தமிழக கடலில் இலங்கைப் பெண் உட்பட்ட 4 பெண்கள் மரணம்

தமிழ் நாட்டில் எண்ணூர் அருகே உள்ள கடலில் இலங்கை பெண் உட்பட்ட நான்கு பெண்கள் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று ஏற்பட்ட நிலையில், சம்பவத்தில் 17 முதல் 30 வயதுக்குட்பட்ட 4 பெண்கள் உயிரிழந்துள்ளனர். அலையால் அடித்துச்செல்லப்பட்ட பின்னர் குறித்த பெண்களின் உடல்கள் அனைத்தும் அதே இடத்தில் கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை ஏதிலிகள் முகாமில் வசிக்கும் தேவகி செல்வம் என்ற பெண்ணும் தமிழகத்தை […]

இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலையில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பிராந்தியம் முற்றிலும் மக்கள் வசிக்காத கடல் பகுதியில் ஏற்பட்டுள்ளதால், எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. எனவே, உயிர்சேதம் அல்லது சொத்து சேதம் குறித்த எந்தத் தகவலும் இதுவரை பதிவாகவில்லை. இதனால், இலங்கை மற்றும் இந்தியக் கடற்கரைகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என பிராந்திய சுனாமி எச்சரிக்கை மையங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

தமிழ்ப் பாடசாலைக்காக ஒதுக்கப்பட்ட காணியை சுவீகரிக்க அரசாங்கம் முயற்சி?

வத்தளையில் தமிழ் பாடசாலையொன்றை அமைப்பதற்காக சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் நாம் போராடி வருகின்றோம். நல்லாட்சி அரசாங்கத்தில் வத்தளை – ஒலியாமுல்ல பிரதேசத்தில் 210 பேர்ச் காணி இதற்காக ஒதுக்கப்பட்டது. அந்தக் காணியை தற்போது மீள சுவீகரிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. தமிழ் மாணவர்களின் கல்வி கற்கும் உரிமையைப் பறிப்பதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் வத்தளை பிரதேச சபை உறுப்பினர் காளிமுத்து தர்மரத்னம் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (31) வத்தளை நகரசபையில் இடம்பெற்ற மாவட்ட […]

துன்னாலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு

யாழ். வடமராட்சியில் வீடொன்றில் தவறான முடிவெடுத்த நிலையில் யுவதி ஒருவரின் சடலம் நேற்று (31.10.2025) காலை மீட்கப்பட்டுள்ளது. கரவெட்டி, துன்னாலை – அல்லையம்பதியைச் சேர்ந்த 27 வயது யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சென்ற கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து, சாட்சிகளை நெல்லியடி பொலிஸார் நெறிப்படுத்தியுள்ளனர். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது மிக செலவுமிக்க நாடாக இலங்கை

தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பின் இரண்டாவது மிக செலவுமிக்க நாடாக இலங்கை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தனி ஒரு நபரின் வாழ்க்கைச் செலவு வாடகையைத் தவிர்த்து 506 டொலர் அல்லது 153,899 ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது பயனர் உருவாக்கிய வாழ்க்கைச் செலவு புள்ளி விபர வலைத்தளமான Numbeo இன் தரவுகளை மையப்படுத்தித் தெரிவிக்கப்பட்டுள்ளது. Numbeo இணையதளத்தின்படி, கொழும்பு நகரில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு வாடகை நீங்கலாக, சௌகரியமாக வாழ மாதாந்தம் ரூபா 570,997 செலவாவதாக […]

அரசியல் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சர்வதேசத்தை நாடவுள்ள எதிர்க்கட்சி!

அரசியல் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி, சர்வதேசத்தை நாடுவதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இது தொடர்பில் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது, “ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூடுகள் இடம்பெற்றுள்ளன. அரச அலுவலகங்களுக்குள் புகுந்து மக்கள் பிரதிநிதிகள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அச்சமான நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அரசியல் தலைவர்களின் பாதுகாப்பே அச்சுறுத்தலில் உள்ளது […]

பாதாள உலகக்கும்பலுடன் சுங்கத்திணைக்கள சிலருக்குத் தொடர்பு?

சுங்கத்திணைக்களத்திலுள்ள சிலருக்கும் பாதாள உலகக்கும்பலுடன் தொடர்பு உள்ளது. அதனால் உத்தியோகபூர்வ அரசாங்கம் இருப்பதைப் போன்று அவர்களுக்குத் தேவையானவற்றை வழங்கும் அரச பொறிமுறையொன்றை பாதாள உலகக்கும்பல் தம்பிடியில் வைத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார். வெளிப்படையான அரசாங்கத்தைப் போன்றே மறைவான கறுப்பு ஆட்சியொன்று உருவாகியுள்ளது. இந்த நாட்டில் இரண்டு ஆட்சிகள் […]

ரஷ்யாவில் மக்கள் துன்புறுத்தப்பட்டு புதைக்கப்பட்டனர்?

ரஷ்ய எல்லைக்கு அருகில் கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமம் ஒன்றில் 448 அப்பாவி உக்ரேனிய மக்கள் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த செயல் கடந்த 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு உக்ரைனில் அமைந்துள்ள இசியம் நகர பைன் மரக் காட்டில் இந்த சடலங்கள் அனைத்தும் புதைக்கப்பட்டுள்ளன. அப்பகுதிக்கு விசாரணைக்கு சென்ற உக்ரைனிய அதிகாரி, சடலங்கள் புதைக்கப்பட்ட இடத்தால் பயணித்த போது அங்கு தாங்க முடியாத அளவு துர்நாற்றம் வீசியதாக கூறியுள்ளார். […]

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் தினமே இந்த அரசின் இறுதி நாள்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் தினமே இந்த அரசின் இறுதித் தினம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “எதுவுமே தெரியாத அமைச்சர்கள் குழுவொன்று தற்போது நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கின்றது. அதனை மக்களும் உணர ஆரம்பித்திருக்கின்றனர். நாட்டில் இருந்து போதைப்பொருளை முற்றாக ஒழித்து நாட்டைக் கட்டியெழுப்புவது சிறந்த வேலைத்திட்டமாகும். எனினும், அது பொது நிர்வாகத்தின் பிரதான பொறுப்பல்ல. போதைப்பொருள் ஒழிப்பு என்பது அரச நிர்வாகத்தின் […]

விவசாயத் துறையில் ஒத்துழைப்பு இந்திய – இலங்கை விவசாய செயற்குழுக் கூட்டம்

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான விவசாயம் குறித்த முதலாவது கூட்டுச் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இந்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைச் செயலாளர் தேவேஷ் சதுர்வேதி மற்றும் இலங்கை விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி. பி. விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர். இலங்கை தூதுக்குழுவில் விவசாயத் திணைக்களத்தின் மேலதிக விவசாயப் பணிப்பாளர் நாயகம் (அபிவிருத்தி) ஜி. வி. சியாமலி, விவசாயம், கால்நடை, காணி மற்றும் […]