2025 டிசம்பரில் ஆடை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி

இலங்கையின் ஆடை ஏற்றுமதி 2025 டிசம்பரில் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளின் தேவை அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

கூட்டு ஆடை சங்கங்களின் பேரவை (JAAF) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஏனைய நாடுகளுக்கான ஏற்றுமதி வீழ்ச்சியடைந்த போதிலும், இந்த மூன்று பிரதான சந்தைகளும் அந்த இழப்பை ஈடுசெய்து ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

2024 டிசம்பருடன் ஒப்பிடும்போது கடந்த டிசம்பரில் அமெரிகாவுக்கான ஏற்றுமதி 6.49% அதிகரித்து 178.29 மில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதியானது 6.76% அதிகரித்து 141 மில்லியன் டொலர்களாக டிசம்பரில் பதிவாகியுள்ளது.

பிரித்தானியாவுக்கான ஏற்றுமதியானது 12.95% எனும் பாரிய வளர்ச்சியுடன் 55.12 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

ஏனைய சந்தைகளுக்கான ஆடை ஏற்றுமதியானது இந்தக்காலப்பகுதியில் 4.06% குறைந்து 72.8 மில்லியன் டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, 2024 டிசம்பரை விட 2025 டிசம்பரில் ஏற்றுமதி வருமானம் 23.03 மில்லியன் டொலர்கள் அதிகமாகும்.

2025 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான முழு ஆண்டில், மொத்த ஆடை மற்றும் துணி ஏற்றுமதி 5.02 பில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

இது 2024 ஆம் ஆண்டுடன் (4.76 பில்லியன் டொலர்) ஒப்பிடும்போது 5.42% (258.18 மில்லியன் டொலர்) வளர்ச்சியாகும்.

வருடாந்த வளர்ச்சியில் ஐரோப்பிய ஒன்றியம் 12.48% உயர்வுடன் (1.58 பில்லியன் டொலர்) முன்னிலையில் உள்ளது.

அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 2.15% அதிகரித்து 1.95 பில்லியன் டொலர்களாகவும், ஐக்கிய இராச்சியத்திற்கான ஏற்றுமதி 0.74% உயர்வுடன் 679.66 மில்லியன் டொலர்களாகவும் காணப்பட்டது.

ஏனைய நாடுகளுக்கான ஏற்றுமதி 4.80% அதிகரித்து 815.78 மில்லியன் டொலர்களாகப் பதிவானது.

ஆடைத் துறையில் 5.0 பில்லியன் டொலர் இலக்கை எட்டியிருப்பது எமது ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்துவதாக கூட்டு ஆடை சங்கங்களின் பேரவை (JAAF) தெரிவித்துள்ளது.

எதிர்கால வளர்ச்சியைத் தக்கவைக்க, போட்டித்திறனை மேம்படுத்துதல், விநியோக நம்பகத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் தரமான உற்பத்தியின் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதில் இத்துறை கவனம் செலுத்தும்.

புதிய மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளை நோக்கி எமது ஏற்றுமதியை விரிவுபடுத்துவது எமது முக்கிய திட்டமாகும் என JAAF குறிப்பிட்டுள்ளது.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.