2025 ஆம் ஆண்டில் மத்தல விமான நிலையம் சாதனை

2025 ஆம் ஆண்டில் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் சாதனை அளவிலான விமானப் பயணிகளைக் கையாண்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2013 ஆம் ஆண்டு இந்த விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பதிவான அதிகூடிய பயணிகளின் எண்ணிக்கை இதுவாகும். அந்த வகையில், 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 140,614 பயணிகள் கையாளப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் 703 சர்வதேச விமானங்கள் மத்தல விமான நிலையத்தில் வெற்றிகரமாகக் கையாளப்பட்டுள்ளன. அத்துடன், கடந்த மூன்று ஆண்டுகளாக மத்தல விமான நிலையத்தின் பயணிகள் போக்குவரத்தில் தொடர்ச்சியான வளர்ச்சி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் மத்தல விமான நிலையத்தின் மீது செலுத்திய விசேட அவதானமே இந்தச் சாதனை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த காலங்களில், விமான நிலையத்தைச் சுற்றியுள்ள வனவிலங்கு பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் சர்வதேச விமான நிறுவனங்கள் இங்கு சேவைகளை முன்னெடுக்கத் தயக்கம் காட்டின. இப்பிரச்சினைகளுக்குப் புதிய அரசாங்கம் எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளால், 2025 இல் விமானங்களின் வருகையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மத்தல சர்வதேச விமான நிலையத்தின் மீது நம்பிக்கை வைத்து ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவை இணைக்கும் வகையில் பல விமான நிறுவனங்கள் 2025 இல் தமது சேவைகளை முன்னெடுத்துள்ளன.

அதன்படி, ரஷ்யாவின் Red Wings, பஹ்ரைன் மற்றும் பாகிஸ்தானிலிருந்து SkyUp, டுபாயிலிருந்து Fly One, உஸ்பெகிஸ்தானிலிருந்து Centrum Air மற்றும் Uzbekistan Airways, பல்கேரியாவிலிருந்து Bulgaria Air ஆகிய நிறுவனங்கள் மத்தல வரை தமது விமானச் சேவைகளை நடத்தியுள்ளன.

மேலும், பெலாரஸின் மின்ஸ்க் நகரிலிருந்து Belavia விமான சேவை 2025 ஆம் ஆண்டில் முதன்முறையாக மத்தல சர்வதேச விமான நிலையத்திற்குத் தனது பயணங்களை ஆரம்பித்தமை ஒரு விசேட அம்சமாகும்.

மத்தல சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கையின் பல சுற்றுலாத் தலங்களை இலகுவாகச் சென்றடைய முடிவதால், நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் இது ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. அத்துடன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அதிகப்படியான நெரிசலுக்கு ஒரு சிறந்த மாற்றீடாகவும் மூலோபாய ரீதியாக மத்தல விமான நிலையம் முக்கியத்துவம் பெறுகிறது.

பில்லியன் கணக்கான பொதுப்பணம் செலவிடப்பட்டு, பயன்பாடின்றி அழிந்து போகும் நிலையில் இருந்த மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம், 2025 இல் ஈட்டியுள்ள இந்த வெற்றி, விமான நிலையம் குறித்த புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.