கடல்சார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடற்படையினரால் கருத்தரங்கு

இலங்கை கடற்படையினர், இலங்கை கடல்சார் பல்கலைக்கழகம் – திருகோணமலை பிராந்திய மையத்தின் மாணவர்களுக்காக அடிப்படை முதலுதவி, உயிர் ஆதரவு மற்றும் நீர் பாதுகாப்பு திறன்கள் குறித்த பயிற்சியை நடத்துகின்ற (Basic First aid, Lifesaving and Water Safety Skills) இலங்கை பெருங்கடல் பல்கலைக்கழகம் – திருகோணமலை பிராந்திய மையத்தில் கடந்த16 ஆம் திகதி ஒரு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது. அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளை மருத்துவமனையால் கடற்படை சமூக சேவை திட்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த […]
மத்திய வங்கியின் இலக்குகள் அடுத்த வருடத்துக்குள் அடையப்படும்!

பணவீக்க மற்றும் நிதியியல் ஸ்திரத்தன்மைசார் இலக்குகள் அடுத்த வருடத்துக்குள் அடையப்படும் எனவும், தற்போது பதிவாகியுள்ள மற்றும் எதிர்வுகூறப்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி வீதமானது ஆரோக்கியமானதும், நிலையானதுமான மட்டத்தில் காணப்படுவதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். வருடாந்தம் மேற்கொள்ளப்படும் நிதியியல் முறைமை மீளாய்வு தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கிலான செய்தியாளர் சந்திப்பொன்று வியாழக்கிழமை (23) கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது பொருளாதார வளர்ச்சி, பணவீக்க நிலைவரம் மற்றும் எதிர்கால எதிர்வுகூறல்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் […]
2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் நிகழ்வு

சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல்’ நிகழ்வு இன்று வியாழக்கிழமை (23) காலை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது. சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு சிறந்த பங்களிப்பு வழங்கிய கைத்தொழில்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் பாடசாலைகள் மற்றும் சமூகப் பங்களிப்பை வரவேற்கும் […]
ஐரோப்பிய நாடுகளுக்குச் கடல் வழியாகப் பயணித்த 40 பேர் படகு விபத்தில் பலி

ஐரோப்பிய நாடுகளுக்குச் சட்டவிரோதமாகக் கடல் வழியாகப் பயணித்த 40 பேர் படகு விபத்தில் உயிரிழந்தனர். ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த இந்த அகதிகள், மத்திய தரைக்கடல் பகுதியில் துனிசியா அருகே பயணித்தபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற ஒரு படகு, மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குப் புறப்பட்டது. துனிசியா நாட்டின் மஹ்தியா நகர் அருகே நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்தப் படகு விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. தகவலறிந்த துனிசியா […]
ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீதான தடை – போர் நடவடிக்கை

அமெரிக்கா எங்கள் எதிரி. ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் போர் நடவடிக்கை என ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைனுடனான ரஷ்யாவின் போர் நான்காவது ஆண்டை எட்டிப் பிடிக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார். தற்போது ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும் லுகோயில் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டு உள்ளது. ரஷ்யாவிற்கு எதிராகத் தடைகளை டிரம்ப் அறிவிப்பது […]
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை படிப்படியாகக் குறைவடையும்!

நாட்டில் கடந்த ஒரு வாரமாக நிலவும் மழையுடனான காலநிலை படிப்படியாக குறைவடையும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் கடந்த 17ஆம் திகதி முதல் வியாழக்கிழமை (23) வரை சீரற்ற காலநிலையால் 13 மாவட்டங்களில் 2625 குடும்பங்களைச் சேர்ந்த 10 617 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதற்கமைய குருணாகல், அநுராதபுரம், காலி, கேகாலை, பதுளை, கண்டி, புத்தளம், கொழும்பு, நுவரெலியா, வவுனியா, மொனராகலை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலேயே […]
கல்விச் செலவின வீழ்ச்சி: இலங்கைக்கு பெரும் பின்னடைவு – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையில் நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் முறையற்ற வரிக்கொள்கை மற்றும் கல்வித்துறைக்கான குறைந்தளவு நிதி ஒதுக்கீட்டினால் பாடசாலைகள் முகங்கொடுத்துவரும் நெருக்கடிகள் தொடர்பில் விளக்கியும், அவற்றுக்கான தீர்வுப்பரிந்துரைகளை உள்ளடக்கியும் ‘வரிச்சலுகைகளும் பாடசாலைகள் முகங்கொடுத்துள்ள நெருக்கடிகளும்’ எனும் தலைப்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள 101 பக்க ஆய்வறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டது. மேற்படி ஆய்வறிக்கையைத் தயாரித்த மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சிரேஷ்ட ஆய்வாளரும், வறுமை மற்றும் சமத்துவமின்மை தொடர்பான செயற்பாட்டாளருமான சாரா சாதுன் இலங்கையின் வரிக்கட்டமைப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் […]
தேர்தல் காலம் பிற்போடப்படுவதற்கு நாம் காரணமில்லை – தேர்தல் ஆணையாளர் நாயகம்

மாகாண சபைத் தேர்தல் காலம் தாழ்த்தப்படுவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும், அதற்கான பொறுப்பை பாராளுமன்றமே ஏற்க வேண்டும். பொறுத்தமான முறைமையை பாராளுமன்றம் தேர்வு செய்தால், எந்த சந்தர்ப்பத்திலும் மாகாண சபைத் தேர்தலை தம்மால் நடத்த முடியும் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். குருணாகல் பிரதேசத்தில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தேர்தல் காலம் தாழ்த்தப்படுவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு […]
டிப்பர் லொறி வேன் மீது மோதிப் பலர் காயம் : வாழைச்சேனையில் சம்பவம்

இன்று வியாழக்கிழமை (23) வாழைச்சேனை வாகனேரி சந்தியில் இடம்பெற்ற விபத்தில், டிப்பர் லொறி ஒன்று வேன் மீது மோதியதில் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பொதுமக்களின் உதவியுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்து நிகழ்ந்த வேனில் இருந்து ஒரு சாரதி அனுமதிப்பத்திரம் மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்த சாரதி அனுமதிப்பத்திரத்தின் விபரம் தெரிந்தவர்கள் அல்லது உரிய நபரின் உறவினர்கள் இருப்பின், வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது அருகில் உள்ள அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து […]
சிவஞானம் ஸ்ரீதரன் பாராளுமன்ற நடத்தை விதிகளை மீறியுள்ளதாகக் குற்றச் சாட்டு

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், பாராளுமன்ற நடத்தை விதிகள் மற்றும் சிறப்புரிமைகளை மீறியதாகக் குற்றம் சாட்டி, பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று பாராளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பினார். ஸ்ரீதரன் ஊழல் மற்றும் நலன் முரண்பாட்டுடன் செயல்படுவதாக தசநாயக்க குற்றம் சாட்டினார். ஸ்ரீதரன் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் மீதான விசாரணையைத் தடுக்க முயன்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தசநாயக்கவின் கூற்றுப்படி, ஸ்ரீதரன் தான் உறுப்பினராக உள்ள அரசியலமைப்பு சபைக்கு முறைப்பாடு குறித்து தெரிவிக்கத் […]