பொலிஸ் அதிகாரி ஒருவர் போதைப்பொருள் வர்த்தகத்தை ஊக்குவிக்கிறார் – முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

போதைப்பொருள் வர்த்தகத்தை ஊக்குவிப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். வரவு செலவு திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்றைய தினம் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார். நுரைச்சோலை பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி போதைப்பொருள் வர்த்தகத்தை ஊக்குவிப்பதாக அவர் நேரடியாக குற்றம் சுமத்தியுள்ளார். போதைப்பொருள் வர்த்தகத்தை ஊக்குவிப்பதாக பொலிஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு | Police Oic Supporting […]

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

இலங்கையின் இலவச சுகாதார அமைப்பு கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறை, மருந்துப் பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரணப் பற்றாக்குறை போன்ற நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் தீர்வு காண அரசு தவறிவிட்டது என்று அந்தச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதன்படி நடைபெற்ற அவசர மத்தியக் குழுக் கூட்டத்துக்குப் பின்னர் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், […]

போதைப்பொருள் ஒழிப்பு; நடவடிக்கை எடுக்க முடியாதபடி எமது கைகளும் கட்டப்பட்டிருந்தன – பரா நந்தகுமார்

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் கடந்த காலங்களில் ஒரு கட்டத்திற்கு மேல் நடவடிக்கை எடுக்க முடியாதபடி எமது கைகளும் கட்டப்பட்டிருந்தன என தெல்லிப்பழை பொது சுகாதார வைத்திய அதிகாரி நந்தகுமார் தெரிவித்துள்ளார். வலி வடக்கு பிரதேச சபையின் உள்ளூராட்சி வார இறுதி நாள் நிகழ்வும், விருது வழங்கலும் நேற்று செவ்வாய்க்கிழமை பன்னாலை வர்த்தலம் விநாயகர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பரா. நந்தகுமார் இவ்வாறு தெரிவித்தார். […]

வடக்கு மாகாணத்துக்கு பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் நியமனம்

இலங்கை பொறியியல்சேவை மற்றும் இணைந்த சேவையின் தொழில்நுட்பவியல் சேவை பதவிக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு கைதடியில் உள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (12) நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் மாகாண சபை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 4 பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் 39 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப் பெண்களுக்கான செயற்கை நுண்ணறிவு பயிற்சிநெறி

தெற்காசிய ஊடக பெண்களுக்கான பிராந்திய அமைப்பான South Asian Women in Media (SAWM), பெண் ஊடகவியலாளர்களின் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) பற்றிய பயிற்சித் தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. மேற்படி இந்த பயிற்சி பட்டறையானது, கொழும்பு 3 இல் அமைந்துள்ள மென்டரினா ஹோட்டலில் இடம்பெற்றது. ஊடகத்துறையில் தொழில்நுட்பத்தின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தெற்காசிய ஊடகப் பெண்கள் அமைப்பு இப்பயிற்சித் தொடரை மூன்று மொழிகளிலும் நடைமுறைப்படுத்தியுள்ளது. முதலாம் […]

சர்வதேச மாணவர்கள் கனடா செல்ல புதிய மாற்றம்

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளை பெரும் முறையை கனடா இலகுவாக்க உள்ளது. இதற்கமைய, முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு இனி மாகாண அல்லது பிராந்திய சான்றளிப்பு கடிதம் தேவையில்லை. இந்த மாற்றம் செயன்முறையை விரைவுபடுத்துவதோடு காகித வேலைகளையும் குறைக்கின்றது. இதன்படி, முனைவர் பட்ட மாணவர்கள், தங்கள் பல்கலைக்கழக ஏற்பு கடிதம் மற்றும் உயிரியளவியல் (biometrics) சோதனை ஆகியவற்றை சரிபார்த்த பிறகும் இரண்டு வார விரைவான செயலாக்கத்திலிருந்து பயனடையலாம். புதிய அமைப்பில் […]

பெருந்தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்திய காலம் முடிந்து விட்டது ஜீவன் இந்தியா சென்று விடுவதே பொருத்தம்

முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் இந்தியாவிற்கு சென்று விடுவது பொருத்தமானது என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கடந்த 2025 ஆம் இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஜீவன் தொண்டமான் சிறந்த முறையில் ஆய்வு செய்துள்ளதாகவும் அதனாலேயே அவர் இந்தியாவில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்வதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். […]

பேராதனையில் கடைக்குள் புகுந்த பஸ்: பெண் பலி

பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலிஓய, கரமட பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (12) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில், கரமட பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான தக்ஷிலா ரத்நாயக்க (வயது 35) அவர் கடையில் இருந்தபோது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாக வந்த ஒரு தனியார் பஸ்ஸே இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பஸ் முதலில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு முச்சக்கரவண்டியுடன் பலமாக மோதி, அதனைத் தொடர்ந்து ஒரு வீட்டிற்குச் சேதம் விளைவித்துவிட்டு, இறுதியாக […]

வடக்கில் போதைப்பொருள் வியாபார பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார், தமிழ் அரசியல்வாதிகள் இணைவு – அமைச்சர் சந்திரசேகர்

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனூடான பிரச்சினையின் பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார் இருப்பதாக கூறுவதில் உண்மை இருக்கின்றது. இது மாபியாக்களுடன் தொடர்புபட்டுள்ளது. அந்த மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைந்துள்ளனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, தமிழ் மக்களுக்கு கார்த்திகை மாதம் […]

இலங்கையின் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் – கொழும்புத் திட்ட பங்குதாரர் கூட்டம்

இலங்கையின் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரவினால், இன்று மதியம் கொழும்பில் உள்ள முதன்மை மாநாட்டு அரங்கத்தில் கொழும்புத் திட்டத்தின் உறுப்பு நாடுகளின் பங்குதாரர்கள் கூட்டம் தலைமை தாங்கப்பட்டது. இந்த வரலாற்று இணைப்பு எழுபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாகக் கருதப்பட்ட அதே நகரத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரும் கொழும்புத் திட்ட அவையின் தலைவருமான ஜூலி சங் மற்றும் கொழும்புத் திட்டத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் பெஞ்சமின் பி. ரேயஸ் […]