2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் நிகழ்வு

சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல்’ நிகழ்வு இன்று வியாழக்கிழமை (23) காலை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.

சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு சிறந்த பங்களிப்பு வழங்கிய கைத்தொழில்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் பாடசாலைகள் மற்றும் சமூகப் பங்களிப்பை வரவேற்கும் வகையில் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த கைத்தொழில்கள், வர்த்தகங்கள் மற்றும் சேவைக் கலாசாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் செயல்படுவதற்காக சமூகத்தை ஊக்குவித்தல் மற்றும் நிலைபேறான அபிவிருத்திக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகிய நோக்கத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையால் ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் நிகழ்வு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் நிகழ்வு , ‘ அழகான நாடு – புன்னகைக்கும் மக்கள்’ என்ற நோக்குடன் செயல்படுத்தப்படும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது விசேட அம்சமாகும். ‘சுற்றுச்சூழலுக்கு உகந்த கைத்தொழில் பிரிவு’, ‘சுற்றுச்சூழலுக்கு உகந்த அரச நிறுவன பிரிவு’, ‘சுற்றுச்சூழலுக்கு உகந்த தனியார் துறை பிரிவு ‘, ‘சுற்றுச்சூழலுக்கு உகந்த பாடசாலைகள்’, ‘புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்ட பிரிவு’, ‘சுற்றுச்சூழலுக்கு உகந்த புத்தாக்கப் பிரிவு’, ‘சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக செயல்படும் அரச சார்பற்ற நிறுவன பிரிவு’, ‘ஊடக பிரிவு’ மற்றும் ‘சமூக ஊடக பிரிவு ‘ ஆகிய 9 பிரிவுகளின் கீழ் மொத்தம் 132 விருதுகள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தங்க விருதுகளை வழங்கி வைத்தார். அதே நேரத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் மற்றும் பணிப்பாளர் நாயகம் கபில மகேஷ் ராஜபக்ஷ ஆகியோர் சுற்றுச்சூழல் நட்பு நினைவுப் பரிசொன்றை ஜனாதிபதிக்கு வழங்கினர்.

விருது வழங்கும் விழாவைத் தொடர்ந்து , விருது பெற்றவர்களுடன் குழு புகைப்படத்திலும் ஜனாதிபதி இணைந்து கொண்டார்.

ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக படபெந்தி, கைத்தொழில்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து அரசாங்கம் ஒரு பொதுவான குறிக்கோளுக்காக பாடுபடும் பட்சத்தில் வெற்றிகொள்ள முடியாத எதுவும் கிடையாது என்று கூறினார்.கைத்தொழில் மற்றும் மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்த தேவையான ஆய்வு ஆதரவு, ஊக்கம் மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டுதலை வழங்க சுற்றாடல் அமைச்சு உறுதிபூண்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது ஒரு நிறுவனம் அல்லது அமைச்சின் பொறுப்பு அல்ல, மாறாக அது ஒரு கூட்டு மற்றும் தேசிய முயற்சி என்று அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் விழா வெறுமனே வெற்றியைக் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் மட்டுமல்லாமல், பசுமையான, தூய்மையான மற்றும் நிலைபேறான நாடாக முன்னேறுவதற்கான ஒரு வாய்ப்பாகவும் மாற்றிக் கொள்ள அனைவரையும் கோரினார்.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே.ஆர். உடுவாவல ஆகியோரும் நிகழ்வில் உரையாற்றினர். சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி மற்றும் சுற்றாடல் அமைச்சு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை என்பவற்றின் சிரேஸ்ட அதிகாரிகள், விருது பெற்றவர்கள் மற்றும் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய