2ஆவது மகளிர் ரி20 போட்டியிலும் இந்தியா வெற்றி

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் விசாகப்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை (23) இரவு நடைபெற்ற இரண்டாவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா இலகுவாக 7 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

ஸ்ரீ சரணியின் துல்லியமான பந்துவீச்சம் ஷபாலி வர்மாவின் ஆட்டம் இழக்காத அரைச் சதமும் இந்தியாவை இலகுவாக வெற்றி அடையச் செய்தன.

இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா 2 – 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.

இதுவரை இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற 28 மகளிர் சர்வதேச ரி20 போட்டிகளில் இந்தியா 22 – 5 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதுடன் அதன் ஆதிக்கம் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது.

முதலாவது போட்டியில் போன்றே இந்தப் போட்டியிலும் இலங்கை 130 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டதுடன் மூவர் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

முதலாவது போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய விஷ்மி குணரட்ன இன்றைய ஆட்டத்தில் முதல் ஓவரிலேயே ஓரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

இந்தப் போட்டியில் அணித் தலைவி சமரி அத்தபத்து அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய போதிலும் அளவுக்கு அதிகமாக பந்தை சுழற்றி அடிக்க முயன்று 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

இதனைத் தொடர்ந்து ஹசினி பெரேரா, ஹர்ஷித்தா சமரவிக்ரம ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் இணைப்பாட்டத்தைக் கட்டியெழுப்ப முயற்சித்தனர்.

ஆனால், அவர்கள் இருவரும் 44 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் ஹசினி பெரேரா 22 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.

மொத்த எண்ணிக்கை 104 ஓட்டங்களாக இருந்தபோது ஹர்ஷித்தா சமரவிக்ரம 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அவர்களைவிட கவிஷா டில்ஹாரி 14 ஓட்டங்களையும் கௌஷினி நுதியங்கனா 11 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்தவீச்சில் ஸ்ரீ சரணி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வைஷ்ணவி ஷர்மா 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 11.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஸ்ம்ரித்தி மந்தனா, ஷபாலி வர்மா ஆகிய இருவரும் 19 பந்துகளில் 29 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

மந்தனா இந்தப் போட்டியிலும் பிரகாசிக்கத் தவறி 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து ஷபாலி வர்மாவும் ஜெமிமா ரொட்றிகஸும் 2ஆவது விக்கெட்டில் 27 பந்துகளில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது