சென்னை:
இந்தியாவில் இளைய தலைமுறையினரை புகையிலை பழக்கத்தில் இருந்து காக்க, 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் புகைபிடிக்கத் தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளின் முன்னுதாரணத்தைப் பின்பற்றி, இந்தியாவில் 2009-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு பிறந்தவர்கள் சிகரெட் மற்றும் இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்துவதற்கும், அவர்களுக்கு அவற்றை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவில் ஆண்டுதோறும் புகையிலையினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 23 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்தியாவில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளில் 50 சதவீதம் புகையிலையாலேயே ஏற்படுவதாகவும், 100-க்கும் மேற்பட்ட நோய்களுக்கு இதுவே தொடக்கப்புள்ளியாக இருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். எதிர்கால இந்தியாவை நோயற்ற சமூகமாக மாற்ற இத்தகைய கடுமையான சட்டங்கள் காலத்தின் கட்டாயம் என்று அன்புமணி ராமதாஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
#AnbumaniRamadoss #PMModi #TobaccoFreeIndia #HealthUpdate #PMK #CigaretteBan #PublicHealth #AntiTobacco #YoungIndia #NoSmoking #CancerPrevention #BreakingNews #TamilNaduNews #May3 #HealthPolicy #JPNadda #SocialAwareness #FutureGeneration #TobaccoKillls #MedicalNews_“`