுமார் 12 மணி நேர தாமதத்தின் பின்னர் மற்றுமொரு விமானம் மூலம் பயணிகள் கட்டுநாயக்க விமானம் நோக்கி சென்றுள்ளனர். குறித்த விமானம் 262 பயணிகளுடன் கொழும்பு நோக்கி பயணிக்க தயாராகி […]

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு; தொழில் அமைச்சில் கலந்துரையாடல்

தொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும் இடையில் இன்று தொழில் அமைச்சில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. தோட்ட தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்க இருக்கும் 200 ரூபாய் கொடுப்பனவு குறித்தும் கம்பனிகள் வழங்க இருக்கும் 200 ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடல் தொழில் அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கலந்துரையாடலில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் உட்பட பல தொழிற்சங்க அமைப்புகள் கலந்துக் கொண்டன. இதன் போது இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில்,2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் […]

சுன்னாகம் பொலிஸாரால் ஆவா குழு வினோத் உட்பட இருவர் கைது

ஆவா குழு தலைவன் வினோத் உட்பட இருவர் நேற்றையதினம்(11) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மேலும் தெரியவருகையில், ஆவா குழு வினோத் என்பவர் 2 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடனும், அவரது சகா ஒரவர் கைக்குண்டு மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இருவரும் வெவ்வேறு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பெயருக்கும் கௌரவத்திற்கு பங்கம்; நீதிமன்றத்தை நாடும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

தனது பெயருக்கும் கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்கக்கூடிய வகையில் கருத்து தெரிவித்த நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் என்பவருக்கு எதிராக சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் என்பவருக்கு எதிராக சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன். அவரிடம் ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரியுள்ளேன். எனது அரசியல் நடவடிக்கையை பாதாளத்திற்குள் கொண்டு […]

முழு வீச்சில் நடக்கும் ‘பராசக்தி’ இறுதிக்கட்ட பணிகள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ படத்துடைய பர்ஸ்ட் சிங்கிள் சில தினங்களுக்கு முன்பாக வெளியானது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. இந்நிலையில் ‘பராசக்தி’ படத்துடைய அடுத்தக்கட்ட பணிகளை படக்குழுவினர் துவங்கியுள்ளனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக ‘பராசக்தி’ ரிலீசாக இருக்கிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ரசிகர்கள் இடையில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி கொண்டிருக்கிறது. எஸ்கேவுடைய 25வது படமாக ‘பராசக்தி’ உருவாகியுள்ள நிலையில், […]

காந்தா படத்திற்கு வந்த புது சிக்கல்…

துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் காந்தா. துல்கர் தயாரிப்பில் இந்த வருடம் ரிலீஸ் ஆன லோகா படம் பெரிய ஹிட் ஆகி வசூல் சாதனை படைத்தது. அடுத்து அவர் நடிப்பில் வர இருக்கும் காந்தா மீது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பை வைத்து இருக்கின்றனர். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டார் எம்.கே.தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று படம் தான் இது. இந்நிலையில் இந்த படத்திற்காக எம்.கே.தியாகராய பாகவதரின் வாரிசுகளிடம் அனுமதி வாங்கவில்லை எனவும், அதனால் […]

நடிகை திவ்யபாரதி திருமணம்?

நடிகை திவ்யபாரதி பேச்சிலர், கிங்ஸ்டன் போன்ற படங்களில் நடித்து பிரபலம் ஆனவர். அவரை ஜீ.வி.பிரகாஷ் உடன் இணைத்து பல கிசுகிசுக்கள் வந்தன. ஜீ.வி – சைந்தவி விவாகரத்துக்கு திவ்யபாரதி தான் காரணம் என ஒரு தரப்பு கிசுகிசுத்தது. ஆனால் தான் ஏற்கனவே திருமணம் ஆன ஒருவரை நிச்சயம் காதலிக்க மாட்டேன் என விளக்கம் கொடுத்து கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை திவ்யபாரதி. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் திவ்யபாரதி செய்தியாளர்களிடம் பேசும்போது அவரது திருமணம் […]