2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) பூஜித ஜயசுந்தர தனது முந்தைய வாக்குமூலத்தில் புதிய விடயங்களைச் சேர்க்க விடுத்த கோரிக்கையை கொழும்பு விசேட மேல்நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
வழக்கின் பின்னணி:
-
குற்றச்சாட்டு: முன்கூட்டியே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும், ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதன் மூலம் கடமையைச் செய்யத் தவறியதாக (Criminal negligence of duty) பூஜித ஜயசுந்தர மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
-
நீதிமன்ற உத்தரவு: நீதியரசர் பிரியந்த லியனகே தலைமையிலான மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை வழங்கியது.
-
சாட்சியங்கள்: இந்த வழக்கின் பிரதிவாதி தரப்புச் சாட்சிகளாக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) நந்தன முனசிங்க மற்றும் கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) வருண ஜயசுந்தர ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.