மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க தவறினால் எமக்கு ஏற்பட்ட நிலையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் – ராேஹித்த அபேகுணவர்த்தன

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடத்தில் இடம்பெற்ற பெரும்பாலான கூட்டுறவு சங்க தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது. இது அரசாங்கத்துக்கு நல்லதில்லை. அதனால் அரசாங்கம் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க தவறினால், எமது அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நிலையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ராேஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஜனாதிபதி வரவு செலவு திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும்போது அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆளும் தரப்பினர் மொத்தமாக 83 தடவைகள் கைதட்டி வரவேற்றனர். இவ்வாறுதான் நாங்களும் அன்று கைதட்டி வரவேற்றோம். ஆனால் இரவில் நித்தரைகொண்டு எழும்பும்போது எமது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

எமது அரசாங்கம் இல்லாமல்போயுள்ளது. இவ்வாறு நாங்கள் நினைத்துப்பார்க்காத விடயங்கள் இடம்பெறுகிறது என்பதை நாங்கள் நினைவில்கொள்ள வேண்டும்.

அத்துடன் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பயன்படுத்தும் தீவிர ஆயுதம்தான் பொய். ஆனால் பெற்றுக்கொண்ட அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்ள அந்த பொய்யை பயன்படுத்த முடியாது. அந்த ஆயுதத்தை மக்கள் நம்பப்போவதில்லை. இந்த வரவு செலவு திட்ட விவாத்தத்தின்போது எதிர்க்கட்சிகள் முன்வைத்த பிரதான

குற்றச்சாட்டு, இந்த அரசாங்கம் 2025 வரவு செலவு திட்டத்தில் பிரேரித்த முன்மொழிவுகளில் 50 வீதத்தைக்கூட பூரணப்படுத்தவில்லை என்பதாகும். இதற்கு காரணம் என்ன என்பதை தேடிப்பாருங்கள். அதேபோன்று அடுத்த வருடத்துக்கு சமர்ப்பித்திருக்கும் வரவு செலவு திட்டத்தில் பல்வேறு பிரேரணைகள் முன்மொழியப்பட்டிருக்கின்றன. அடுத்த வருடம் டிசம்பர் மாதமாகும்போது இந்த பிரேரணைகளில் 50வீதமாவது பெய்து முடிக்கும் என நம்பிக்கை இல்லை.

ஏனெனில் இந்த நாட்டில் 17 இலட்சம் அரச ஊழியர்கள் இருக்கின்றனர். அவர்களை அரசாங்கம் தற்போது பயமுறுத்தி இருக்கிறது. அவர்கள் விரைவாக தீர்மானங்களை எடுப்பதில்லை. பிரதேச செயலாளர் முதல் ஜனாதிபதி செயலாளர் வரை, நல்ல வேலைத்திட்டத்துக்காக தவறான முறையில் கைச்சாத்திட்டு பிற்காலத்தில் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படும்போது அவர்களை பாதுகாக்க யாரும் முன்வருவதில்லை. அதனால்தான் இந்த அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு வேலை செய்ய முடியாமல் போனதற்கு காரணமாகும். முற்படுவதில்லை.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்தில், அரசாங்கத்தின் பிரபல்லியம் குறைவடைந்து வருகிறது. அரசாங்கத்துக்கு எதிராக முதலாவதாக வீதிக்கி இறங்கி இருப்பது விவசாயிகளாகும். இவர்கள்தான் இந்த அரசாங்கத்துக்கு முழுமையாக வாக்களித்தவர்கள். அப்படியென்றால் ஏன் இவர்கள் எதிராக இறங்கி இருக்கிறார்கள் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களின் பிரச்சினை தொடர்பில் தேடிப்பா்க்க வேண்டும். ஒருவருடத்துக்கு முன்னர் அரசாங்கத்துக்கு இருந்த மக்கள் விருப்பம் தற்போது இருக்கிறதா அரசாங்கம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

வாழ்வதற்கு முடியாதவு செலவு அதிகரித்த நாடுகளில் தெற்காசியாவில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. அரசாங்கம் நல்ல முறையில் செயற்பட்டிருந்தால், இந்த நிலை ஏற்படப்போவதில்லை.எமது ஆட்சியில் எங்களுக்கு முலாவது எதிர்ப்பு வந்தது.

கூட்டுறவு சங்க தேர்தலிலாகும். அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடத்தில் இடம்பெற்ற பெரும்பாலான கூட்டுறவு சங்க தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது. இது அரசாங்கத்துக்கு நல்லதில்லை. அதனால் அரசாங்கம் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க தவறினால், எமது அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நிலையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என்பதை அரசாங்கத்துக்கு தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

NT5WBSMVIZCQFAUVDLDAPULJTM

நோர்த் யார்க்கில் ‘வீட்டின் அருகிலேயே’ நபர் ஒருவர் சுட்டுக் கொலை (Formal Tamil)

May 30, 2026

நோர்த் யார்க்கில் (North York) உள்ள தனது வீட்டின் அருகிலேயே 27 வயது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து,

arrestt

பிராம்ப்டன் கொலை முயற்சி வழக்கில் ஒருவர் கைது

May 30, 2026

பீல் பிராந்தியம் (Region of Peel) – பிராம்ப்டனில் நடந்த கொலை முயற்சி வழக்கு தொடர்பாக ஒரு நபரை 21-வது

acc 12

மிசிசாகா 410 நெடுஞ்சாலையில் நேரிட்ட கோர விபத்து

May 30, 2026

மிசிசாகாவில் சனிக்கிழமை அதிகாலை, டெரி சாலைக்கு (Derry Road) அருகே, நெடுஞ்சாலை 410-இன் தெற்கு திசை பாதையில் (Highway 410

acc 12

ஸ்மித்ஸ் பால்ஸ் அருகே நிகழ்ந்த வாகன மோதலில் ஒருவர் பலி, குழந்தை கவலைக்கிடமான நிலையில் அனுமதி

May 30, 2026

விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே குழந்தை விமானம் (Airlifted) மூலம் ‘சியோ’ (CHEO) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிபிசி நியூஸ்

default (29)

பழங்குடி மக்களுக்கு எதிராக கனடா தொடர்ந்து இனப்படுகொலை செய்து வருகிறது: சர்வதேச தீர்ப்பாயம்

May 30, 2026

னடா அரசாங்கம் ‘பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு உத்தியை நிலைநிறுத்தியுள்ளது’ என்று தீர்ப்பாய நீதிபதி கூறுகிறார். ஹோலி கப்ரேரா ·

w-412,h-232,imgid-01j20fp4ps4b0d77k9mwf2r578,imgname-free-bus-pass-1

“சீருடை இருந்தால் போதும்; காசு தேவையில்லை!” – ஜூன் 4-ல் பள்ளி திறப்பையொட்டி அரசு பஸ்களில் இலவசப் பயணத்திற்கு அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அதிரடி உத்தரவு!

May 30, 2026

சென்னை: “ஜூன் 4-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில், அரசுப் பள்ளி மாணவ-மாணவியர் எவ்விதக் கட்டணமும்

Madras-High-Court

“அமைச்சர்களுக்காகக் கடவுள் காத்திருக்க வேண்டாம்!” – திருப்பரங்குன்றம் நடை திறப்பு விவகாரத்தில் தவெக அரசுக்கு உயர்நீதிமன்றம் உக்கிர அறிவுறுத்தல்!

May 30, 2026

சென்னை: “மாநிலத்தில் உள்ள எம்பிக்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் போன்ற விஐபி-க்களுக்காகக் கோவில்களில் கடவுள் ஒருபோதும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை”

screenshot-2026-05-29t121805-486-down-1780037569

“துடுப்பு இல்லாத படகு போல அல்லாடுகிறது அதிமுக!” – எடப்பாடி பழனிசாமிக்கு விலகல் கடிதம் அனுப்பி மேனாள் எம்பி இளவரசன் அசுர வேக அதிரடி!

May 30, 2026

சென்னை: “புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக-வில் காலம் காலமாக உண்மையாக உழைத்த விசுவாசத் தொண்டர்களுக்கு எவ்வித மரியாதையும் இல்லை;

ctr-nirmal-kumar (1)

“இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு பரோல்; நிரந்தர விடுதலைக்கு அசுர வேக மூவ்!” – போக்சோ குற்றவாளிகளுக்கு அமைச்சர் நிர்மல் குமார் உக்கிர எச்சரிக்கை!

May 30, 2026

சென்னை: “தமிழ்நாட்டின் பல்வேறு சிறைகளில் நீண்ட காலமாக வாடிக்கொண்டிருக்கும் இஸ்லாமியச் சிறைவாசிகளுக்கு பரோல் விடுப்பு வழங்கப் போர்க்கால அடிப்படையில் அதிரடி

dailythanthi_2026-05-30_kipuhmob_15

“10 மாதங்களுக்குப் பின் பாய்ந்த ஆக்ஷன்!” – கவின் ஆணவப்படுகொலை வழக்கில் சுர்ஜித்தின் தாயார் அதிரடி கைது; தவெக அரசுக்குத் திருமாவளவன் மாஸ் பாராட்டு!

May 30, 2026

சென்னை: “நெல்லை மாவட்டத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை வழக்கில், தலைமறைவாக இருந்த கொலையாளி சுர்ஜித்தின் தாயாரும்,

vikatan_2026-02-16_hc251k86_6369f12560b16

“தவறு செய்தவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்!” – காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அசுர வேக முறைகேடு புகார்; சொந்தக் கட்சி மீதே ஜோதிமணி எம்பி அதிரடிப் போர்க்கொடி!

May 30, 2026

சென்னை: “நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர்கள் தேர்வில் மிகப் பெரிய

1200-675-26777881-thumbnail-16x9-admk (1)

“அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது!” – குதிரை பேர விமரிசனத்தோடு அதிருப்தியாளர்களுக்கு அசுர வேக எச்சரிக்கை விடுத்த கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி!

May 30, 2026

திருவண்ணாமலை: “கோடிக்கணக்கான அடிமட்டத் தொண்டர்களால் கட்டிக்காக்கப்பட்ட மாபெரும் பேரியக்கமான அதிமுக-வை யாராலும் வீழ்த்தவும் முடியாது, அழிக்கவும் முடியாது; பதவி ஆசைக்காகவும்